Friday 20 January 2012

முதுமையையும் தாலாட்டுங்கள்

பட்டம், பணம்,பதவி,வேலை,
நாகரீக மோகம்,வாழ்வு தேடி,
இன்னும் ஏதேதோ
காரணங்களினால்
பட்டினம் நோக்கி
படையெடுக்கும் கிராமவாசிகள்.
அதிகாலைக் சூரியனை,
அரைத்தூக்கத்தில் பார்த்து,
ஆண்டுகள் பலவாயிற்று.
உயர்ந்து நிற்கும்
கட்டிட இடிபாடுகளுக்குள்
சிக்கி சிதறி விழும்
ஆதவனின் வெளிச்சத்தையும்
கண்டும் காணாமல்
நகரும் நகர வாழ்வில்,
தீபாவளி , பொங்கல், கிறிஸ்மஸ்,ரம்ஜான் என
ஆண்டிற்கு ஒரு முறை மட்டுமே
வந்துபிரிவெழுதிப் போகும்-
சந்ததிகளுக்காக ஆண்டாண்டு,
விழிமேல் வழிவைத்து, காத்துக் கிடக்கும் முதுமை ..

அடிப்படை வசதிகள் இல்லையென,
வர மறுக்கும் இளசுகளோடு
சண்டையிடாமல்
வாரிச்சுரிட்டி எழுந்து
விறகடுப்பில் தன்
அறுபது எழுபது வயதுகளை
எரித்தும் ..
கிணற்றடியில் தன்
சுருக்கம் விழுந்த
தசைகளுக்கு பயிற்சி கொடுத்தும்
யோகாசனதிற்கென நாம்
கழிக்கும் நேரங்களை,
ஆங்கே குனிந்து நிமிர்ந்து
கூட்டும் போதும்
ஆற்றங்கரையில் நம்
அழுக்குகளை அடித்து
துவைத்தும் விரட்டியடித்தும்,
தோட்ட செடிகளுக்கு
தூய்மை ஆடை உடுத்தியும்,
நாம் நேர மின்மை காரணமாக
ஆள் வைத்து செய்யும்
அனைத்து வேலைகளையும்
அசுர வேகத்தில்
தனி ஒருத்தியே செய்து முடித்து, ,” சிரிக்கும் போதும்”,
அன்றேனும் மலர்ந்தமுகம் ‘நாம் காட்ட மாட்டோமா’?
என மனதில் ஏங்கித்  தவித்து,
புது மலரைப்போல்
புன்முறுவலோடு
நம்மை உபசரிக்கும்
அன்னை அவளை காணும் போது
ஆண்டு முழுவதுமாய்
தேக்கி வைத்த அன்பின்..பாசத்தின்,
வெளிப்பாடு மட்டுமே தெரிகிறது.
அவசர அலைக்கழிப்பில்
தொலைத்து கொண்டிருக்கும்
உங்கள் நிம்மதிகளை
கூத்து , கேளிக்கை
சினிமா , இன்பக் சுற்றுலா,
இப்படி எதிலும் தேடாமல்!
இயந்திர வாழ்க்கை விடுத்து,
உங்கள் வருகை நாட்களை மட்டுமே
நாட்காட்டியில் பார்த்துப் பார்த்து,
பசியாறும் இதயங்களையும்
தாலாட்டுங்களேன். .

52 comments:

  1. அருமை சசி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி மோகன் & ஜேசுதாஸ் அவர்களே

    ReplyDelete
  3. கவிதை மிக அருமை சகோதரி..நிச்சயம் முதுமையை தாலாட்டுவோம்..வாசித்தேன் வாக்கிட்டேன்.நன்றி..
    நீ யாரெனத் தெரியவில்லை

    ReplyDelete
  4. மிக்க மகிழிச்சி மதுமதி அவர்களே வாழ்த்தினீர்கள் சரி அது என்ன நீ யாரெனத் தெரியாது என்று சொல்லிவிட்டீர்களே ஓ கவிதை தலைப்பா

    ReplyDelete
  5. முதுமை எல்லோருக்கும் உடைமை.
    இன்று சீராட்டினால் நாளை
    பாராட்டு கிடைக்கும்...
    எல்லாம் கொடுக்கல் வாங்கல் தானே...

    அருமையான கவிதை சகோதரி.

