Friday 9 March 2012

அழகு தமிழ் இதுதானா?

  பொய்யக்  கிய்யச்  சொல்லி
   கடன   கிடன வாங்கி,
   கஞ்சி  கிஞ்சிக்  காச்சி,
   பால  கீலக் கொடுத்து,
   படிச்சு கிடிச்சுக் கொடுத்தும்,
   பாழாய் போன வாரிசுகள்!

   கண்ணு  கிண்ணுப்  பட்டு,
   தண்ணி கிண்ணிப்  போட்டு,
   தப்பு கிப்பு  செய்து,
   தல்லு  கில்லு  வாங்கி,
   சென்று  கின்று  அடித்து,
   திசைமாறும் வாழ்வு ஏனோ?

   வாசல் கீசல்  மாறி ஏறி,
   பிச்சை  கிச்சை  எடுத்து,
   வம்பு  கிம்பு  செய்து,
   வழி  கிழி  புரண்டு,
   வஞ்சம்  கிஞ்சம்  செய்து,
   வாழ்வை தானே எரிப்பதேனோ?

   சரக்கு  கிரக்கு விற்று,
   காசு  கீசு  சேர்த்து,
   காலம்  கீலம்  பார்த்துக்,
  கல்யாணம்  கில்யாணம் செய்து,
   பிள்ள கிள்ளப் பெத்து,
   வாழ மறுப்பதும் ஏனோ?

   சொல்லிக் கில்லிக் கொடுத்து,
   கொஞ்சிக் கிஞ்சிப் பேசி,
   கட்டிக்  கிட்டி  அணைத்து,
   கதையக்  கிதையச்  சொல்லி,
   பாட்டக்  கீட்டப்  பாட,
   துணை கிணை இன்றி,
   தனிமரமாய் வீழ்வதுமேன்?

   கட்டக்  கிட்ட வெந்திட,
   பட்ட  கிட்ட  ஓதியனுப்ப,
   பானை கீனை சுமந்திட,
   கடல்  கிடல்  அஸ்திகரைக்க,
   உறவு  கிறவு  இல்லையெனில்,
   பிறப்பே பாவம் ஆகிடுமே?

   பட்டு   கிட்டு  சாயுமுன்,
   மரணம் கிரணம்  அழைக்குமுன்,
   மாலை  கீலை  போடு முன்,
   செல்லு  கில்லு அரிக்குமுன்,
   மண்ணு  கிண்ணு  தின்னுமுன்,
   புரிதல் வாழ்வாகும்!

    தமிழ்  வார்தைகளின்,
   அர்த்தம்  கிர்த்தம்  அறிந்தவரகள்,
   அன்பு  கின்பு  கொண்டிதனின்,
   அர்த்தம்  கிர்த்தம்  சொல்லுங்கள்,
   அழகுதமிழ் இதுதானா?
   தமிழா!தமிழ் பேச மாட்டாயா?

53 comments:

  1. thamila alaakaa pesi irukkireerkal vaalththukkal

    ReplyDelete
  2. அடுக்குத்தொடர் கவிதை அருமை.

    ReplyDelete
  3. கருத்து கிருத்து சொல்ல
    யோசிச்சு கீசிச்சு பாத்தேன்.
    பதிலு கிதிலு ஒண்ணும்
    சொல்ல கில்ல வல்ல..
    படிச்சு கிடுச்சு பாத்தேன்
    இது நல்ல தமிழு இல்ல..
    சரி..
    ஓட்ட கீட்ட
    போட்டுட்டு கீட்டுட்டு போறேன்..
    நாளைக்கு கீளைக்கு பார்ப்போம்.

    ReplyDelete
  4. கவிதை கிவிதை எழுதேறேனு எல்லோரும் காதல் கீதல்னு போலம்பிற்றுக்க இந்த காலத்துல கருத்த கிறுத்த சொல்ற உங்களுக்கு வாழ்த்து சொல்றது என் கடமை

    ReplyDelete
  5. இரட்டைக் கிளவி என்பது இது தானோ!
    நாட்டு வழக்கில் இவையெல்லாம் அழுகு தமிழ் தானே!
    அல்லது சுடச்சுட-கடகட- வளவள இரட்டைக் தான் கிளவியோ!
    சிந்தனைக்கு வாழ்த்துகள் சகோதரி.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  6. அன்புத் தங்கையே

    என்ன அழகா எழுதி புட்டீங்க...

    தமிழா தமிழில் பேசு என்று
    வார்த்தை
    அப்படியே நெஞ்சைக் குத்துகிறது..

    நீங்கள் சொன்ன இந்த வார்த்தைகள் எல்லாம்
    எல்லா மொழிகளிலும் இருக்கிறது.....
    ஆனாலும்
    ஒரு மலையாளி இன்னொரு மலையாளியைப் பார்த்தால்
    மலையாளத்தில் பேசுகிறான்
    ஒரு தெலுங்கன் இன்னொரு தெலுங்கன் எதிர் வந்தாள்
    தெலுங்கில் பேசுகிறான்...

    ஒரு அராபியன் இன்னொரு அராபியனைப் பார்த்தால்
    அரபில் மட்டுமே பேசுகிறான்..

    நம்மவர் மட்டுமே
    Nice to meet you
    என்கிறார்கள்...

    மாற வேண்டும் இந்நிலை..

    என் ஆழ் மனதில் இருந்து வாழ்த்துக்கள்
    தங்கையே இப்படி ஒரு கவிதை கொடுத்ததற்கு...

    ReplyDelete
  7. தமிழ் வார்த்தைகள் எப்படியோ
    கவிதை சூப்பரா இருக்கே
    குருட்டுக் கோழியானா என்ன
    குழம்பு ருசி என்கிற மாதிரி
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. பேச்சுவழக்கில் இந்த மாதிரி வார்த்தைகள் வருவது சகஜம்தான். ஆனால அதனையே வார்த்தைகளால் வடித்து தந்துள்ளீர்கள். நல்லாத்தான் இருக்கு.

    ReplyDelete
  9. அழகுத் தமிழ் மொழியில் இதுபோன்ற வார்த்தைகள் வருவதைவிடக் கொடுமை... உச்சரிப்பில் சிலர் செய்வதுதான். ‘அலகிய தமில் மகல் இவல், இரு விலிகளில் எலுதிய மடல்’ என்று சொல்லுகிற லட்சணத்தில்தான் இன்று பலரைக் காண்கிறேன். தமில் வால்க...

    ReplyDelete
  10. கதை கிதை எழுதாம கவிதை கிவிதை எழுதுறது நல்ல இருக்கு

    ReplyDelete
  11. வணக்கம்! இடக்கு மடக்கு சொற்களால் ஒரு அருமையான புதுக் கவிதை

    ReplyDelete
  12. யப்பா புல்லரிக்குது. பேச்சுத்தமிழும், கொச்சைத் தமிழும் கலந்து கட்டி அடித்திருக்கீறீர்கள். அருமையான படைப்பு. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  13. ennamaa pinnideengal!
    vaazhthukkal paraattukal!

    ReplyDelete
  14. அருமையாய் உங்கள் ஆதங்கத்தை சொல்லியிருக்கிறீர்கள்.இது பற்றி ஒருமுறை காலம் சென்ற கலைவாணர் அவர்கள் வேடிக்கையாக சொன்னார்கள். எல்லோர் பெயரையும் சொல்லும்போது ‘கி’ போட்டு சொல்லலாம். உதாரணமாக ராமன் கீமன் என்று ஆனால் என் பெயரை அப்படி சொல்லமுடியாது. ஏனெனில் என் பெயரே கிருஷ்ணன் என்று இருப்பதால்’

    ReplyDelete
  15. நயமாகக் கேட்டீர்கள் நன்று.

    ReplyDelete
  16. பேசி கீசி பாத்தாதானே கஷ்டம் கிஷ்டம் தெரியும்.

