Wednesday 25 April 2012

உயிர்மூச்சின் எதிரொலியாய் ...!

உலகின் உன்னத உறவான
இல்லறத்தின் இதயமாய்
உயிர்மூச்சின் எதிரொலியாய்
கண்ணீரை துடைத்த கைகள்
உறவை மறந்து விட்டு
பிரிவெழுதிப் போகின்ற
ஊர்கோலம் கண்முன்னே !

அவள் இனிவரமாட்டாள்
நான் தான் போகவேண்டும்
கூடவே வாழ்ந்தவள்
கூடுவிட்டு ஏன் பறந்தாள்
சொல்லாமல் ஏன் பிரிந்தாள் ?
படுத்திருந்த அவள் மீது
பார்வை பதிந்தது
இன்னமும் சிரிக்கின்றாள்
எப்படி இவளால் முடிகிறது .

வாழ்ந்த காலத்தில்
வார்த்தை எதிர்த்து உதிர்த்ததில்லை
கடமையே கதியென்று
கண்ணாய் வாழ்ந்து விட்டாள்!
எது வேண்டும் கேட்ட போது
நீங்கள் போதும் என்றவள்
நிம்மதியாய் வாழ்ந்தாளா ?
அறியாத பாவியாய் நான் !

பண்ணையார் மகளை
மணம்பேசி நிற்கையிலே
ஆற்றங்கரை ஓரத்தில்
ஆலமரக் காற்றிடையில்
அன்னமாய் வந்தவளை
ஆசைமனம் தேடியோட
ஆரம்பம் காதலுடன்
தடைகளெல்லாம் தகர்த்தெறிந்து
அப்பாகாலம் போனபின்பு
அம்மாவின் அழுகையோடு
கரம்பிடித்த கோலமகள்..

கருஏந்தி மடிசுமந்து
பத்தியமிருந்து , பாதி இரவு
கண்விழித்து ...
பெண் மலரொன்று
மழலை ஈன்று
பேணிக்காத்து அவர் வாழ்வே
இவள் கனவாய்
பூச்சூடி பொட்டிட்டு
தங்கமாய் வைரமாய்
காத்து நின்று
மொட்டது மலரானதும்
மணவாளனுக்கு மாலைசூடி
சிறு பிள்ளைகள்
விளையாட்டை சீர் கொடுத்து
ரசித்துப் பார்த்து
வாழ்ந்த பெண்மை !

கட்டையாய்க் கிடக்கின்றாள்
எடுக்க நேரமாச்சி
என்கின்ற உறவினருக்கு
என்ன தெரியும் - அவர் பார்வையில்
அழுகுமுன் பிணம் எடுக்க வேண்டும் .

சாய்நாற்காலியில் வெறித்திருந்த
அவரைப் பார்த்து
அம்மாவை வழியனுப்ப
வாங்கப்பா என்றான் - மகன்
அசைவில்லை அவரினிலே
அருகில் வந்துப் பார்த்த மகள்
அலறினாள் ஐயோ என்று
எங்களுக்கு யாருமில்லை
ஏனப்பா இப்படி எங்களை அனாதையாய்
விட்டுச் சென்றீர்கள் !
பிள்ளைகள் கதறியழ
அவரும் தன் துணையோடு
அன்பென்றால் இதுதானோ ?
அறவாழ்வு மணந்தானோ
வாழ்விலும் தாழ்விலும்
இன்பத்திலும் துன்பத்திலும்
இறப்பிலும் இணையாக ...

இப்புவியில் இன்று காணும்
இல்லறங்கள் எப்படியோ ?
அத்திப் பூ பூத்தது போல்
இதைப் போன்ற உண்மைக்காதல்
சாட்சியாய் வாழ்கிறது .
வாழ்கிறோமா ? நாம் இதுபோல்
கேள்விகேட்டால் பதிலில்லை
வாழ ஆசைப்பட்டால்
அது அன்பு ..... !!

39 comments:

  1. //சாய்நாற்காலியில் வெறித்திருந்த
    அவரைப் பார்த்து
    அம்மாவை வழியனுப்ப
    வாங்கப்பா என்றான் - மகன்
    அசைவில்லை அவரினிலே
    அருகில் வந்துப் பார்த்த மகள்
    அலறினாள் ஐயோ என்று
    எங்களுக்கு யாருமில்லை
    ஏனப்பா இப்படி எங்களை அனாதையாய்
    விட்டுச் சென்றீர்கள் !
    பிள்ளைகள் கதறியழ
    அவரும் தன் துணையோடு
    அன்பென்றால் இதுதானோ ?
    அறவாழ்வு மணந்தானோ
    வாழ்விலும் தாழ்விலும்
    இன்பத்திலும் துன்பத்திலும்
    இறப்பிலும் இணையாக ...//

    உண்மையில் கண்ணீர் வந்துவிட்டது
    சொல்ல வார்த்தைகள் இல்லை தோழி

    ReplyDelete
  2. மனதை உறைய வைத்து உருக்கும் வரிகள் கவிதையில்

    ReplyDelete
  3. எப்போதோ எங்கேயோ அங்கொன்றும் இங்கொன்றுமாய் நிகழ்வுற்ற சாவிலும் பிரியாத - அன்புத் தம்பதிகளின் செய்திகளை உங்கள் கவிதை வரிகளில் நிழற் படமாய்க் காணுகின்றேன்!

    ReplyDelete
  4. அருமையான கவிதை அக்கா.. ரசித்தேன்..

    ReplyDelete
  5. அருமையான ஆக்கம் சகோதரி...

    (ஏறக்குறைய இதே நிகழ்வு என் பெரியப்பா-பெரியம்மா வாழ்விலும் நடந்தது...குழந்தைகள் சற்று பெரியவராய் இருந்தால் அது தூய காதலாய் உலகுக்கு தெரியும்..இல்லாவிட்டால் சுயநலமாய் முடிந்துவிடும்...)

    உணர்வுகளை தொட்டன வரிகள்...

    ReplyDelete
  6. சூழலை அப்படியே கண் முன் நிறுத்திப் போகிறது
    தங்கள் படைப்பு
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. // வாழ்விலும் தாழ்விலும்
    இன்பத்திலும் துன்பத்திலும்
    இறப்பிலும் இணையாக ...//

    இதுபோல் நிகழ்வு நடந்ததை கண்டிருக்கிறேன்.அன்றில் பறவைகள் போன்றதுதான் அவர்களின் காதல் போலும்.
    நல்ல படைப்பு.

    ReplyDelete
  8. என்ன இது தென்றல்! உணர்வுகளின் ஊர்வலத்தை கவிநயமிக்க வார்த்தைகளால் வெளிப்படுத்திக் கலங்க அடித்து விட்டீர்கள்..? கொடுத்து வைத்திருக்க வேண்டும் இப்படி இறப்பிலும் இணைபிரியாக் காதல் கிடைப்பதற்கு! நண்பர் சபாபதி சொன்னது போல அன்றில் பறவைகள்! மனம் நெகிழச் செய்து விட்டீர்கள் தென்றல்!

    ReplyDelete
  9. இதைப் போன்ற உண்மைக்காதல்
    சாட்சியாய் வாழ்கிறது .
    வாழ்கிறோமா ? நாம் இதுபோல்
    கேள்விகேட்டால் பதிலில்லை
    வாழ ஆசைப்பட்டால்
    அது அன்பு ..... !!

    அந்த அன்புடன் வாழ ஆசைபடுவோம்...
    அருமையான படைப்பு சசிகலா.

    ReplyDelete
  10. கவிதை நெஞ்சை தொட்டது!அதுமட்டும்ல நெஞ்சை சுட்டது! இப்படிதான் என்னவள் போய்விட்டாள்! நான் இருக்கிறேன்!இல்லை இல்லை! நாள்தோறும் இறக்கிறேன்! அதுதானே உண்மை! கவிதை அருமை! சா இராமாநுசம்

    ReplyDelete
  11. அன்றில் பறவை போல் ஒரு காதலை இலக்கியமாகி விட்டீர்கள் சசிகலா

    ReplyDelete
  12. அருமையான கவிதை நன்றி சகோதரி

    ReplyDelete
  13. solla vaarthai
    illai!

    anaalum-
    solkiren!

    naanum vaazhnthen-
    ungal vaarthaikaloda!

