Thursday 19 April 2012

காதலின்றி ஏதுமில்லை!

 
அப்பா அம்மா காதலில்
 அரங்கேறிய நாடகத்தில்
 ஆயிரமாயிரம் உயிரணுக்கள்
 ஆடியோடி போட்டியிட்டு
 இயன்றவரைப் போராடி
 இறந்ததுபோக உயிர்த்ததுவே
 ஈடில்லா குழந்தையாய்
 ஈகையெனப் பிறந்ததுகாண்!
  உள்ளத்து எண்ணமெல்லாம்
 உயிர் காதல் தேடுகையில்
 ஊனங்களும் இடவேழியில்
 ஊர்கோலம் போகிறதே!
  எனதென்ற கொள்கையிலே
 எழுந்தாடும் சுயநலங்கள்
 ஏனென்று அறியுமுன்னே
 ஏறியோடும் நினைவலைகள்!
  ஜந்தில் விளையும் மனமுண்டு
 ஜம்பதிலும் மலரா மலருமுண்டு
 ஒவ்வோர் நினைவிலும் காதலுண்டு
 ஒழித்துவைக்கும் கதைகளுண்டு.
  ஔவையின் காதல் கனவென்றால்
 ஔஷதமாய் அவர் கவிதைகளே!
  அஃகினி வார்ப்பு இரும்பென்றால்
 அஃதும் அழகு பரம் பொருளே!

  மனவியல் கற்பியல் காதல்
 களவியல், உடலியல் காதல்
 இதைவிடுத்து வேறு காதல்
 உண்டா தெரியவில்லை!
  ஜென்ம ஜென்மமாய ஜீவனுள்ள
  அனைத்துக்கும் பொதுவாக
 காதலொன்றே வாழ்கிறது
 அழிந்தாலும் வாழ்ந்தாலும்
 காதலின்றி ஏதுமில்லை!
  மண்ணுக்கும்,மரத்துக்கும்
 பெண்ணுக்கும் பொன்னுக்கும்
 வானுக்கும் கடலுக்கும்
 அறிவுக்கும் ஆசைக்கும்
 இரவுக்கும் பகலுக்கும்
 நன்மைக்கும் தீமைக்கும்
 கதைக்கும் கவிதைக்கும்
 இயற்கைக்கும் செயற்கைக்கும்
 காதல்மட்டும் பொதுவுடமை!

  பச்சை பசுமை பரப்புகளில்
 படர்ந்திருக்கும் மனக்காதல்.
  சிவப்புக் கம்பளவிரிப்புகளில்
 சிதறிவிழும் களவியல்காதல்
 இரண்டுக்கும் இடையினிலே
 ஊஞ்சலாடும் ஒருதலைக்காதல்
 ஆசிரியர் யாருமின்றி
 தானேகற்றுத் தெளியும் காதல்!

   எப்படி, எப்போது எவ்வழி
  வருமென்ற கேள்விக்கு
  யாரிடமும் பதிலில்லை.
   ஒருமுறையா! பலமுறையா!!
  அதுவும் தெரிவதில்லை.
  சொல்லி வருவதுமில்லை
 கூறிவிட்டுச் செல்வதுமில்லை
 நாமுமதை விடுவதாயில்லை
 அதுவும் நமைப் பிரிவதாயில்லை!

  இனியென்ன செய்திட-பயணத்தில்
 வருவதை எதிர்கொள்வோம்!
  காதல் சுமையென்றால்
 சுமக்கின்ற சுமைதாங்கிகளாய்!
  காதல் சுமைதாங்கியானால்
 சுமைகளாய் -நாம்.

Images thanks to goole

44 comments:

  1. மம்............ நிச்சயம் அக்கா கால் இன்றி ஏதமில்லை. உயிரனுக்களின் போராட்ட வரிகள் அருமை. இனியென்ன செய்வோம் பயணத்தில் வருவதை ஏற்று கொள்வோம். (நல்லதாய் இருந்தால் மட்டும்.)

    ReplyDelete
  2. எஸ்தர் சபி ...
    உண்மைதான் தங்கையே நல்லதை மட்டுமே எதிர்கொள்வோம் . தங்கள் உடன் வருகை கண்டு மகிழ்ந்தேன் . நன்றி சகோ .

    ReplyDelete
  3. ம்ம்ம் நல்ல கவிதை தோழி
    காதல் இன்றி ஏதும் இல்லை

    ReplyDelete
  4. குளுமையான படங்களுடன் கூடிய
    காதல் திறன் சொல்லும் கவிதை அருமையிலும் அருமை
    காதலர்களுக்காக இல்லையென்றாலும்
    கவிதைகளுக்காகவாவது காதல் வாழட்டும்
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. செய்தாலி...
    தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  6. எஸ்தர்... கால் இன்றி ஏதுமில்லையாம்மா..? Ha... Ha... சசிக்கா... எப்போது எப்படி வருமெனத் தெரியாத அந்த விஷயம் அருமையானது தானே.. நானும் அதைத் தேடாமல் இயல்பாய் வந்தால் ஏற்றுக் கொள்வதென இருக்கேன். Thanks For a Meaningful. Good Poetry!

    ReplyDelete
  7. Ramani ...
    ஐயா தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  8. நிரஞ்சனா...
    தங்கையே தந்தை தாய் அனுமதியோடு ஏற்றுக்கொள்வது நல்லது என நினைக்கிறேன் . நன்றி மா.

    ReplyDelete
  9. காதல் இல்லாமல் எதுவுமே இல்லை

    அழகாக சொன்னீர்கள்

    ReplyDelete
  10. மனசாட்சி™ ...
    தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  11. காதல் என்ற புள்ளியில்தான் உலகமே இயங்குது. அழகான கவிதை பகிர்வுக்கு நன்றி தோழி

    ReplyDelete
  12. உலகின் எல்லா ஜீவன்களையும் ஒரு முறையேனும் கடந்து செல்லும் மெல்லிய தென்றல் இந்தக காதல்! ஒன்றும் தெரியாதவனையும் கவிஞனாக்கி விடும் ரசவாதம் தெரிந்தது. என்ன அழகாய்ச் சொல்லியிருககீங்க தென்றல்! உங்களை வியந்து வியந்து அலுத்து விட்டது. எனவே, வாழ்த்துக்கள் மட்டுமே!

    ReplyDelete
  13. த.ம.4 (எங்களுக்கும் சொல்லத் தெரியும் ராஜி தங்கச்சி..! ஹி... ஹி...)

    ReplyDelete
  14. //எப்படி, எப்போது எவ்வழி
    வருமென்ற கேள்விக்கு
    யாரிடமும் பதிலில்லை.
    ஒருமுறையா! பலமுறையா!!
    அதுவும் தெரிவதில்லை.
    சொல்லி வருவதுமில்லை
    கூறிவிட்டுச் செல்வதுமில்லை
    நாமுமதை விடுவதாயில்லை
    அதுவும் நமைப் பிரிவதாயில்லை!//

    அருமையான வரிகள்

    ReplyDelete
  15. ஐயையோ....
    இங்கேயும் காதலா....?
    மறக்கலாம் என்று நினைத்தால் விட மாட்டேங்கிறீங்களே....

    ஆனால் சசிகலா... நீங்கள் சொன்னது போல சுகமான சமைதான் அது.

    ReplyDelete
  16. கவிதை அருமை சகோதரி!

    ReplyDelete
  17. கவிதை அழகு சுமைதாங்கியாய் சுமக்கும் வரை.அழகிய காட்சிகள் கவிதைக்கு ஏற்றமாதிரி .வாழ்த்துக்கள் அக்காள்.

    ReplyDelete
  18. யாரென்ன சொன்னாலும் கேட்காது, யாரோடும் மனம் பேசாது, யாழிசையும் செவியில் ஏறாது, யாதுமாகி தன்வழி அதுபோகும். யாரிதை சமைத்தானோ அவனும், யாதும் செய்ய முடியாமல்....... நன்றி காதல் இசை கவிதைக்கு!

    ReplyDelete
  19. ம்ம்ம் கவிதை !

    நல்ல வரிகள்!

    படங்கள்-
    எப்படியெல்லாம்-
    எடுக்குறீங்க!
    அருமை!

    ReplyDelete
  20. காதலைச் சுமப்பதும் ஒரு சுகம்தான்.

    ReplyDelete
  21. சுமைகளாய் நாம் இருக்க சுமை தாங்கியாய் காதல் இருக்க அது ஒரு சுகம்,ஆனால் நினைக்கையில் காதல் மட்டுமே வாழ்கை அல்ல.வாழ்க்கையில் காதலும்ஒரு அங்கமே/நல்ல கவிதை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  22. அன்பின் பரிமாற்றங்கள்
    அத்தனையும் காதலின் வடிவங்களே
    என அழகாய் சொன்னீர்கள் சகோதரி..

    ReplyDelete
  23. காதலிக்காத ஆணோ பெண்ணோ உலகில் இல்லை யாராவது நான் காதலித்ததில்லை என்று
    சொன்னால் அது உலகமாகாப் பொய்!
    கவிதை நன்று!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  24. ராஜி...
    என்ன அழகான பின்னூட்டம் தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிங்க .

    ReplyDelete
  25. கணேஷ் ...
    உலகின் எல்லா ஜீவன்களையும் ஒரு முறையேனும் கடந்து செல்லும் மெல்லிய தென்றல் இந்தக காதல்! ஒன்றும் தெரியாதவனையும் கவிஞனாக்கி விடும் ரசவாதம் தெரிந்தது. ///
    மிக மிக அழகான வரிகள் மீண்டும் மீண்டும் படித்து ரசித்தேன் வசந்தமே .

    ReplyDelete
  26. "என் ராஜபாட்டை"- ராஜா...
    அருமை என அழகாய் ரசித்தமைக்கு நன்றிங்க .

    ReplyDelete
  27. AROUNA SELVAME ...
    ஐயையோ....
    இங்கேயும் காதலா....?
    இங்கும் இல்லங்க எங்கும் காதல், எதிலும் காதல் , எல்லாவற்றிலும் காதல்.. காதல் .

    ReplyDelete
  28. koodal bala ...
    அருமை என அழகாய் ரசித்தமைக்கு நன்றிங்க .

    ReplyDelete
  29. தனிமரம் ...
    வருகை தந்து ரசித்தமைக்கு நன்றி சகோ .

    ReplyDelete
  30. D.G.V.P.SEKAR...
    வருகை தந்து ரசித்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  31. Seeni ...
    தங்களை போன்று அழகாய் எழுததான் முடியல படங்களாவது அழகாக இருக்கட்டுமே என்று தான் . நன்றிங்க .

    ReplyDelete
  32. விச்சு...
    சுமையும் சுகமாய் காதலில் மட்டுமே அழகாய் பின்னூட்டம் கண்டு மகிழ்ந்தேன் நன்றி .

    ReplyDelete
  33. விமலன்...
    கருத்துள்ள விளக்கம் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க .

    ReplyDelete
  34. மகேந்திரன் ...
    அன்பின் ஓவியமாய் காதல் அழகாய் சொன்னீங்க அண்ணா நன்றி .

    ReplyDelete
  35. புலவர் சா இராமாநுசம்...
    ஆமாம் ஐயா உதடுகள் பொய் சொன்னாலும் கண்கள் பேசிவிடும் . நன்றி ஐயா .

    ReplyDelete
  36. // ஆசிரியர் யாருமின்றி
    தானேகற்றுத் தெளியும் காதல்!//

    // இனியென்ன செய்திட-பயணத்தில்
    வருவதை எதிர்கொள்வோம்!
    காதல் சுமையென்றால்
    சுமக்கின்ற சுமைதாங்கிகளாய்!
    காதல் சுமைதாங்கியானால்
    சுமைகளாய் -நாம்.//

    அருமையான கருத்து அழகான சொல்லாட்சி. படித்தேன், இரசித்தேன்.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  37. //காதல் சுமையென்றால்
    சுமக்கின்ற சுமைதாங்கிகளாய்!
    காதல் சுமைதாங்கியானால்
    சுமைகளாய் -நாம்.//

    நல்ல வரிகள்!
    -காரஞ்சன்(சேஷ்)

    ReplyDelete
  38. புழுங்கும் மனங்கள் அவசியம் தென்றலுக்கு வந்து செல்லலாம் !!

    ReplyDelete
  39. வே.நடனசபாபதி ...
    ரசித்து பாராட்டியமைக்கு எனது மனமார்ந்த நன்றிகள் .

    ReplyDelete
  40. Seshadri e.s...
    தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . எனது மனமார்ந்த நன்றிகள் .

    ReplyDelete
  41. AMK.R.PALANIVEL...
    தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . எனது மனமார்ந்த நன்றிகள் .

    ReplyDelete