Tuesday 20 March 2012

பிரிவினைகள் வேண்டாமே!

ஆண்டவனாய் இருந்தாலும்,
தியாகம் செய்தாக வேண்டும்,
அழுகையில் முடியாவிட்டால்,
இதயத்தில் இடமில்லை!

காட்டுக்குப் போன ராமர்,
அக்கினி வென்ற சீதை,
அம்பெய்யும் அர்ஜுனன்,
சேலைவழங்கும் கண்ணன்,
சிலுவைமர இயேசுபிரான்,

கல்லடிப்பட்ட நபிகள்,
மதுரை எரித்த கண்ணகி'
அனைவரும் நாயக,நாயாகிகள்!
அவதாரங்கள் என்றுரைத்து,
பிழைப்பவர்கள் வழிகாட்டி!

கடவுள் இல்லை உரைத்தவரும்,
தவறாய் சொல்லி மாய்ந்ததினால்
மக்கள் தடுமாற்றத்தில்,
உண்மை பொய் வடிவத்தில்!
படைத்தவன் ஒருவனுண்டு,
உருவம் நாமறியோம்,
அப்பா நம் முன்னவராய்,
அம்மா நம் உயிர் தாயாய்,
அப்படியே பின்னால் போனால்,
ஐனனங்களின் கருவிடம்!
கடைசிபுள்ளி படைத்தவனே,
ஆரம்பமும் முடிவும் அவனிடமே!
படைதவைகளைப் படைத்தோரே,
வணங்கிவிட்டுப் போகட்டும்,
இறைவன் என்ற பெயரில்,
பிரிவினைகள் வேண்டாமே!

அவரவர் கொள்கையிலே,
அமைதியாய் நடந்துபோனால்,
நானிலத்தில் பேதமில்லை,
அன்பான தேன்கூட்டை,
மதத்தின் பெயரால் கலைக்காதீர்!

31 comments:

  1. //அவரவர் கொள்கையிலே,
    அமைதியாய் நடந்துபோனால்,
    நானிலத்தில் பேதமில்லை//

    உண்மைதான். ஆனால் நம்மில் சிலருக்கு பேதம் உண்டாக்கினால் தானே அவர்கள் பிழைக்கமுடியும்.நல்ல கவிதை. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. வே.நடனசபாபதி ...
    தங்கள் உடன் வருகை கண்டு மகிழ்ந்தேன் . தங்கள் கருத்து சரியானதே . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  3. // அவரவர் கொள்கையிலே,
    அமைதியாய் நடந்துபோனால்,
    நானிலத்தில் பேதமில்லை,
    அன்பான தேன்கூட்டை,
    மதத்தின் பெயரால் கலைக்காதீர்!// மிக அழகாக சொன்னீர்கள் சசிகலா அவர்களே ..
    உண்மையே ..ஆனால் இதை கடைபிடிப்பவர்கள் இல்லையே

    அன்புடன்
    விஷ்ணு ..

    ReplyDelete
  4. Vishnu...
    மாறும் என்ற நம்பிக்கையுடன் தொடர்கிறேன் .தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  5. மனிதனை மனிதாய்ப் படைத்துவிட அவன் உடைந்துகொள்கிறான்....என்ன செய்வது சசி !

    ReplyDelete
  6. இறைவன் என்ற பெயரில்,
    பிரிவினைகள் வேண்டாமே!
    எதார்த்தமான எதிர்பார்ப்பு... கவிதை அருமை

    ReplyDelete
  7. இந்துக்கள்தான் அவரவர் வசதிக்கென்று குடும்பம் குடும்பமாய் கடவுள்களை உருவாக்கினார்கள். எல்லாவற்றுக்கும் ஆன மூல சக்தி ஒன்றே. அதை மனித இனம் உணர்ந்தால் பிணக்கு ஏதுமின்றி வாழலாம் நன்றே. நற்கருத்துச் சொன்ன தென்றலுக்கு இதயபூர்வமான நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. அப்பா நம் முன்னவராய்,
    அம்மா நம் உயிர் தாயாய்,
    அப்படியே பின்னால் போனால்,
    ஐனனங்களின் கருவிடம்!
    அத்தனையும் உண்மை வரிகள்...பேதமில்லாமல் அனைவருக்கும் பகிர்ந்துகொள்வோம்..

    ReplyDelete
  9. அருமை அருமை
    படங்களுடன் பதிவின் கருவும்
    சொல்லிச் சென்றவிதமும் மனம் கவர்ந்தது
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. //அன்பான தேன்கூட்டை,
    மதத்தின் பெயரால் கலைக்காதீர்!//
    நல்ல எண்ணம்தான்.ஆனால் மதம்பிடித்த மனிதர்களிடம் எடுபடுமா?
    பாருங்கள் http://chennaipithan.blogspot.com/2011/08/blog-post_05.html

    ReplyDelete
  11. ஹேமா..
    உடைந்ததை ஓட்ட வைக்கும் சிறு முயற்சியில் நாம் .தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  12. ஆரம்பமும் முடிவும் அவனிடமே!
    படைதவைகளைப் படைத்தோரே,
    வணங்கிவிட்டுப் போகட்டும்,
    அர்த்தமுள்ள வரிகள்

    ReplyDelete
  13. S.Goutham...
    தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  14. கணேஷ்
    மனித நேயம் ஒன்றே என்பதை உணர்த்துவோம் வசந்தமே .தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  15. saravanandls ...
    நட்பே தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் .

    ReplyDelete
  16. Ramani ..
    ஐயா தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  17. சென்னை பித்தன் ..
    நாடகமே உலகம்

    நாமெல்லாம் நடிகர்கள்

    எழுதியவன் யார்?

    இயக்குபவன் யார்?
    உண்மையான வரிகள் ஐயா.
    ஐயா தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் .

    ReplyDelete
  18. யாழ். நிதர்சனன்..
    தங்களின் வாழ்த்துரை எனக்கு உற்சாகமளிக்கின்றன .
    தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  19. சசிகலா... நல்லதொரு மத நல்லிணக்கப் பதிவினை படைத்துள்ளீர்கள். அவரவர் பாதையில் போகாமல் அடுத்தவரின் சுதந்திரத்தில் தலையிடுவதால்தான் பிரச்சினையே.

    ReplyDelete
  20. மிக அருமையான கருத்துக்கள் கொண்ட பதிவு.எல்லோரும் படித்து சிந்திக்க வேண்டிய பதிவு. அழகிய முறையில் பதிவிட்ட உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்

    ReplyDelete
  21. வணக்கம்! மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் அருமையான கவிதை.

    ReplyDelete
  22. //அவரவர் கொள்கையிலே,
    அமைதியாய் நடந்துபோனால்,
    நானிலத்தில் பேதமில்லை,
    அன்பான தேன்கூட்டை,
    மதத்தின் பெயரால் கலைக்காதீர்!//

    நல்ல வரிகள் தோழி

    ReplyDelete
  23. அவரவர் வழியில் நடந்துப்போனால்....!

    அருமையான வரிகள் ! பாராட்டுக்கள் !

    ReplyDelete
  24. விச்சு..
    தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . நன்றி .

    ReplyDelete
  25. Avargal Unmaigal ...
    தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . நன்றி .

    ReplyDelete
  26. Seeni ..
    தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  27. தி.தமிழ் இளங்கோ....
    தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  28. செய்தாலி ...
    தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  29. ''...அன்பான தேன்கூட்டை,
    மதத்தின் பெயரால் கலைக்காதீர்..''
    அருமையான வேண்டுகோள். நல்ல வரிகள் வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete