Wednesday 7 March 2012

புதுவாழ்வு மலர்ந்திடவே வாழ்த்துகிறேன்.


மகளிர்காய் ஒருதினத்தை
ஒதுக்கிவிட்டோம் கருணையோடு
மங்கையரும் கொணடாடி
மகிழும் நிலைகண்டேன்
மலராய் மலர்ந்திங்கு
காயாய்,கனியாய்,
விதையாய் வீழ்ந்தாலும்,
மரணம்வரை அடிமைகளாய்
மாய்க்கும் சட்டம் மாறவில்லை!
கதியில்லை என்பதனால்
காயப்படுத்தும் நிலைவேண்டாம்
கரைசேர விட்டுவிட்டால்
அதுவேதான் மகளிர்குசமநீதி! 
கற்றவரும்,மற்றவரும்
கதைசொல்லித் திரிபவரும்
கண்பார்த்தல் நன்றென்பேன்
கனவுகள் பலிக்கட்டும்.
எல்லாநாளும் ஆணுக்கு
அதிலொருநாள் பெண்ணுக்கு
எட்டி உதைக்கும் பசுவுக்கு
ஒருநாள் மட்டும் ‘பொங்கல்போல்!
ஆணைமட்டும் சொல்வதனால்
பயனில்லை கண்டேன்
ஆண்டவன் படைப்பில்கூட
இவர் ஈனப் பிறவிகளே!
ஆலயம் இவரென்போம்
அர்ச்சனைகள் செய்திடுவோம்
ஆடுகளை நேர்வதுபோல்
நேர்ந்து வெட்டுகிறோம்.
பெண்ணென்ற பேதமைகள்
ஒழியும் நாள் மலரவேண்டும்
பெருமைகளில் இவர் பங்கை
நேர்மையாய் வழங்க வேண்டும்.
பெறுவதற்கு பெண்னென்ற
அவலம் மாறவேண்டும்,
பெற்றவளும் பெண்ணென்ற
உணர்வு வாழவேண்டும்.
வாழ்வைப்பட்டமரமாக்கி
வாழ்த்துரைத்து பயனில்லை,
வார்த்தையால் கொல்கின்ற,
மனப்பான்மை சரியில்லை.
வாசமணம் வீசுகின்ற,
புதுவாழ்வு மலர்ந்திடவே,
வாழ்த்துகிறேன்,கோர்த்தெடுத்த
கவிதை மாலைசூடி!!

27 comments:

  1. கால மாற்றம் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கிறது.பாரதியின் புதுமைப்பெண்களாகிய நீங்களெல்லாம் ஒரு புது யுகம் படைக்கப் புறப்பட்டு விட்டீர்கள்.வாழ்த்துகள்

    ReplyDelete
  2. உடன் வருகை தந்து வாழ்த்தியமைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  3. பெண்களை மதித்துப் போற்றுகின்ற வீடுகளும் மனிதர்களும் இருககத்தான் செய்கிறார்கள் தென்றல். மகளிருக்கென்று ஒரு தினம் கொண்டாடுவதை விடுத்து, ஆண்டு முழுவதுமே மகளிருக்கான தினம் என்றாலும் எனக்கு முழு உடன்பாடுதான். நண்பர் செ.பி. சொன்னது போல பாரதி கண்ட புதுமைப் பெண்கள் எண்ணிக்கையில் அதிகமாகி விட்டால் எல்லாம் மாறிவிடுமன்றோ!

    ReplyDelete
  4. கணேஷ் ...
    வருக வசந்தமே பேச்சிலும் , எழுத்திலும் இருக்கும் பெண்ணுரிமை நடைமுறையில் இன்னும் இல்லை என்பதே என் கருத்து. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் .

    ReplyDelete
  5. மகளிர் தினம் அன்று அருமையான கவிதையை வெளியிட்டுள்ளீர்கள். "எல்லாநாளும் ஆணுக்கு
    அதிலொருநாள் பெண்ணுக்கு" வார்த்தைகள் சுரீரென்று உள்ளன. ஆனால் நிலைமை இப்போது நிறையவே மாறிவிட்டது. ஆண்கள்தான் பாவம் என்ற நிலைமை வந்துகொண்டே இருக்கிறது.

    ReplyDelete
  6. வணக்கம்! தெரிந்தெடுத்த சொற்களால் நறுக்கு தெரித்தாற் போன்ற உமது கவிதை வரிகள்! அருமை! அனைவருக்கும் எனது மகளிர் தின வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. விச்சு
    எல்லா இடத்திலும் அப்படி இல்லைங்க நண்பரே . தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் .

    ReplyDelete
  8. thirumathi bs sridhar
    தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் .

    ReplyDelete
  9. தி.தமிழ் இளங்கோ..
    தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் .

    ReplyDelete
  10. காலம் தன் கதவை திறக்கும் ஓர் நாள் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும்... சிறப்பான கவி மகளிர் தின வாழ்த்துக்கள் அக்கா

    ReplyDelete
  11. எல்லாநாளும் ஆணுக்கு
    அதிலொருநாள் பெண்ணுக்கு
    எட்டி உதைக்கும் பசுவுக்கு
    ஒருநாள் மட்டும் ‘பொங்கல்போல்!
    ஆணைமட்டும் சொல்வதனால்
    பயனில்லை கண்டேன்


    நல்ல சாட்டையடியான வார்த்தைகள்.அருமை கவிதை வாழ்த்துகள்.மகளிர்தின நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  12. வாழ்த்துக்கள்..........அருமையான வரிகள்.
    த.ம 4

    ReplyDelete
  13. Esther sabi ..
    வாத்துக்கள் தங்கையே .

    ReplyDelete
  14. DhanaSekaran .S
    தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் .

    ReplyDelete
  15. இடி முழக்கம் ..
    தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  16. இன்னும் நடைமுறையில் பெண் சுதந்திரம்

    முழுமையடையவில்லை என்பதை

    ஏற்றுக்கொள்கிறேன்...

    என்று ஒரு பெண் போகப் பொருளாய்

    பார்க்கப்படுவது நிறுத்தப்படுகிறதோ

    அன்று தான்

    முழு சுதந்திரம்...

    ReplyDelete
  17. பெண்மை இப்போது விழித்தெழ ஆரம்பித்துவிட்டது..மாற்றம் காணும் சமூகம்.மகளிர் தின வாழ்த்துகள்.

    ReplyDelete
  18. ஆண்டு முழுதும் மறந்துவிட்டு ஒருநாள் மகளிர் தினம் கொண்டாடுவதில் எனக்கு உடன்பாடில்லை. மகளிர் தினம் கொண்டாடவேண்டிய அவசியம் இல்லாத நிலை வரவேண்டும். அதுவே என் அவா. நல்ல கவிதை. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  19. உள்ளக் குமுறலை உரைத்த கவிதை-பெண்மை
    உரிமைக் குரலை ஒலிக்கும் கவிதை
    தெள்ளத் தெளிய தீந்தமிழ் கவிதை-கொம்புத்
    தேனென இனிக்கும் உயர்ந்த கவிதை!

    வாழ்த்துக்கள்!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  20. மகேந்திரன்
    அண்ணா தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  21. மதுமதி..
    தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  22. வே.நடனசபாபதி..
    தங்கள் கருத்து உண்மையே . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி நண்பரே .

    ReplyDelete
  23. புலவர் சா இராமாநுசம்....
    தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் ஐயா.தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  24. //பெண்ணென்ற பேதமைகள்
    ஒழியும் நாள் மலரவேண்டும்
    பெருமைகளில் இவர் பங்கை
    நேர்மையாய் வழங்க வேண்டும்.
    பெறுவதற்கு பெண்னென்ற
    அவலம் மாறவேண்டும், //

    vaalththukkal

    ReplyDelete
  25. adada !
    nalla kavithai!

    penmai "entra thalaippil irandunaalaikku mun-
    naan ezhuthiyathai padiththu paaringal!
    vaazhthukkal !

    ReplyDelete
  26. அருமை ! பாராட்டுகள் !!

    ReplyDelete