    ReplyDelete
  17. தண்ணி கிண்ணி அடிச்சு
    புத்தி கித்தி இல்லதவர்கள் இதை
    படிச்சு கிழிச்சு பார்த்தால்
    புத்தி கித்தி வந்து வாழ்க்கையில் நலமுடன் இருக்கலாம் என்று அழகாக சுட்டி காட்டி இருக்கிறிர்கள்

    ReplyDelete
  18. அருமையாகக் கோர்த்திருக்கிறீர்கள் சசி.எல்லோருக்கும் உண்டான ஆத்ங்கம் உங்களூடாக !

    ReplyDelete
  19. மதுரை சரவணன்
    தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  20. Sekar..
    தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  21. மதுமதி...
    தங்கள் பின்னூட்டம் கண்டு சிரித்தேன் . நன்றி .

    ReplyDelete
  22. இளந்தென்றல் ..
    தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  23. kovaikkavi ..
    தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  24. மகேந்திரன்..
    அண்ணா தாங்கள் கூறுவதும் உண்மையே .
    தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  25. ரமணி
    ஐயா தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  26. விச்சு ..
    தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  27. கணேஷ் ..
    ஆமா வசந்தமே தமிழே மறக்கும் படி பேசுறாங்க .

    ReplyDelete
  28. "என் ராஜபாட்டை"- ராஜா..
    தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  29. தி.தமிழ் இளங்கோ ..
    தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  30. துரைடேனியல்..
    தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  31. Seeni ..
    தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  32. வே.நடனசபாபதி ..
    கலைவாணர் கருத்து கண்டு மகிழ்ந்தேன் . நன்றி

    ReplyDelete
  33. guna thamizh ..
    தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  34. T.N.MURALIDHARAN ..
    தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  35. Avargal Unmaigal..
    தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  36. ஹேமா ..
    தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  37. வித்தியாசமான பேச்சுதமிழ் கலந்த கவிதை ரசிக்க வைக்கிறது!

    ReplyDelete
  38. கவிதை அருமை.

    ReplyDelete
  39. பட்டு கிட்டு சாயுமுன்,
    மரணம் கிரணம் அழைக்குமுன்,
    மாலை கீலை போடு முன்,
    செல்லு கில்லு அரிக்குமுன்,
    மண்ணு கிண்ணு தின்னுமுன்,
    புரிதல் வாழ்வாகும்!
    >>>
    அதுள்ளவாவது புரிஞ்சுடுமா? எளிய தமிழில் கவிதை அருமை தோழி

    ReplyDelete
  40. நம்பிக்கைபாண்டியன்..
    தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  41. மண்ணு கிண்ணு தின்னுமுன்,
    புரிதல் வாழ்வாகும்!

    பார்க்கலாம்.. புரிந்துகொள்கிறானா என்று...

    ReplyDelete
  42. r.v.saravanan ..
    தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  43. ராஜி..
    தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  44. seenivasan ramakrishnan ...
    தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  45. சட சட மழையென
    பட பட வார்த்தைகள் !

    தட தட ரயிலென
    திடுக் திடுக் கென நெஞ்சத்தில் !

    பல பல நடைமுறை
    பளிச் பளிச் கவி வரிகள் !

    கல கல கலக்கலா
    சல சல சசி கலா !!

    பர பர பாராட்டுகள் !!

    _____ நாங்களும் எழுதுவோம்லா !!

    ReplyDelete
  46. வருத்தம் கிருத்தம் படாதீங்க!எல்லாம் நல்லா கில்லா நடக்கும்!

    ReplyDelete
  47. முடிவில் வருகிற ஆதங்கமே நிலைக்கிறது வாழ்வில்.நல்ல தமிழ் நிச்சயம் பேசுவார்கள்/

    ReplyDelete
  48. தங்களை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன் நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்கள். நன்றி.
    http://blogintamil.blogspot.com.au/2012/03/blog-post_14.html

    ReplyDelete
  49. ஹ..ஹா.. அருமை சகோ..... /// தமிழா!தமிழ் பேச மாட்டாயா?///

    ReplyDelete