Thursday 26 January 2012

கேள்விக்குறியாய்


“வாகன நெரிசலின் போது
வளைந்து நெளிந்து   சாலையில்,
தவறாமல் வருகை தரும்
கையில் குழைந்தையோடு பெண்மை!
பிழைப்புக்கு வழிதேடியா ?-இல்லை!
பிழைக்க வழில்லாமலா ..?
ஏனிந்த இந்த அவலம்?
இது போன்றவர்களை
ஊக்கப் படுத்தாதிங்க
எனவும் சில குரல்கள் ...
வாகனப் புழுதியில்
பவுடர் பூசப்பட்டு
வாஞ்சையோடு வாகனங்களை
நோக்கும் அக்குழந்தையின்
நாளைய எதிர்காலம் கேள்விக்குறியாய் !

ஒட்டிய வயிறோடு
குழந்தையை தெருவில் போட்டு
பிச்சை கேட்கும் அத்தாயும்
பாரதத்தின் கண்மணியே!
வீசி வெளியே எறியப்பட்டவளோ?
வீதியில் வந்து விழுந்தவளோ?
தீண்டாத எருக்கம் பூவோ?
 யாராய் இருந்தால் நமக்கென்ன?
நம் உதிரம் என்றானால்
இப்படி பாரா முகமாய் இருப்போமா ..?
சாலை வரி நாம் விதிப்போம்!
சாலை பெருக்க ஆள் வைப்போம்!
சுத்தமான சாலையில்,
இவள் போலும் குப்பைகள்.
கண்டுகொள்ள யாருமில்லை.
எல்லோரும் இந்நாட்டு மன்னரென,
இவரிடமும் அரசாள வாக்குகேட்பார்!
பிச்சை வாங்கி அரியணை ஏறிஅமர்ந்த
அடுத்த நொடி... பயணத்தில்,
இவர் யாரோ!! அவர் யாரோ!!! .

16 comments:

  1. சமூக அவலத்தை அழகாக சொல்லி இருக்கின்றீர்கள்,அருமையான பதிவு..

    ReplyDelete
  2. சசி...சுதந்திர தினத்தில் சாட்டையடியாய் ஒரு கவிதை.அரசியல்வாதிகள் யாராவது பார்ப்பார்களா !

    ReplyDelete
  3. அருமை சகோதரி!
    ஒவ்வொரு வரியும் பண்பட்ட தங்கள்
    உள்ளத்தின் புண்பட்ட அவலத்தினை படமாக
    எடுத்துக் காட்டுகின்றன!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  4. //சுத்தமான சாலையில்,
    இவள் போலும் குப்பைகள்.
    கண்டுகொள்ள யாருமில்லை.
    எல்லோரும் இந்நாட்டு மன்னரென,
    இவரிடமும் அரசாள வாக்குகேட்பார்!
    பிச்சை வாங்கி அரியணை ஏறிஅமர்ந்த
    அடுத்த நொடி... பயணத்தில்,
    இவர் யாரோ!! அவர் யாரோ!!! .//

    மனம் கவர்ந்த வரிகள்...வாழ்த்துக்கள்.............

    ReplyDelete
  5. //சாலை வரி நாம் விதிப்போம்!
    சாலை பெருக்க ஆள் வைப்போம்!
    சுத்தமான சாலையில்,
    இவள் போலும் குப்பைகள்.
    கண்டுகொள்ள யாருமில்லை//


    மிக அருமையான வரிகள்.......சிந்திக்க வைத்த சாட்டையடி

    ReplyDelete
  6. அன்புத் தங்கை சசிகலா,
    இதை இதைத் தான் உங்களிடமிருந்து எதிர்பார்த்தேன்.

    இரப்பவர்கள் பற்றி நீங்கள் இங்கே
    கேட்டிருக்கும் கேள்விகளுக்கு விடை
    கண்காணாத தொலைவில்....

    சமூக அவலங்களை நீங்கள்
    எடுத்துக்காட்டும் மொழிஆளுமை
    அழகாக உள்ளது.

    தொடருங்கள் இதுபோல....

    ReplyDelete
  7. கிழிந்த பாவாடையிலும்
    இச்சை தேடும்
    இழிவான சமூகம் இது

    நாமெல்லாம் இரும்புத்தூண்கள்
    இவர்கள் மட்டும் என்ன
    தகரத் தூண்களா?

    திறக்குமா அதிகாரச் செவி?!.....

    உயிரைக் கிழிக்கும்
    கவிதைகள் வேண்டும்
    எக்காளச் சொற்கள் வேண்டும்
    இந்த செவிட்டு
    சமுதாயத்திற்கு.

    நல்ல சிந்தனை சகோ. அருமை.

    ReplyDelete
  8. பெரும்பாலானவர்கள் வாடகைக்குழந்தையைக் காட்டியும் பிச்சை எடுக்கிறார்கள். இதற்காகவே குழந்தையை பசியால் வாடச்செய்கின்றனர்.இதில் எது உண்மை எனத்தெரியும் வரை அனுதாபங்களே.

    ReplyDelete
  9. அந்த பிள்ளையும் யார் கருவில் உதித்ததோ யார் கண்டது? இது மக்களாட்சியின் கேடு கெட்ட நிலையின் முகம்...

    ReplyDelete
  10. பூப்பூவாய்ப் புன்னகைகள்,கூடைகூடையாய் வாழ்த்துக்கள்,பெரிய சமுகப் பொறுப்போடு "நாம்"...கைகோர்த்து சமூக நீதி காக்க,பயணம் செய்வோம்.!..நன்றியுடன்..'சசிகலா'

    ReplyDelete
  11. நீள்கிற கரங்களின் வேதனைமிகுந்த குரலில் மனம் சாலைகள் தோறும் மனம் கனத்துபோகச்செய்வதாய்/

    ReplyDelete