Monday 23 April 2012

அழகு கண்ணாளா ...!


தாவணி போட்ட
தங்கமே வாடி
தனிச்சி பேசுவோம் ...
ஆத்துப் பக்கம்
நாமும் போவோம்
அழகே வாயேண்டி!

ஆற்று மணலில்
வீடு கட்டி
கொஞ்ச வழியில்ல
மணல் திருட  
மண்டிக்கிடக்கும் கூட்டம் பாரங்கே !!.

குளத்துப் பக்கம்
நாமும் போவோம்
குயிலே வாயேண்டி!

குளத்தை சீரமைக்கும்
பணியென்றே
கும்மியடிக்கும் கூட்டம் பாரங்கே!! .

ஏரிப்பக்கம்
நாமும் போவோம்
எழிலே வாயேண்டி !.

ஏரி நிலைத்தைஎல்லாம்
வீட்டு மனைகளாக்கி
ஏச்சிப் பிழைக்கும்
கூட்டம் பாரங்கே !!.

தென்னந்தோப்பு பக்கம்
போவோம் தேனே வாயேண்டி !.

கள்ளிறக்கும் கூட்டமஅங்கே
காத்துக் கிடக்குதே !.

மாந்தோப்பு பக்கம்
போவோம் மானே வாயேண்டி !.

மாங்காய் கடிக்கு
மல்லுக்கு நிற்கும்
சிறுவர் கூட்டம் பாரங்கே!! .

சோலைக் காட்டுப்
பக்கம்  போவோம்
சொர்ணமே வாயேண்டி! .

சோலைக் கதிர்
சுட்டுத் தின்ன
காத்து கிடக்கும்
காதலர் கூட்டம் பாரங்கே !!.

சினிமா பார்க்க
நாமும் போவோம்
சிட்டே வாயேண்டி!

சீண்டி பேசி
வம்பிழுக்கும் கூட்டம் பாரங்கே!! .

கோவில் புறா
பார்க்க போவோம்
கொஞ்சு புறாவே வாயேண்டி!

உண்டியல் திருட்டை
தடுக்க அங்கே
ஒருவருமில்லையே
உடுத்திப் போகும்
என் நகைக்கங்கே
காவல் யாரங்கே!! .

உன் கண்ணைப் பார்த்து
வந்த காதலுக்கு வழியும் சொல்லேண்டி! ...

கண்ணால் பேசி
கருத்தை கவரும்
அழகு கண்ணாளா ...
உன் சொல்லால் மயங்கி
உன் பின்னே நானும் வர
உன் பெஞ்சாதி  யாகனுமே !!

கல்யாணத்துக்கு முன்னே
வந்த காதலும் வேண்டாமே
கல்யாணத்துக்கு பின்னே
வரும் பெஞ்சாதி  வேண்டாமே
சந்நியாசம் தான் நானும் போறேன்
சற்றே வழி விடு!!.

சகலமும் தெரிஞ்சவனே
சந்நியாசம் வாங்கணும்
முன் கோபத்தையே
விடத்தெரியா உனக்கெதுக்கு
சந்நியாசமும் ...சம்சாரமும் !.









43 comments:

  1. இரண்டு இரண்டா இரண்டு தடவை இருக்கே

    ReplyDelete
  2. கவிதை நாட்டு நடப்பை பிரிச்சி தெளிவா சொல்லுது

    படைப்பாளிக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. தென்றல் கவி சசிகலா அவர்களின் பிறந்தநாள்- 24-04-2012.......வாழ்த்துவோம் கவியை!

    ReplyDelete
  4. இன்று பிறந்தநாள் காணும் சகோவுக்கு,

    மனசாட்சியின் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. மனசாட்சி ..
    தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . நாளை தான் என் பிறந்த நாள் . இரண்டு முறை வருவது எப்படி எனத் தெரியவில்லை பார்கிறேன் .

    ReplyDelete
    Replies
    1. நாளையும் வந்து பிறந்த நாள் வாழ்த்து பின்னுட்டத்தை படித்து பாருங்கள் - நீங்களே புரிந்து கொள்வீர்கள்

      Delete
  6. கல்யாணத்துக்கு முன்னே
    வந்த காதலும் வேண்டாமே
    கல்யாணத்துக்கு பின்னே
    வரும் பெஞ்சாதி வேண்டாமே
    சந்நியாசம் தான் நானும் போறேன்
    சற்றே வழி விடு

    காதல் ஏமாற்றத்தின் உச்ச கட்டம் மிக
    அருமையாக இருந்தது சசி அக்கா...

    ReplyDelete
  7. Esther sabi...
    வருக தங்கையே தங்கள் பின்னூட்டம் கண்டு மகிழ்ந்தேன் நன்றி .

    ReplyDelete
  8. //சகலமும் தெரிஞ்சவனே
    சந்நியாசம் வாங்கணும்
    முன் கோபத்தையே
    விடத்தெரியா உனக்கெதுக்கு
    சந்நியாசமும் ...சம்சாரமும் !.//

    ம்ம்ம்.... அருமை

    அட்வான்ஸ்
    பிறந்த நாள் வாழ்த்துக்கள் தோழி
    என் பிராத்தனைகளும்

    ReplyDelete
  9. செய்தாலி...
    தங்கள் வருகையும் வாழ்த்தையும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  10. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  11. உணர்வுகள ததும்பிய வரிகள் .. என் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. எளிமையான வரிகளில் அழகான கருத்துள்ள பாடல் அருமை தென்றல்! உங்களுக்கு என் இதயம் நிறைந்த அட்வான்ஸ் பிறந்ததின நல்வாழ்த்துக்கள். (நாளையும் சொல்கிறேன்) என் மின்மடல் முகவரி bganesh55@gmail.comக்கு தொடர்பு கொள்ளுங்களேன்... உங்களுக்கென ஒரு விசேஷ செய்தி வைத்துள்ளேன். நன்றி!

    ReplyDelete
  13. முன் கோபத்தையே
    விடத்தெரியா உனக்கெதுக்கு
    சந்நியாசமும் ...சம்சாரமும் !.

    அருமையான கேள்வி !

    ReplyDelete
  14. அழகான பாடல்... Adv பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  15. அரசன் சே...
    தங்கள் வருகையும் பின்னூட்டம் கண்டு மகிழ்ந்தேன் நன்றி .

    ReplyDelete
  16. கணேஷ் ....
    வருக வசந்தமே தங்கள் அழகிய பின்னூட்டம் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க .

    ReplyDelete
  17. இராஜராஜேஸ்வரி...
    தங்கள் வருகையும் பின்னூட்டம் கண்டு மகிழ்ந்தேன் நன்றி .

    ReplyDelete
  18. ரெவெரி...
    தங்கள் வருகையும் வாழ்த்தையும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  19. கிண்டல்,கேலி,காதல் கலந்த உரையாடல் கவிதை அழகு !

    மனம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்து சசி !

    ReplyDelete
  20. ஏரி நிலத்தைஎல்லாம்
    வீட்டு மனைகளாக்கி
    ஏச்சிப் பிழைக்கும்
    கூட்டம் பாரங்கே !!.

    பாடலோடு பாடலாக கருத்தையும் திணித்தது சிறப்பு..இனிய பிறந்ததின வாழ்த்துகள்..

    ReplyDelete
  21. பாடல் நன்றாக உள்ளது.
    பிறந்த நாள் வாழ்த்துக்கள் சசிகலா.

    ReplyDelete
  22. ஹேமா...
    தங்கள் வருகையும் வாழ்த்தையும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  23. மதுமதி...
    தங்கள் வருகையும் வாழ்த்தையும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  24. AROUNA SELVAME...
    தங்கள் வருகையும் வாழ்த்தையும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  25. காதலர் சந்திப்புக்கு இடையூறு செய்யும் நாட்டுப் பிரச்சனைகளோடு மனப்பிரச்சனையையும் குறிப்பிட்டு நாட்டுப்புறப் பாடல் பாணியில் நல்லதொரு கருத்தான கவி சொன்னதற்குப் பாராட்டுகள் சசிகலா.

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். எல்லா நலமும் பெற்று வளமாய் வாழ்க.

    ReplyDelete
  26. நன்றாக உள்ளது கவி வரிகள்.
    நாட்டு நடப்பை எடுத்துக் கூறும்
    வரிகள் நன்று சசிகலா.
    வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  27. கீதமஞ்சரி....
    தங்கள் வருகையும் வாழ்த்தையும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  28. kovaikkavi...
    தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  29. பிறந்த நாள் வாழ்த்துக்கள் ... அருமை...

    ReplyDelete
  30. மாலதி...
    தங்கள் வருகையும் வாழ்த்தையும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  31. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சகோ.
    அழகு கவிதை
    (சென்னையில் பிரச்சினையே இல்லை.பெரிய கடற்கரையும் ,படகுகளும்!(என் காலத்திலிருந்தே!))

    ReplyDelete
  32. உலகில் நடந்து கொடுள்ளதை கவிதையில் அழகாக சொல்லி ரசிக்க வைத்து விட்டீர்கள் சசிகலா.

    ReplyDelete
  33. பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சகோதரி...Hope you are having a blast on your birthday...

    ReplyDelete
  34. சென்னை பித்தன்...
    ஐயா சென்னையில் இப்போது காதல் காதல் போலவா இருக்கு ?
    ம்ம் . சரி அதை பற்றி நாம் பேசி ஒன்றும் ஆகாது . தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் நன்றி ஐயா .

    ReplyDelete
  35. ஸாதிகா...
    தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  36. ரெவெரி...
    தங்கள் வருகையும் வாழ்த்தையும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  37. காதலர் உரையாடலில் சமூகத்தை தோலுரித்துக் காட்டியிருப்பது அழகு.

    ReplyDelete
  38. வணக்கம்! சகோதரிக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  39. சத்ரியன்...
    தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  40. தி.தமிழ் இளங்கோ...
    தங்கள் வருகையும் வாழ்த்தையும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  41. தாமதமாக வாழ்த்துவதற்கு பொறுத்தருள்க.உளம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்!.
    முன்கோபம் சன்னியாசியிடமும் சம்சாரியிடமும் இருக்கக்கூடாது என்பதை அழகிய கவிதையில் சொல்லியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  42. azhakaana oru!
    kavithai!

    varidiyathu-
    manathai!

    ReplyDelete