Monday 30 April 2012

வாழ்க்கை பயணத்தில் ...!

   தந்தைதாய் கட்டிவைத்த,
   கூட்டுக்குள் வாழ்ந்திருக்கும்,
   குருங் குஞ்சி மகவுகளை,
   கூர்போடக் காத்திருக்கும்,
   வட்டமிடும் வல்லூராய்,
   உலாவரும் தீமைகள்,
   வெல்லுகின்ற காலமிது!

   கிராமத்துப் பள்ளியிலே,
   முப்பது ரூபாய் ஊதியத்தில்,
   ஊழியராப் பணிபுரிந்த,
   அஃரகார வாத்தியாரின்
   வாழ்க்கை பயணமிது.
   மனைவி உயிரோடில்லை,
   பெற்றதுவும் பெண்களாய.
   துன்பம் எட்டிப்பார்கும்,
   இவர்க்கு வாழ்கையே துன்பமாய்!

   வள்ளிக்கு இருபதுவயது,
   கடைசிமகள் பத்துவயதில்,
   ஆறுநாள் நீராகாரம்
   பழகிப்போன உறவாக.
   தீபாவளி துணிமணியே
   மானம்காக்கும் போர்வையாய்.
   மேல்படிப்பு கனவாக
   மேலாடை கிழிசல்போல்.
   மானம்மட்டும் பாக்கியுண்டு,
   அதுவும் கேள்வியானால்?
   ஓட்டைக் குடமேந்தி
   தண்ணீரெடுக்கப் போனவளை,
   வல்லூரொன்று வழிமறித்து,
   ஐயர் மறுவீடு அனுப்பமாட்டார்,
   வா சின்னவீடாய் அழைத்ததனை
   அப்பாவிடம் அழுது சொல்ல,
   அரண்டுபோனார் ஆசிரியர்
   தந்தையவர் இதயத்தி்ல்,
   ஆயயிரமாயிரம் மோதல்கள்,
   இயலாமையை ஒருபக்கம்,
   வேதனை தொடர்கதையாய்.
   விட்டுச்சென்ற மனையாளின்
   புகைப்படம் வெறித்துவிட்டு,
   குடையெடுத்துப் புறப்பட்டார்
   விஷம்கொஞ்சம் வாங்கிவர!
   கதவைத்தாள் போட்டுவிட்டு,
   கண்ணீரோடு பிள்ளைகளை,
   கட்டியணைத்து முத்தமிட்டு,
   அமிர்தம்மான விஷந்தன்னை,
   குடிக்க எடுத்த வேளையிலே
   'சார்' எனறசப்தம்,கை நடுங்க,
   கதவைத்திறந்தவர்-போலீ்ஸ்
   கண்டு உறைந்துபோனார்!

  "என்னைத் தெரியலையா?
    நான்தான் சார் முகுந்தன்,
   படிக்க வைச்ச நீங்கள்தான்
   என்தெய்வம் என்றானவன்!
   வள்ளிக்குப் புரிந்தது,
   மாடு மேய்க்கும் கந்தனின்
   மகனாய் ஒதுங்கிநின்று,
   பரிதாபமாய்ப் பார்துநிற்கும்
   கீழ்ஜாதி...ஒதுக்கப்பட்டவெனறு!
   இன்ஸ்பெக்டர் முகுந்தன்,
   இதேகிராமத்தில்....சார்
   கேட்டா கோபிக்கமாட்டீங்கே,
   உங்கபொண்ணு வள்ளியை
   திருமணம் கேட்கவந்தேன்.
   சட்டென்று ஏதோஒன்று,
   இதயத்தை அடைப்பதைப்போல்,
   அவன்காலைக்கட்டி கதறி,
   விடமனம் துடிக்க-கைகூப்பி,
   உள்ளே வாப்பா என்றார்,
   வீட்டுக்கு ஒளியாய்-வள்ளிக்கு
  காவலனாய் நுழைந்தானவன்! 

23 comments:

  1. கதையை கவிதை போல் சொல்லியுள்ளீர்கள் அருமை அக்கா..