    ReplyDelete
  14. ஓ!...மனம் கனக்கிறது!.
    எல்லோருக்கும் இப்படி வாய்ப்பதில்லை.
    குழந்தைகள் பாவம்.
    வாழ்த்துகள் சசிகலா.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  15. //அத்திப் பூ பூத்தது போல் இதைப் போன்ற உண்மைக்காதல் சாட்சியாய் வாழ்கிறது ///

    உண்மைகாதல் அத்திப் பூ போலத்தான் மலரும்.

    மனதை நெகிழ வைத்தது உங்களது பதிவு

    ReplyDelete
  16. ஆகா அக்கா உணர்வுகள் எதிரொலிக்கும்
    கவிதை படைத்துள்ளீர்கள்
    அருமை தொடருங்கள்..............

    ReplyDelete
  17. மனதை உருக்குகிறது.

    ReplyDelete
  18. செய்தாலி...
    தங்கள் உடன் வருகையும் விரிவான பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  19. மனசாட்சி™...
    தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  20. தி.தமிழ் இளங்கோ...
    தங்கள் வருகையும் விரிவான பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  21. பி.அமல்ராஜ்...
    தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  22. ரெவெரி...
    தங்கள் கருத்து சரியானதே தங்கள் வருகையும் தெளிவு படுத்தும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  23. Ramani...
    ஐயா வணக்கம் வரிகளோடு ஒன்றி விட்டதற்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  24. வே.நடனசபாபதி...
    தங்கள் வருகையும் தெளிவு படுத்தும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  25. கணேஷ்...
    வருக வசந்தமே எல்லோருக்கும் அந்த கொடுப்பினை வாய்ப்பதில்லையே . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  26. AROUNA SELVAME...
    தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  27. புலவர் சா இராமாநுசம்...
    ஐயா வணக்கம் தங்கள் பின்னூட்டம் கண்டு நெஞ்சம் கனக்கிறது . என்ன செய்வது ஐயா தமிழுக்காக , எங்களுக்காக தாங்கள் பல்லாண்டு வாழ வேண்டுகிறேன் .

    ReplyDelete
  28. மதுரை சொக்கன்...
    ஐயா வணக்கம் தங்கள் வருகையும் எனக்கு ஆசீர்வாதமாய் அமைந்த தங்கள் வரிகளும் கண்டு மகிழ்ந்தேன் ஐயா . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி ஐயா .

    ReplyDelete
  29. அன்பை தேடி,,,அன்பு..
    தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  30. Seeni...
    தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  31. kovaikkavi...
    தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  32. Avargal Unmaigal...
    தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  33. Esther sabi...
    தங்கைக்கு வணக்கம் பின்னூட்டம் கண்டு மகிழ்ந்தேன் . நன்றி சகோ .

    ReplyDelete
  34. T.N.MURALIDHARAN...
    தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  35. பிள்ளைகள் கதறியழ
    அவரும் தன் துணையோடு
    அன்பென்றால் இதுதானோ ?
    அறவாழ்வு மணந்தானோ
    வாழ்விலும் தாழ்விலும்
    இன்பத்திலும் துன்பத்திலும்
    இறப்பிலும் இணையாக ...


    இப்புவியில் இன்று காணும்
    இல்லறங்கள் எப்படியோ ?

    -நெஞ்சைத் தொட்ட வரிகள்! பாரட்டுக்கள்!

    -காரஞ்சன்(சேஷ்)

    ReplyDelete
  36. அன்பின் உச்சத்தைக் காட்சியாய் விவரித்துவிட்டீர்கள் சசி.கொடுத்து வைத்தவர்கள்.இப்படி ஒரு அன்பு கிடைக்குமாவென்று மனம் ஏங்குகிறது !

    ReplyDelete
  37. என் வலைப்பூவுக்கு வருகை தாருங்களேன்-

    http://shravanan.blogspot.in/2012/04/blog-post.html

    ReplyDelete
  38. நல்ல உணர்வுபூர்வமான கவிதை

    ReplyDelete