Friday 16 March 2012

லட்சியமில்லா வாழ்வில்

கல்வியில் அலட்சியம்
அறிவின்றி .....
பெற்றோர் மீது அலட்சியம்
உறவிழந்து ....
உறவுகள் மீது அலட்சியம்
தனிமையில் ...
காதல் மீது அலட்சியம்
தோல்வியில் ...
மொழி மீது அலட்சியம்
பொருளிழந்து ..
வேலையில்  அலட்சியம்
முதல் இழந்து ..
பார்வையில் அலட்சியம்
காட்சியிழந்து ...
எதிர்கால அலட்சியம்
வாழ்வு கேள்வியாய் ..

சுற்றுப்புழ   சூழல் அலட்சியம்
வீடே புழுதியாக ..
மனித நேய அலட்சியம்
மனங்கள் பாலையாக ...
சுகாதார அலட்சியம்
நாமே நோயாளியாக ..
சம்சார அலட்சியம்
உறவுகளில் விரிசலாக ...
மழலைகள் அலட்சியம்
 வாழ்வு வெற்றுக் கூடாக ..
சாலை விதிகளில் அலட்சியம்
விதி முடியும் விபத்தாக ..
கண்களின் அலட்சியம்
குருடாக ...
லட்சியமில்லா வாழ்வில்
எல்லாமே அலட்சியமாய் ....!

34 comments:

  1. ம் லட்சியமில்லா வாழ்வில் எல்லாமே அலட்சியம்தான் நேரும் அக்கா

    ReplyDelete
  2. அலட்சியத்தின் விளைவுகள்,அருமையாய்!

    ReplyDelete
  3. மனதில் தைக்கும் வண்ணம் அலட்சியத்தின் வலியைச் சொன்னீர்கள் தென்றல். அதிலும் குறிப்பாக... வாழ்வு வெற்றுக் கூடாக... சாலை விதிகளில் அலட்சியம் என்ற வரிகள் அட்சர லட்சம் பெறும்.

    ReplyDelete
  4. TamilSmell என்னாச்சு தென்றல்? வாக்களிக்க முடியலை...?

    ReplyDelete
  5. அலட்சியங்களை அக்கறையெடுத்து அலசிய விதம் அற்புதம் சசி !

    ReplyDelete
  6. அலட்சியத்தால் உண்டாகும் இழப்புகளை அழகாகவே புரியவைக்கிறது கவிதை அழகுத்தமிழில். பாராட்டுகள் சசிகலா.

    ReplyDelete
  7. லட்சியத்தின் வீரியம் தெரிகின்றது அலட்சியத்தின் வலியில்..
    கவிதைக்கு என் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. //லட்சியமில்லா வாழ்வில்
    எல்லாமே அலட்சியமாய் ....!//
    இந்த வரிக்கு அந்த மாணவன் பேருந்தில் ‘பயணம்’ செய்யும் காட்சியே பொருத்தம். கவிதையும் இணைப்புப் படங்களும் அருமை.

    ReplyDelete
  9. அலட்சியம்தான் ஒரு நொடியில் வாழ்க்கையை மாற்றிவிடுகிறது. நல்ல கருத்துக்களை கவிதை மூலம் சொல்லியுள்ளீர்கள்.

    ReplyDelete
  10. வணக்கம்! வாழ்க்கையில் அலட்சியத்தினால் ஏற்படும் இலட்சிய வீழ்ச்சியை அருமையாகப் படம் பிடித்துக் காட்டிய கவிதை.

    ReplyDelete
  11. அலட்சியங்களுக்கு நல்ல சாட்டையடி.

    ReplyDelete
  12. லட்சியங்களை அலட்சியம் செய்ய கற்றுக்கொள்கிற மனது வாய்க்கப்பெற்றவர்கள் நிறைந்த பொது வெளியில் இவைகள் நிறைய காணக்கிடைக்கிறதுதான்.சங்கடமாய் இருக்கிறது.
    இதையெல்லாம் சட்டம் போட்டு வளர்த்து விட முடியாது.கலாச்சாரம் வளர்த்து விட்டால் மட்டுமே உண்டு. அதைப்பார்த்து கற்றுக்கொண்டால் மட்டுமே உண்டு.நல்ல பதிவு வாழ்த்துக்கள்.நன்றி.வணக்கம்/

    ReplyDelete
  13. திருக்குறள் போல வாழ்வின் அனைத்து விஷயமும் குறிப்பிட்டிருக்கீங்க.....அனைத்தும் உரைக்கும் உண்மைகள்

    ReplyDelete
  14. லட்சியமில்லா வாழ்வில்
    எல்லாமே அலட்சியமாய் ....!

    அலட்சியம் வேன்டாம் என்ற லட்சியத்தைப் பதிய வைத்த அருமையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

    ReplyDelete
  15. இதைத் தான் எதிர்மறை விளக்கம் என்பார்களோ???
    அழகா எழுதி இருக்கீங்க சகோதரி...

    ReplyDelete
  16. Esther sabi ..
    வருக தங்கையே தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் .

    ReplyDelete
  17. சென்னை பித்தன் ..
    தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  18. கணேஷ் ..
    வருக வசந்தமே எப்பவும் போல பதிவிட்டேன் வாக்கிட்டேன் எனக்கும் ஒன்றும் விளங்கவில்லையே ...

    ReplyDelete
  19. ஹேமா....
    வருக சகோ தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  20. கீதமஞ்சரி...
    தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  21. அரசன் சே ...
    தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  22. வே.நடனசபாபதி ..
    தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  23. விச்சு..
    தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  24. தி.தமிழ் இளங்கோ ...
    தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  25. Dhana Sekaran ...
    தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  26. விமலன்...
    தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  27. saravanandls ..'
    தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  28. இராஜராஜேஸ்வரி..
    தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  29. மகேந்திரன் ..
    அண்ணா தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  30. அலட்சியமே வாழ்வென ஆகிவிட்டது.

    சிந்திக்க வைக்கும் கவிதை.

    ReplyDelete
  31. வருமுன் காப்பவன் அறிவாளி !
    வந்த பின் தவிப்பவன் ஏமாளி ! - என்பதை
    அருமையாக சொல்லியிருக்கிறீர்கள் ! பாராட்டுகள் !!

    ReplyDelete
  32. சிந்திக்கவேண்டிய விஷயம்
    நல்ல கவிதை தோழி

    ReplyDelete
  33. azhakiya varikal
    nalla karuthukkal!

    ReplyDelete
  34. உங்களின் அலட்சிய கவிதை மிக அருமையாக உள்ளது

    ReplyDelete