Wednesday 11 January 2012

தொலைந்து போன

காலையில் குக்கூ குக்கூ ..
குயில் பாட்டு
அதை அடுத்து அழகாய்
நடனமிடும் மயில்
தூகைக்குள் தொலைந்து போன
எனது விழிகள்
தென்னந்தோப்பில் சருகி ஓடும் அரவம்
வந்து நிற்கும் மழைமேகம்
விழுந்து அடித்துக்கொண்டு
என் முன் முட்டி மோதி வரும்
என் கவிதைக்கான கரு
என் செய்வேன்
இதன் நடுவே வாடி நிற்கிறேன்
வரிகளை எழுத முடியாது
காலையில் எழுந்து மச மச என்று
நிற்கிறா பாரு எனும்
மாமியாரின் பார்வைக்கு பயந்து
சசிகலா

12 comments:

  1. மாமியார் வாசிப்பாங்களா?நான் வாசித்தே வாக்கிட்டேன்.
    திராவிட தீபம் தோன்றியது

    ReplyDelete
  2. இயற்கையை ரசித்து வாழும் வாழ்க்கையை இழப்பது வருத்தம் தான்.

    ReplyDelete
  3. மாமியார் கவிதை!
    அவர்கள் பார்வைக்குப் படாமல் பார்த்துக்
    கொள்வது நலம்!
    அருமை!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  4. கடமையை விஞ்சிய கவிதை, காலத்துக்கும் பேசப்படுகிறதோ இல்லையோ, காலத்துக்கும் வசைபாட வழி செய்து விடுகிறது. இதைப்போலவே நானும் ஒன்று எழுதினேனே. அதில் கடமை கவிதையை வென்றுவிட்டது. யதார்த்தம் பேசும் கவிதை. பாராட்டுகள் சசிகலா.

    ReplyDelete
  5. ‎'அச்சத்"தை" விரட்டி, ஆக்கத்"தை" பற்றி, இரக்கத்"தை" வளர்ந்து, ஈனத்"தை" களைந்து, உறக்கத்"தை" உதறி, ஊனத்"தை" அகற்றி, எளிய"தை" பற்றி, ஏற்றத்"தை" அணிந்து, "ஐக்கியத்"தை" காத்து, ஒழுக்கத்"தை" சூடி, ஓங்கு"தை" திருநாளில், ஔவை"தை" தழிழ்தாய்,...பாதம் வணங்குகிறேன்...கவிதை உருவாகி......வாழ்துக்களுடன​்....டி.ஜி.வி.பி.சேகர் குமார்.

    ReplyDelete
  6. வருகை தந்து வாழ்த்திய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்

    ReplyDelete
  7. சசி கலக்கிட்டீங்க. பெரும்பாலான வீட்டிலுள்ள நிலைமை..பெண்கள் அதிகம் எழுதாமல் போனதற்கு இதுவும் ஒரு காரணம்.

    ReplyDelete
  8. உங்கள் வலைப்பக்கத்தில் இணைந்துவிட்டேன். உங்கள் பிளாக் அருமையாக உள்ளது.மிகவும் ரசித்தேன்.

    ReplyDelete
  9. நினைத்த நேரத்தில் நம் மனம் விரும்பும் செயல்களில் ஈடுபட முடியாமல் படும் அவஸ்தை கவிதையில் நன்றாகவே வெளிப்பட்டிருக்கிறது. நடைமுறை யதார்த்தத்தை வெளிப்படுத்தும் இக்கவிதை என் மனதை மிகவும் பாதித்தது. வாழ்த்துக்கள் சசிகலா!

    ReplyDelete