Friday 23 March 2012

வசந்த வாழ்வு வாழ்வதற்கு

சொர்க்கத்தில் நிச்சயித்த
திருமணமும் சோகத்தீயில்
மாய்ந்தழியும் நிலை ஏனோ ?
வசந்தமாயத் தொடங்கிய
காதல் கல்யாணங்களும்,
நீதிமன்றத்தில் நிற்பதும் ஏனோ ?

புரிதல் இல்லாத உறவுகள்,
நிறைவில்லா மனங்கள்
பூசலாய் முடிவுரைகள்!
வியாபாரத்தில் போட்டி,
வீடுகளில் அதற்குமேலாய்
தொடரும் சண்டைகளால்,
முடிவுகள் முன்னுரையில்!
நகமும் சதையுமென,
கண்ணின் இமைகளாய்,
உயிரோடுஉயிராக
வாழ்ந்த உறவுகளே ,
பிரியும் நிலை ஏனோ ?
ஆணும் , பெண்ணும்
சமமென்று வாழும்நிலை
மலர்ந்த பின்னும்



தீராத சண்டைகள்
ஓயாத ஒழுக்கு போல
சமத்துவத்தின் பாதை இங்கே
சாக்கடையாய் போகுமெனில்
வருங்கால சந்ததிகள்
தடம் புரளுமே ..
வழிகாட்டும் உறவுகளே
தடம் மாறிக் கண்ணீரில்
சம உரிமைப் போராட்டமாய்
இல்லமெங்கும் யுத்தங்கள்
இன்றைய சமூக மாற்றம்
பொறாமையின் விளைநிலமாய்
அடிமை விலங்கொடியும நேரம் ,
எதிராய் எழும்பிநின்று,
தலைவிரித்தாடும்,’ஆதிக்கவெறி’
இல்லமெனும் சரணாலயத்தில்
அன்பு செடி பட்டுப்போய், 
அடிமை சாசனம் எழுதிவிட,
இரண்டு ஜோடிப்பறவைகளும்,
போட்டி போட்டு மடிகின்ற,
புயல்வாழ்வு தேவைதானா?
போட்டா போட்டியென,
விட்டுக் கொடுக்க
மனமில்லாதவர்கள்
விட்டுப் பிரிய சம்மதப்பட்டு
பட்டமரமாய் போகலாமா?


வாழும் காலம் கொஞ்சம்தான்
இடையில் ஏன் பிரிவினைகள்! 
வசந்த வாழ்வு வாழ்வதற்கு
விட்டுக் கொடுத்தால் தவறில்லை!

39 comments:

  1. ஈகோவைத் துறந்தால் வசநத வாழ்வு கிட்டிவிடும்தான். அருமையான கவிதை. மிக ரசித்தேன். நன்று.

    ReplyDelete
  2. புரிதல், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இல்லாமையே குடும்ப உறவுகள் சிதைவதற்கு காரணம். பதிவு அருமை...

    ReplyDelete
  3. கணேஷ் ..
    வருக வசந்தமே தங்கள் உடன் வருகை கண்டு மகிழ்ந்தேன் . எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  4. S.கௌதம்..
    உணருவார்களா ? தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  5. வணக்கம்! முட்டிக் கொண்டு மடிபவர்களிடம், விட்டுக் கொடுக்கும் பண்பு இல்லாததுதான் இத்தனைக்கும் காரணம் என்பதனை அருமையாய்ச் சொல்லி விட்டீர்கள்

    ReplyDelete
  6. sariyaana seruppadi!

    purithal illaatha thampathikalukku!

    arumai!

    ReplyDelete
  7. இங்கே யார் முதலில் விட்டுக்கொடுப்பது
    என்ற ஈகோ தான் வசந்தத்தை வதக்கி விடுகிறது சசிகலா.

    ReplyDelete
  8. புரிதல்விட்டுக் கொடுத்தல் இதெல்லாம் இல்வாழ்க்கையில் முக்கியம்.இல்லையெனில் இல்லாத வாழ்க்கைதான்!
    அருமை சகோ!

    ReplyDelete
  9. விட்டுகொடுத்தல் இல்லாத வாழ்க்கையில் நிம்மதி ஏது??
    நல்ல கவிதை சசிகலா அவர்களே ..

    ReplyDelete
  10. இன்றைய காலப்போக்கில், அவசர உலகத்தில் நம்மைப்பற்றி, நம்மை சுற்றியுள்ளவர்களைப் பற்றி சிந்திக்க சிறிது நேரம் ஒதுக்கினாலே அனைத்தும் சரியாகும். எனவே வாழ்கையை அனுபவிக்கப் பழகுவோம்
    கவிதை வரிகள் அனைத்தும் உண்மையான அனுபவமாய் உணர்ந்து படித்தேன் வாழ்த்துக்கள் சசிகலா..

    ReplyDelete
  11. புரிதலும்
    விட்டுக் கொடுத்தலும்
    சகிப்புத்தன்மையும்
    இல்லற வாழ்க்கையிலிருந்து வெளியேறுகையில்
    உடைகிறது பந்தங்கள்

    நல்ல கவிதை தோழி

    ReplyDelete
  12. தி.தமிழ் இளங்கோ ...
    தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  13. Seeni ....
    தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  14. AROUNA SELVAME ...
    தங்கள் கருத்து உண்மையே .தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  15. சென்னை பித்தன் ....
    இல்லாத வாழ்வில் எதைத் தேடுகிறார்கள் .தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  16. Vishnu...
    விட்டுக்கொடுக்காததே நிம்மதி என நினைக்கும் மிருகங்கள் .தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  17. saravanandls ..
    சிந்திக்க மறுக்கும் முகங்கள் . நன்றி சகோ .

    ReplyDelete
  18. செய்தாலி ..
    தங்கள் பின்னூட்டம் மிகவும் சரியான உண்மையே .
    தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  19. புரிதல் இல்லாத வாழ்க்கை. 35 வருடம் சேர்ந்து வாழ்ந்தவர்களிடம் கூட அந்தப் புரிதல் வருவதில்லை.

    ReplyDelete
  20. விச்சு..
    யாரவது ஒருத்தர் புரிஞ்சிகிட்டாலே போதுமே .
    தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  21. இன்றைய நிலையில் அவசியம்
    அனைவரும் மனதில் ஏற்றுக் கொள்ளவேண்டிய கருத்தை
    அழகிய கவியாகத் தந்தமைக்கு நன்றி
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  22. // வாழும் காலம் கொஞ்சம்தான்
    இடையில் ஏன் பிரிவினைகள்!
    வசந்த வாழ்வு வாழ்வதற்கு
    விட்டுக் கொடுத்தால் தவறில்லை!//

    இக்கருத்தை உள்வாங்கி நடந்தார்
    விட்டுப்போகாது உறவுகள் வாழ்வும் கெட்டுப்போகாது

    சா இராமாநுசம்

    ReplyDelete
  23. வசந்த வாழ்வுகள் வாழ விட்டுக்கொடுப்பது இங்கு நிறையவே குறைந்து போனது.ஈகோவும்,நமது கலாச்சார பதிவும் செய்யும் வேலைகள் இதற்கு முழு முதற்காரணமாய்/நல்ல பதிவு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  24. சில குடும்பங்களில் மனம் விட்டுக் கதைத்துக்கொள்வதில்லை.இதுவே பிரச்சனைக்கு அடிப்படை.பிரிவு வரைக்கும் கொண்டு வந்து விட்டுவிடும் !

    ReplyDelete
  25. வணக்கம் !
    அழகிய நடையில்
    இனிய வார்த்தைகளில்
    அருமையான கவிதை !

    கவிஞிக்கு பாராட்டுகள் !!

    ReplyDelete
  26. வசந்த வாழ்வு வாழ்வதற்கு நீங்கள் சொன்ன கருத்து கவி மிக்க நன்று அக்கா
    எளிய நடையில் விளங்க கூடியாதாக இருந்தது.

    ReplyDelete
  27. வாழ்க்கையை எளிமையாகவும் இன்பமாகவும் வாழும் வழிமுறையைக் கற்றுத்தரும் கவிதைக்குப் பாராட்டுகள் தென்றல்.

    ReplyDelete
  28. இந்த வேகமான உலகத்தில் இருவரும் மனம் விட்டு பேச நேரம் கிடைப்பதில்லை. ஆனால் பல பதிவுகளை படித்து கருத்துக்களை இட நேரம் மட்டும் நமக்கு கிடைக்கிறது. அதனால் தம்பதிகள் வலைத்தளம் ஆர்ம்பித்து பதிவுகள் மூலம் தம் கருத்துகளை பறிமாறி கொள்ள வேண்டியதுதான்.

    உங்கள் கவிதையின் கருத்துக்கள் சிந்திக்க தூண்டுகின்றன. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  29. Ramani ...
    தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் ஐயா. தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  30. புலவர் சா இராமாநுசம் ...
    ஐயா தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  31. விமலன்..
    தங்கள் கருத்து மிகவும் சரியானதே சிந்திப்பார்களா ? தங்களுக்கு எனது நனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  32. ஹேமா..
    ஆமாங்க ஹேமா பேசவும் கூலி கொடுக்கணுமோ ?
    தங்களுக்கு எனது நனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  33. AMK.R.PALANIVEL ..
    தங்களுக்கு எனது நனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  34. Esther sabi..
    தங்கையே தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் .

    ReplyDelete
  35. கீதமஞ்சரி..
    தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  36. Avargal Unmaigal ..
    உண்மைதாங்க தங்கள் கருத்து யோசிக்கவேண்டிய செய்தியே .தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  37. விட்டுக் கொடுக்க
    மனமில்லாதவர்கள்
    விட்டுப் பிரிய சம்மதப்பட்டு
    பட்டமரமாய் போகலாமா?
    -அருமையான வரிகள்
    ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு, விட்டுக்கொடுத்து வாழ்வதுதான் வாழ்க்கை!
    நன்றி
    -காரஞ்சன்(சேஷ்)

    ReplyDelete
  38. அன்பைப்பகிர்ந்து விட்டுக் கொடுத்துப் போனால் பிரிவு தேவையில்லை என அழகாய்ச் சொல்லிய கவிதை அதற்கு ஏற்ற காட்சிப்படங்கள்.

    ReplyDelete