Wednesday 30 May 2012

நமக்குள் ஒருவன் !


நினைவுகளை விரட்டிக்கொண்டு
நீண்ட தூரம் ஒரு பயணம்
கண்ணாடி இல்லாமலும்
முன்னாடி உன் உருவம் ..!

காட்சியெல்லாம் நீயானதால்
கண்களை மூடிக்கொள்கிறேன்
விழிக்குள் விழுந்து விட்ட
துரும்பாய் உருத்தும் உன் நினைவு ..!

மவுனமாய் நானிருந்தாலும்
உள்ளிருந்துகொண்டு -சாமியாடியாய்
 உரக்க உடுக்கையடித்து
சொல்லிக்கொண்டே இருக்கிறாய் காதலை ..!

29 comments:

  1. காட்சியெல்லாம் நீயானதால் | கண்களை மூடிக்கொள்கிறேன் | விழிக்குள் விழுந்து விட்ட | துரும்பாய் உருத்தும் உன் நினைவு ..!
    /எக்ஸலண்ட் தென்றல். காதலின் அவஸ்தையையும் இனிமையையும் ஒருசேர உணர்த்திய அற்புதமான வரிகள். கவிதை படிக்கையில் மனதில் சந்தோஷ உணர்வு எழுந்தது. அருமை.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் உடன் வருகையும் உணர்வு ததும்பிய பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . நன்றி வசந்தமே .

      Delete
  2. //மவுனமாய் நானிருந்தாலும்
    உள்ளிருந்துகொண்டு -சாமியாடியாய்
    உரக்க உடுக்கையடித்து
    சொல்லிக்கொண்டே இருக்கிறாய் காதலை ..!//

    அருமையான வரிகள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

      Delete
  3. VERY NICE PA.. ITS FROM HEART.. SWEET KAVIDHAI

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

      Delete
  4. கட்சியில் நீயானால் கண்ணை மூடி மறைக்கப் போகிறீர்களா?

    ReplyDelete
  5. மன்னிக்கவும் காட்சி என்று வரவேண்டும்..

    ReplyDelete
  6. ம்ம்ம்... அருமை

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

      Delete
  7. kaathal 'rasam'-
    ithu thaano....

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

      Delete
  8. “நமக்குள் ஒருவன்“ - அருமை சசிகலா.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

      Delete
  9. இதயத்தின் படபடப்பை, உடுக்கையடியென்னும் அழகான உவமையோடு காதலின் அவஸ்தையைச் சொன்ன வரிகளில் சொக்கிப்போனேன். பாராட்டுகள் சசிகலா.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் உற்சாகமளிக்கும் அழகிய பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . நன்றி சகோதரி .

      Delete
  10. காதல் சொன்ன கவிதை பிரமாதம்க்கா. கீதாக்கா சொன்ன மாதிரி சொக்கித் தான் போனேன் நானும்.

    ReplyDelete
    Replies
    1. ரசித்துக் கருத்திட்டமைக்கு நன்றி நிரூ மா .

      Delete
  11. காதல்படுத்தும் பாடுகளை மிகவும் அழகாகவும் இனிமையாகவும் எடுத்துரைக்கிறது இந்த கவிதை

    ReplyDelete
  12. கண்ணாடியில் நிழலாட்டமாய்,
    இதயத்தில் முரசோசையாய்,
    நினைவில் அன்புக் காதலாய்,
    எழுத்தில் கனவுக் கவிதையாய்,
    காதல் கவிதை கொள்ளையழகு!

    ReplyDelete
  13. //விழிக்குள் விழுந்து விட்ட
    துரும்பாய் உருத்தும் உன் நினைவு ..!//
    அழகான நினைவு

    ReplyDelete
  14. //நினைவுகளை விரட்டிக்கொண்டு நீண்ட தூரம் ஒரு பயணம் //
    மிகவும் அற்புதம் அக்கா . நான் உருகிபோய் நின்னேன் ......

    ReplyDelete
  15. காதல் படுத்தும் பாட்டையும் காதல் வயப்பட்டவர்களின் பாட்டையும் நயமாய்ச் சொல்லும் கவிதை அருமை! பாராட்டுக்கள் சசிகலா!

    ReplyDelete
  16. வெதும்பி வரும் உணர்வுகளை
    ததும்பி வரும் வார்த்தைகளால்
    புதுப்பித்து தந்தமை அழகு சகோதரி.......

    ReplyDelete
  17. விழிக்குள் விழுந்துவிட்ட துரும்பாய் வாழ்க்கை உறுத்திக்கொண்டு சென்று கொண்டிருக்க சுழன்றடிக்கிற நினைவுகளில் காதலும் ஒன்றாய்/

    ReplyDelete
  18. காதலின் உணர்வுகளை அப்படியே
    உரித்துவிட்டீர்கள் அக்கா

    ReplyDelete
  19. //காட்சியெல்லாம் நீயானதால்
    கண்களை மூடிக்கொள்கிறேன்//

    கவிதை வரிகள் அருமை.

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  20. விழிக்குள் விழுந்து விட்ட
    துரும்பாய் உருத்தும் உன் நினைவு ..!

    இரசித்தேன்! அருமை!

    ReplyDelete