Saturday 31 March 2012

ஊனத்தில் பழுதில்லை ...


எப்படிப் பிறந்தாலும் பழுதில்லை
அனாதையாய்ப் பிறந்தால்
மட்டும் அது பெரும்பாடு  !
அழகாய்க் கூடுகட்டி
ஆசையாய் முட்டையிட்டு
அன்பாய் அடைகாத்து
மகவைப் பார்த்து ஊட்டும் முன்
பெற்றவர் மரித்துப் போனால்
குஞ்சுகள் எறும்புக்கு இரையாகும்  !

மனிதனும் இப்படிதான்
அனாதையாய் அவதரித்தால்
அவர்  வாழ்வில் பயணமெல்லாம் ,
எதிராய் வீசுகின்ற
சுழல் காற்றாய் மாறி விடும் !
அன்பும் கிடைப்பதில்லை
பண்பும் தெரிவதில்லை
பாசமும் அறிவதில்லை !
அழகாய் பிறந்துவிட்டால்
பாதைகள் மாறிப்போகும் !
அறிவோடு பிறந்தாலும்
வாய்ப்புகள் ஓடிப்போகும் !
அறியாமல் வளருவதனால்
நன்மை தீமை எதுவென்று
அறியாமல் நடந்துவிட்டு
அழிவில் வீழ்ந்து அழிகின்றான் !
பாதையும் தெரிவதில்லை
பயணமும் சரியாயில்லை  !
கூன் குருடாய்ப் பிறந்தாலும்
தாய் தந்தை இருந்துவிட்டால்
தரணியில் வாழ்வதற்கு
ஏதோ வழி இருந்திருக்கும் .
அனாதையாய் அவதரித்தால்
வழியுமில்லை வாழ்வுமில்லை !
மனிதப் பிறவிகளில்
இவரே ஈனராக ?
மனங்களும் இப்படிதான்
எதையோ தேடி அலைகிறது
எண்ணத்தில் அனாதையாய் !

 

26 comments:

  1. உண்மைதான் தோழி
    அற்புதமான வரிகளில் கோர்க்கப்பட்ட
    ஆழமான கவிதை

    ReplyDelete
  2. //எண்ணத்தில் அனாதையாய் !//
    எளிமை ,புதுமை,அருமை!

    ReplyDelete
  3. அழகான கவிதை. நன்று. அன்பின் சகோதரம்! உங்கள் கவிதையில் வரும் 9 வது வரியான
    'குஞ்சுகள் எறும்புக்கு இறையாகும் !' என்பதில் இறையாகும் என்பதற்குப் பதில் இரையாகும் என்ற வந்திருக்க வேண்டும். மாற்றி விடுங்கள். நன்றி.

    ReplyDelete
  4. செய்தாலி ...
    தங்கள் முதல் வருகையும் முத்தான பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  5. சென்னை பித்தன்...
    எளிமை , புதுமை , அருமை மை , மையாய் மை போட்டு இழுக்குது உங்கள் பின்னூட்டம் நன்றி ஐயா.

    ReplyDelete
  6. துரைடேனியல்..
    அவரசரத்தில் வந்த தவறை உணர்த்தியமைக்கு நன்றி சகோ .

    ReplyDelete
  7. கூன் , குருடாய் பிறந்தவர்கள் தாய் தந்தையரை நம்பித்தான் தரணியில் வாழ வேண்டுமா இந்த கருத்தில் எனக்கு உடன்பாடில்லை தன்னம்பிக்கை ஒன்று இல்லாதவர்களே உண்மையான அனாதைகள் தரணியில் வாழ முடியாதவர்கள்

    ReplyDelete
  8. இளந்தென்றல்...
    நான் கூறியது அறியா வயதில் ஒரு பாதுகாப்பு . எனினும் தங்கள் கருத்தும் வரவேற்புக்கு உரியதே . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  9. அழகு கவிதை.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  10. ஊனமென்று இருந்தாலும்
    பெயர்சொல்ல முகவரி
    உண்டென்றால் .....
    ஊனமிங்கு ஊனமல்ல...
    முகவரி இல்லாது
    வாழ்வதிங்கு
    கொடிது தானே.......

    அருமையா ஒரு கவிதை சகோதரி...

    ReplyDelete
  11. எண்ணத்தின் அனாதையாய் மனம்! பிரமாதம் தென்றல்! மிக ரசித்தேன்.

    ReplyDelete
  12. மனங்களும் இப்படிதான்
    எதையோ தேடி அலைகிறது
    எண்ணத்தில் அனாதையாய் !

    இரசித்தேன்!
    -காரஞ்சன்(சேஷ்)

    ReplyDelete
  13. Rathnavel Natarajan ...
    அழகு வரியைக் கண்டு மகிழ்ந்தேன் நன்றி .

    ReplyDelete
  14. மகேந்திரன் ...
    ஆம் அண்ணா தங்கள் வருகையும் தெளிவு படுத்தும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் நன்றி அண்ணா .

    ReplyDelete
  15. கணேஷ்....
    ரசிகையின் ரசிகனாய் வரிகள் கண்டு மகிழ்ந்தேன் வசந்தமே நன்றி .

    ReplyDelete
  16. Seshadri e.s....
    ரசித்த வரிகள் கண்டு மகிழ்ந்தேன் நன்றி நண்பரே .

    ReplyDelete
  17. அருமையான கவிதை சகோதரி வாழ்த்துகள்

    ReplyDelete
  18. தாய் தந்தை இருந்துவிட்டால்
    தரணியில் வாழ்வதற்கு
    ஏதோ வழி இருந்திருக்கும் .

    மனிதம் மரித்துப் போகாமல் இருக்கட்டும்!

    ReplyDelete
  19. கலங்க வைத்து விட்டது!
    படமும்-
    எழுத்தும்!

    ReplyDelete
  20. //எண்ணத்தில் அனாதையாய் !//

    தங்களின் உள்ளகுமுறலில் கனத்தது எம் நெஞ்சம்!.

    ReplyDelete
  21. ஹைதர் அலி ....
    தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றி சகோ .

    ReplyDelete
  22. இராஜராஜேஸ்வரி ...
    தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  23. MoneySaver ...
    தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  24. Seeni ...
    தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  25. Syed Ibramsha ..
    தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete