Thursday 26 April 2012

முகமூடிகள்...!!


தாயின் முன்பு
கனிவோடும்  !

தந்தையின் முன்பு
தவறுகளை மறைத்தும் !

முதலாளி முன்பு
குழைந்து  நின்றும் !

கடன் கொடுத்தவன் முன்பு
கோழையாகவும் !

மனைவி முன்பு
மாயவித்தைக் காரனாகவும் !

கணவன் முன்பு
கைதியாகவும் !

உறவுகளுக்கு முன்பு
கசப்பான அனுபவங்களை
மறந்தும் !

நண்பனே ஆனாலும்
சில நேரங்களில்
நல்லது கெட்டதை
நம்முள் புதைத்தும் !

எதிரியின் முன்பு
எந்த நேரம்
கவிழ்ப்பான் என்ற பயத்தோடும் !

மரணத்தின் முன்பு
வாழ்வை பிச்சையாய் கேட்டும் !

வாழ்வெதற்கு
என்ற கேள்விக்கு
ஜாண் வயிற்றை முன் வைத்தார்கள்
அந்த ஜாண் வயிற்றுக்கா
இத்தனை முகமுடிகள் !!


29 comments:

  1. முகமூடி
    போர்த்தாமல் இவ்வுலகில்
    வாழ்கையை நகர்த்துதல்
    கடினம்

    முகமூடி அவசியபடுகிறது தோழி

    ReplyDelete
  2. REAL FACT.. THANKS TO SAY ... NICE SASI

    ReplyDelete
  3. முக மூடி இல்லாமல் யாருமே
    இவ்வுலகில் இல்லை அக்கா
    எல்லாருமே ஏதோ ஒரு சங்தர்ப்பத்தில்
    முகமுடி அணிந்தே ஆக வேண்டிய
    கட்டாயம் அருமையாக கவி ....

    ReplyDelete
  4. முகமூடி இல்லாமல் வாழ முடியுமா? யோசிக்க வைத்த கவிதை

    ReplyDelete
  5. ஒவ்வொரு வண்ண முகமூடி நிச்சயம் தேவைபடுகிறது என்பதை நேர்த்தியாய் கூறிய உங்களுக்கு என் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. வித விதமாய்
    'நான்'கள்
    களவு போக

    எஞ்சியதொரு
    'நான்'


    மொட்டவிழ்த்துப்
    பார்த்தேன்


    நீ...

    எப்பவோ எழுதினேன்...காதலாய்...


    உங்களது நிதர்சனம்...பிடித்தது சகோதரி...

    ReplyDelete
  7. எப்போதும் முக மூடிகளைப் போட்டுப் போட்டு
    எது தன் நிஜ முகம் என அறியாது திரிபவர்களே இங்கு அதிகம்
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. எல்லோருக்கும் ஏதாவது ஒரு சமயத்தில் முகமூடி தேவைப்படத்தான் செய்கிறது.நன்று

    ReplyDelete
  9. எல்லோருக்கும் ஏதாவது ஒரு சமயத்தில் முகமூடி தேவைப்படத்தான் செய்கிறது.நன்று

    என் வலைப்பூவுக்கு வாருங்களேன்
    http://shravanan.blogspot.com/2012/04/blog-post.html

    ReplyDelete
  10. என்னை பொறுத்த வரை
    சரியோ தவறோ
    முகமூடி அணிவதை விட
    முற்றிலும் முகத்தை காட்டுவது நன்று ....
    உதாரணம்
    புகை பிடிப்பது எனக்கு பிடிக்கும்
    எனக்கு பிடிக்கும் என்றால்
    வெளிப்படையாக உண்மையான அன்பு
    இருப்பவரடத்தில் சொல்வது தவறு இல்லை ..
    இல்லாதவர் முன்பு புகை பிடிப்பதே தவறு இல்லை
    அதனால் முடிந்த வரை முகமூடி தவிர்ப்போம்
    முடியாத சூழலில் அணிவதே நன்று......

    ReplyDelete
  11. சிந்தனைச் செல்வி சசிகலாவுக்கு வாழ்த்துக்கள் கவிதை அருமை! சா இராமாநுசம்

    ReplyDelete
  12. மிகச் சரி. முகமூடிகள் அணியாமல் இருக்க முயன்றால், கிடைக்கின்ற பட்டங்கள் என்னென்வென்பதை அனுபவபூர்வமாக அறிந்தவன் நான் தென்றல்! விரும்பியோ, விரும்பாமலோ நம் வாழ்வில் இந்த முகமூடிகளை அணிந்துதானே தீர வேண்டியிருக்கிறது. அருமையான, சிந்தனையைத் தூண்டிய நற்கவிதை!

    ReplyDelete
  13. செய்தாலி...
    தங்கள் உடன் வருகையும் தெளிவு படுத்தும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  14. MOHAN...
    தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க .

    ReplyDelete
  15. Esther sabi...
    தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  16. மனசாட்சி™...
    தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  17. அரசன் சே...
    தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன். தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  18. ரெவெரி...
    தங்கள் வரிகள் கண்டு மகிழ்ந்தேன் முழுவதுமாக படிக்க வாய்ப்பு கிடைத்தால் மகிழ்வேன் . நன்றி சகோ .

    ReplyDelete
  19. Ramani...
    உண்மைதான் ஐயா தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  20. சென்னை பித்தன்...
    தங்கள் வருகையும் தெளிவுபடுத்தும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி ஐயா .

    ReplyDelete
  21. மதுரை சொக்கன்...
    தங்கள் வருகையும் தெளிவுபடுத்தும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி ஐயா .தங்கள் வலைப்பக்கம் சென்று வந்தேன் மிகவும் அருமையான பயனுள்ள பதிவு தொடருங்கள் ஐயா காத்திருக்கிறோம் .

    ReplyDelete
  22. sugamana sumaigal...
    முடியாத சூழலில் அணிவதே நன்று......
    தங்கள் வருகையும் தெளிவுபடுத்தும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  23. புலவர் சா இராமாநுசம்...
    ஐயா தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  24. புலவர் சா இராமாநுசம்...
    தங்களின் எழுதுகோளால் சிந்தனைச் செல்வி என பாராட்டியமை கண்டு மிகவும் மகிழ்ந்தேன் ஐயா தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  25. கணேஷ்...
    தங்கள் தெளிவு படுத்தும் பின்னூட்டம் கண்டு மகிழ்ந்தேன் நன்றி வசந்தமே . நிஜ முகத்தை எங்கு தான் சென்று தேடுவது .

    ReplyDelete
  26. வணக்கம்! ஆளுக்கொரு முகமூடி! வேளைக்கொரு முகமூடி! மனிதனின் வாழ்வே ஒரு மூடு மந்திரம்தான்!

    ReplyDelete
  27. முகமூடிகள் அவசியமாகிப்போன சமூகமாகிப்போனது.

    ReplyDelete
  28. ada daa!

    azhakaana sinthanai!

    ReplyDelete