Monday 5 March 2012

ஒன்றுபட்டு எழுந்திடுவோம்

ஈழத் தமிழர்களின்
வீர முழக்கங்களை
எழுத்தாய் எழுதிப்
பாட்டாய் ஒலித்து விட்டு ,
சுயமெனும் திரைக்குள்
உங்கள் முகங்களையும்
திணிப்பதும்,மறைப்பதும் ஏனோ .....?
ஐந்தறிவுள்ள ஜீவனும் ,
தம் இனம்காக்கப்
போராடும்போதினில்,
தமிழினம் தாக்கப்படுவது
தெரிந்தும், உணர்சிகளை
உறங்கவிட்டு உறக்கத்தில்
இருப்பதும் ஏனோ ....?
இமயம் சென்று வென்று,
கல்லெடுத்த தமிழன்,
உலகமாவீரனை எதிர்த்தமிழன்,
முறம்கொண்டு புலியை,
விரட்டியடித்த தமிழ்த்தாய்,
தமிழா முன்னோரின் வீரம்,
முந்தானையில் மடிந்ததோ?
தமிழ் மண்ணில்
விரக்தி மட்டுமே
விதைக்கப்படுகிறது .
புதைக்கப்பட்ட
தமிழினங்களுக்காய்
வாழ,வழிகாட்ட,வாழவைக்க,
எவருமில்லைப் புவியில்.
அன்புமட்டும் ஆள்வதற்கு
ஆசையில்லா தலைவன் தேவை,
இனியவிடியல் மலர்வதற்கு
 ஈழம் அமைதி காண்பதற்கு
உதிரபந்தம் வாழ்வதற்கு
ஊமைகனவு ஜெயிப்பதற்கு...
எண்ணத்தில் தாய்மையோடு
தமிழர் கை கோர்க்க வேண்டும்
 அக்கினிப்போர் முடிவதற்கு
அம்மாவாசை அகல்வதற்கு
விடியல் பூ மலர்வதற்கு
தமிழினம் வாழ்வதற்கு
தமிழன் தரணி ஆள்வதற்கு
ஒன்றுபட்டு எழுந்திடுவோம்
சரித்திரம் நாமாவோம்!
தமிழ்வாழ,தமிழினம் வளர,
வேற்றுமைக் களைந்திடுவோம்
 ஓரணியாய்த் திரண்டெழுவோம்”.

22 comments:

  1. ஏன் தமிழினம் சில விஷயங்களில் ஒன்றுபட மறுக்கிறது என்பதுதான் விடை தெரியாக் கேள்வி தென்றல். விடியல் பூ மலர்வதற்காகவேனும் உணர்ச்சி பெற்றால் நன்று. குமுறல்களை அழகுத் தமிழ் கொண்டு பகிர்ந்துள்ளமை நன்று!

    ReplyDelete
  2. வணக்கம் சசி !
    தமிழனின் இன உணர்வு மழுங்கடிக்கப்பட்டு வருகிறது. எவ்வளவுதான் உறக்கக்கூவினாலும், உறக்கம் கலைப்பவர்கள் இங்கே குறைவு ! நாடு, இனம், மொழிக்கு அப்பாற் பட்டவர்களுக்கு இருக்கும் அக்கறை, நமக்கு இருக்கிறதா ?.... எனினும், கவிதைக்கு என்னுடைய பாராட்டுகள் !

    ReplyDelete
  3. உண்மை நிலையை உணர்த்தி... உணர்வோடு நாம் செய்யவேண்டிதையும் இடித்துரைக்கும் உணர்வுள்ள வரிகள்...

    வாழ்த்துக்கள் அக்கா....

    ReplyDelete
  4. வணக்கம் அக்கா
    பல புலம் பெயர் தமிழர்கள் ஏனோ தானோ என்று வாழ்கை நடத்துகிறார்களே, தாம் தமிழர் என்பதை கூட மறந்து சில வேளைகளில் செயல்ப்படுவது வேதனை தருகிறது.........

    ReplyDelete
  5. ஈழத்தமிழருக்காக நாடி தளரும் இந்த வயதிலும்
    நான் பல பாடல் பாடிக்களைத்து விட்டேன்
    இங்குள்ள சில ஈனத் தமிழரை உங்கள் பாடலாவது தட்டி எழுப்புமா..? ஐயமே!


    சா இராமாநுசம்

    ReplyDelete
  6. வாழ்க்கையென்னும் வட்டத்தில் சுற்றும் செக்கு மாடாய் மாறியதன் விளைவு சுயம் இழந்து வீரம் இழந்த வாழ்கிறோம்.

    ReplyDelete
  7. கணேஷ்...
    வருக வசந்தமே புலம்புவதைத் தவிர வேறென்ன செய்வது . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  8. AMK.R.PALANIVEL ...
    ஏட்டிலும் உறங்குகிறது உணர்வுகள் .
    தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  9. வேலுச்சாமி ....
    உணரும் உள்ளங்களை தேடுகிறேன் தம்பி .

    ReplyDelete
  10. Esther sabi...
    வருக தங்கையே வேதனையை நம்மால் பகிரத்தானே முடிகிறது .

    ReplyDelete
  11. புலவர் சா இராமாநுசம்
    உணரவைக்கும் சிறு முயற்சி ஐயா. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் .

    ReplyDelete
  12. DhanaSekaran .S
    எங்கும் செக்கு மாடுகளையே காண்கிறேன் என்ன செய்வது .

    ReplyDelete
  13. ஐந்தறிவுள்ள ஜீவனும் ,
    தம் இனம்காக்கப்
    போராடும்போதினில்,
    தமிழினம் தாக்கப்படுவது
    தெரிந்தும், உணர்சிகளை
    உறங்கவிட்டு உறக்கத்தில்
    இருப்பதும் ஏனோ ....?
    //

    எப்பொழுதுதான் இவர்கள் சிந்திக்கத் தொடங்குவார்களோ.. உணர்வு ரீதியான கவி வரிகள் அருமை அக்கா.

    ReplyDelete
  14. என்று தீரும் இந்த சுதந்திர தாகம்? என்று மடியும் இந்த அடிமையின் மோகம்?

    அருமையான ஆதங்க வரிகள். பார்ப்போம். காலம் மாறும். கவலைகள் யாவும் தீரும். இனம் எழும். தலைமுறை உயிர்த்தெழும் என்ற நம்பிக்கையோடு.

    ReplyDelete
  15. ஒன்றுபடுவோம். கவிதை உணர்ச்சிமயமாய் உள்ளது.

    ReplyDelete
  16. பி.அமல்ராஜ்
    தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் .

    ReplyDelete
  17. துரைடேனியல் ..
    எதோ ஒரு சிறு நம்பிக்கையிலேயே நகர்த்துகிறோம் வாழ்நாளை . தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் .

    ReplyDelete
  18. விச்சு..
    தங்கள் பின்னூட்டம் நம்பிக்கை அளித்தது . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  19. எழுச்சியூட்டும் அருமையான கவிதை
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete