Friday 2 March 2012

முத்தத்தின் ஈரம்

எண்ணக்குவியல்களுக்கிடையே
கனவுப் போர்வை விளக்கி
காதோரம் உன்
சிணுங்கல்கள் உரச ...
முகம் கழுவி
கண்ணாடியில் உன் முகம்
தேடித் தேடி
தோற்றுப் போனேன் ...
கனவல்லவே
நிஜம் உணர்த்தியது
வழியனுப்ப வந்தவளை
கதவிடுக்கில்
வளைக்கரம் பிடித்திழுத்து
நீ தந்து போன முத்தத்தின் ஈரம் ....!

23 comments:

  1. அகப்பொருள் பா அருமைங்க. காதல் ரசத்தை நுகர்ந்து ரசித்தேன். நன்று.

    ReplyDelete
  2. வழியனுப்ப வந்தவளை
    கதவிடுக்கில்
    வளைக்கரம் பிடித்திழுத்து
    நீ தந்து போன முத்தத்தின் ஈரம் ....!

    குறுந்தொகையான நறுந்தொகைப் பாடல்
    இனிமை!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  3. கனவுக்கும் நினவுக்கும் இடையிலான
    குழப்பமும் நன்று
    குழப்பம் தீர்க்கும் ஆதாரமும்
    மிக மிக நன்றி
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. செம ரொமான்ஸ்...

    ReplyDelete
  5. காதலின் ஈரம் கவிதைகளில்! :):):)

    ReplyDelete
  6. ஈரமான வரிகள் ! இனிமையான கவிதை !
    கண்ணாடியில் உன் முகம் தேடினேன்....அருமை !!
    பாராட்டுகள் பல..!

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. இனிமைகள் கொஞ்சும் அழகிய கவி...........

    ReplyDelete
  9. நல்ல கவிதை,ஈரம் காயாத வடுக்களாய் தங்கிவிட்ட நினைவுகளில் பயணிக்கிற வாழ்க்கையில் முத்ததின் ஈரமும்/

    ReplyDelete
  10. ஆஹா....காதல் இனிக்கிறதே. நனைந்தேன் தேன் மழையில்..நன்றி! தாமத வருகைக்கு மன்னிக்க.

    ReplyDelete
  11. அப்புறம் சொல்ல மறந்துட்டேன். அந்தப் படம் எங்கருந்து எடுத்திங்க? அழகோ அழகு!

    ReplyDelete
  12. adadaaaa!

    vaikaloda payanikka vaiththu vitteenga'

    ReplyDelete
  13. முத்தத்தை பற்றிய நல்ல விளக்கம். நன்றி.

    ReplyDelete
  14. காற்றின் ஈரப்பதம்
    தருவித்து சென்ற ஈர
    இதழ் ஒத்தடங்களின் நினைவுகளை

    நேசமாய் சொல்லிப்போகும் கவி அருமை சகோதரி.

    ReplyDelete
  15. சசி...உங்கள் பக்கத்தில் முத்தச் சத்தம்.அதிசயமும் சந்தோஷமும் !

    ReplyDelete
  16. திருட்டு முத்தத்தைப் பற்றிய அழகான கவிதை

    ReplyDelete
  17. ஈரம் காயாத அழகிய
    வரிகள்..!:)

    ReplyDelete
  18. கணினி கோளாறு காரணமாக வருகை தந்த நண்பர்களுக்கு உடனுக்குடன் நன்றி சொல்ல இயலவில்லை . அணைத்து அன்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் .

    ReplyDelete
  19. அப்பப்பா ரெம்ப ஈரமாயிருக்கே!....ம்..ம்...
    நன்று வாழ்த்துகள். (போர்வை விலக்கி)- ல- கரம்.
    வேதா. இலங்காதிலகம்.
    http://kovaikkavi.wordpress.com

    ReplyDelete