    ReplyDelete
  2. ஜ நான் இன்னைக்கு மதல் கருத்துரையிட்டுட்டனே

    ReplyDelete
  3. நல்ல கதை

    வறுமையும் பின்
    சோகமும் அவமானமும்
    வாழ்வதற்காக சாதி உடைத்ததும்
    இறுதி நல் சுபமும் ....அருமை

    ReplyDelete
  4. க(வி)தை அருமை. கவிதையில் கதையை சொன்னது மிக அருமை. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. மனம் சுத்தமாய் வெள்ளையாய் இருந்தால் கீழ் சாதியென்ன... மேல் சாதியென்ன... மனிதன் என்ற தகுதியை விட உயர்ந்தது ஒன்றுண்டா தென்றல்? அருமையான சிந்தனையை கதையில் விதைத்து, அதையும் கவிதையாய்ச் சொன்ன திறம் கண்டு வியந்து நிற்கிறேன். வாழ்க நின் க(வி)தைத் திறம்!

    ReplyDelete
  6. மிகவும் அருமை .. எழுத்துநடை அருமை

    ReplyDelete
  7. கதை-கவிதை ~ நல்லதாய் முடிந்து நிற்கும் நல்லதொரு ஆக்கம் சகோதரி...

    ReplyDelete
  8. கருத்தும் கவிதை நடையும் மிக மிக அருமை
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. கவிதை கதை மனதை ஈர்த்தது
    - வர வர விறுவிறுப்பாகவே இருக்கு,
    தொடரட்டும் சகோ

    ReplyDelete
  10. வழக்கம் போல உங்களது நடை மிக அழககாக உள்ளதும் மனதை தொட்டு சென்றது. மேல் சாதி கிழ் சாதி என்று இன்னும் இருந்தாலும் முகுந்தன் போல ஆட்கள் இருப்பது மிக அரிதாகதான் உள்ளது. வாழ்த்துக்கள் &பாராட்டுகள் அது போல இருக்கும் ஆட்களுக்கும் ,அந்த மாதிரி நல்ல செய்திகளை விதைகளை போல வெளியிட்டு வ்ரும் உங்களுக்கும்.

    வாழ்க வலமுடன்...உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. கவிதைக்குள் கருத்தாழமிக்க கதை ரொம்ப அருமை! வாழ்த்துகள்!

    ReplyDelete
  12. வணக்கம் சகோதரி
    நலமா?
    நீண்ட இடைவெளி..
    விடுமுறைக்கு இந்தியா வந்துள்ளதால்
    வலையுகம் பக்கம் வர முடியவில்லை..

    கவிதையில் ஒரு கதை..
    அருமையான முயற்சி..
    நல்லா இருக்குது..
    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  13. வீட்டுக்கு ஒளியாய்-வள்ளிக்கு
    காவலனாய் நுழைந்தானவன்!

    தென்றலாய் வந்தவனுக்கு வாழ்த்துகள்..

    ReplyDelete
  14. வேதனைகளை வெளிப்படுத்திய கவிதை!
    -காரஞ்சன்(சேஷ்)

    ReplyDelete
  15. கவிதையிலேயே ஒரு அருமையான கதை சொல்லிட்டீங்க. புதுமையான முயற்சி சசி. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  16. வணக்கம்!
    // உலாவரும் தீமைகள்,
    வெல்லுகின்ற காலமிது! //

    உண்மைதான். ” மக்களே போல்வர் கயவர் “ என்றார் வள்ளுவர்

    ReplyDelete
  17. நல்ல புரட்சிக் கவிதைக் கதை. வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  18. தங்களின் பதிவை இன்று வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். நேரமிருப்பின் வந்து பார்த்துக் கருத்துச் சொல்லும்படி வேண்டுகிறேன்.

    http://blogintamil.blogspot.in/2012/05/blog-post.html

    ReplyDelete
  19. கதையல்ல இது!
    காவியக் கதை!
    இதயத்து வரைந்திட்ட
    எழிலோவியம! இதை,
    உதயத்து கதிர்போல
    உள்ளத்து ஒளிசால
    கதையாக்கி கவிவார்த்த
    கவிவாழ்க! வழ்கவே!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  20. கதை கவி வடிவில்... அருமை....

    கதையின் கருத்து எதார்த்தம்...

    ReplyDelete
  21. அருமையான பதிப்பு சசிகலா.

    ReplyDelete
  22. arumai !
    sakothari!

    visa paattil thirakkaamal-
    ponathukku !

    neengal azhakaa-
    sonnathukku mikka nantri!

    ReplyDelete