    ReplyDelete
  6. மிகச்சரியாக சொன்னீர்கள் அண்ணா மிக்க நன்றி

    ReplyDelete
  7. வாழ்வுப் பாதையில், இன்று உள்ள உண்மையை
    நிலையை உணர்வுப் பூர்வமாக உரைக்கும் கவிதை
    அருமை!சசி!அருமை
    வாழ்த்துக்கள்!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  8. வணக்கத்துடன் வரவேற்கிறேன் புலவர் சா இராமாநுசம் ஐயா அவர்களே
    வருகை தந்து வாழ்த்தியமைக்கு மனமார்ந்த நன்றிகள்

    ReplyDelete
  9. இது முதுமையின் கொடுமை.உறவுக்காக ஏங்கும் பெரியோர்களை நாம் மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். நம் பிள்ளைகளுக்கும் பெரியோர்களிடம் ஆசிர்வாதம் வாங்கவும் அவர்களுடன் கூடி விளையாடவும் செய்யப்பழகவேண்டும். எந்நேரமும் டிவியுடன் இருக்கும் குழந்தைகளை பெரியோர்களிடம் சந்தோஷமாகப் பழகவிடுங்கள். மிகவும் நயமாகவும்,நாசூக்காகவும் சொல்லியுள்ளீர்கள்.

    ReplyDelete
  10. வருகை தந்து மனதார பாராட்டியதற்கு மனமார்ந்த நன்றி விச்சு அவர்களே

    ReplyDelete
  11. இன்று அவர்களுக்கு.நாளை எங்களுக்கு வராமலா போகும்.உணர்ந்துவிட்டால் அவர்களோடு நாம் குழந்தைகளாகத் தோழர்களாகப் பழகிக்கொள்ளலாம் !

    ReplyDelete
  12. உணருவார்களா சகோதரி வருகை தந்து வாழித்தியமைக்கு மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  13. மனம் கவர்ந்த அருமையான பதிவு
    கிராமச் சூழலை வர்ணித்துப் போகும் விதம்
    மிக மிக அருமை
    பகிர்வுக்கு நன்றி
    தொடரவாழ்த்துக்கள்

    ReplyDelete
  14. ஆண்டில் ஓரிரு நாட்கள் வந்து போகும் பிள்ளைகள்,பேரப்பிள்ளைகளுக்காகக் காத்திருக்கும் அந்த அன்பு நெஞ்சங்களின் உணர்வுகளைப் புரிந்து நடப்பது கடமையல்லவா?
    அருமை சசிகலா.

    ReplyDelete
  15. வணக்கம்! கிராமத்து முதியவர்களின் இதய ஒலிகளை, கவிதை வரிகளாகத் தந்தமைக்கு பாராட்டுக்கள்!

    ReplyDelete
  16. அருமையான கவிதை..

    ReplyDelete
  17. தங்கள் கவிதையைப் படித்தவுடன் நினைவுக்கு வந்த சிந்தனை..

    தொடித்தலை விழுத்தண்டினார்..

    http://gunathamizh.blogspot.com/2009/11/blog-post_25.html

    ReplyDelete
  18. தாத்தா,பாட்டிய நினைவுபடுத்திட்டீங்க போங்க... அவங்க இப்ப இல்லாதது தான் வருத்தமா இருக்கு...

    ReplyDelete
  19. Adadaa!
    pirintha uravukalai !
    ninaikka vaiththu vittathu!
    arumai!

    ReplyDelete
  20. நன்றி ரமணி ஐயா எனது அனைத்து பதிவுகளிலும் தங்களது வாழ்த்துரைகள் தொடர்வது கண்டு மிகவும் மகிழிச்சி அடைகிறேன் தங்கள் ஆசிவாதம் தொடர வேண்டுகிறேன்

    ReplyDelete
  21. சென்னை பித்தன் அவர்களே தங்கள் வாழ்த்துரை கண்டு மகிழ்ந்தேன் கடமைகளை உணருவார்களா ?

    ReplyDelete
  22. தி.தமிழ் இளங்கோ அவர்களுக்கு வணக்கம் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் இதய ஒலிகளை இளசுகள் கேட்பார்களா?

    ReplyDelete
  23. குணா தமிழ் தங்கள் வாழ்த்துரை கண்டு மகிழ்ந்தேன் மிக்க நன்றி

    ReplyDelete
  24. மரு.சுந்தர பாண்டியன் தாத்தா,பாட்டி எனக்கும் இல்லங்க அதன் வெளிப்பாடாகவும் இருக்கலாம் இந்த கவிதை வருகைக்கும் வாழ்த்துக்கும் எனது மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  25. சீனி அவர்களே தங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் எனது மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  26. தாமத வருகைக்கு மன்னிக்கவும் சகோ. கணினி மற்றும இணையதள பிரச்சினையினால் கடந்த ஒரு வாரமாக வலைத்தளம் பக்கம் வர இயலவில்லை. பதிவும் இட முடியவில்லை. முதுமையும் குழந்தைமையும் ஒன்றுதான். என்றுதான் இந்த உலகம் உணர்ந்துகொள்ளுமோ தெரியவில்லை. முதுமை வறுமையாகும்போது இளமை பணக்காரனாகிவிடுகிறது. எல்லா மேடுகளும் ஒருநாள் பள்ளங்களாகத்தான் வேண்டும். இது இயற்கையின் விதி. அருமையான சொற்சித்திரம் சகோ. தொடரவும்!

    ReplyDelete
  27. பசியாறும் இதயங்களையும்
    தாலாட்டுங்களேன். .
    >>
    நெற்றி பொட்டில் அடித்தாற்போன்று சொல்லியிருக்கீங்க சகோ. அந்த நல் இதயங்களின் வேண்டுதல்களால்தான் நாம் இன்புற்று இருக்கிறோம் என்பதை என்றும் மறக்க கூடாது சகோ

    ReplyDelete
  28. அஸ்ஸலாமு அலைக்கும் )உங்கள் மீது இறைவனின் அமைதி நிலவுவதாக)

    நல்லதொரு கவிதை..வாழ்த்துக்கள்

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹமத் அ

    ReplyDelete
  29. "ஆள் வைத்து செய்யும்
    அனைத்து வேலைகளையும்
    அசுர வேகத்தில்
    தனி ஒருத்தியே செய்து "

    இப்படி ஆள் வைத்துச்செய்து கொள்வதாலேயேதான் பல பிரச்சினைகள்- மருத்துவர் சொன்னபிறகு வாக்கிங்க் என்ற பெயரில் நடக்கும் அவலம். மிக நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள்

    ReplyDelete
  30. "ஆண்டிற்கு ஒரு முறை மட்டுமே
    வந்துபிரிவெழுதிப் போகும்-
    சந்ததிகளுக்காக ஆண்டாண்டு,
    விழிமேல் வழிவைத்து, காத்துக் கிடக்கும் முதுமை "

    அருமை

    ReplyDelete
  31. துரைடேனியல் ,ராஜி ,Aashiq Ahamed ,வியபதி &
    anbudevan தயக்கமின்றி கருத்துக்களை பகிர்ந்து சென்ற அனைத்து நெஞ்சங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்

    ReplyDelete
  32. சிந்திக்க வைக்கிறது !அருமை !

    ReplyDelete
  33. வருகைக்கும் வாழ்த்துரைக்கும் எனது மனமார்ந்த நன்றி கபிலன் அவர்களே

    ReplyDelete
  34. முதுமையின் பெருமயை கூறியதற்கு நன்றி

    ReplyDelete
  35. அருமையான கவிதை அக்கா..

    ReplyDelete
  36. உணர்வுப்பூர்வமான வரிகள் , கவிதை அருமை ... வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  37. Esther sabi,பி.அமல்ராஜ் ,ananthu எனது உணர்வின் வெளிபாடுக்கு உயிர் கொடுத்து போகிறது உங்கள் விமர்சனங்கள் வருகை தந்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்

    ReplyDelete
  38. தொலைந்து போகும் கிராம வாழ்வையும் முதுமையானோரின் வரவு எதிர்ப்பார்ப்பு தவத்தினையும் அழகுறச் சொல்லிச் செல்லும் கவிதை. வாழ்த்துக்கள் தோழி.

    ReplyDelete
  39. நீங்கள் சொல்ல வந்த விஷயம் மிகவும் அருமை! கவிதை எழுத ஏற்ற விஷயம். ஆனால்,கவிதை என்னும் கூட்டுக்குள் உங்கள் வரிகள் அடங்க மறுக்கின்றனவே! சில சமயம் உரைநடை படிப்பதுபோல் தோன்றுகிறது! இன்னும்கொஞ்சம் உங்கள் எழுத்துக்களை தொகுத்தால் நன்றாய் இருக்கும் என்பது என் எண்ணம். நன்றி!

    ReplyDelete
  40. கவிதை உரை நடை போல இருப்பதினாலோ என்னைவோ, என்னை மிகவும் கவர்ந்த்து.

    நன்றி.

    ReplyDelete
  41. தனிமரம், Ganesan & Vetrimagal உரைநடையோ கவிதையோ என் எண்ணங்களை உங்களோடு பகிர்ந்துள்ளேன் கருத்திட்ட அன்பு
    நெஞ்சங்களுக்கு எனது மனமாந்த நன்றிகள்

    ReplyDelete
  42. "ஆண்டிற்கு ஒரு முறை மட்டுமே | வந்துபிரிவெழுதிப் போகும் | சந்ததிகளுக்காக ஆண்டாண்டு | விழிமேல் வழிவைத்து, காத்துக் கிடக்கும் முதுமை "

    பிரமாதம் சசிகலாம்மா. முதுமையும் குழந்தைமையும் ஒன்றே என உணர்ந்து விட்டால் பரிவு காட்டுதல் சுலப சாத்தியமே இல்லையா... என் தளத்துக்கு வந்து வாழ்த்திய நீங்கள் எழுதுவதைக் காண விழைந்து வந்தேன். அருமையான எழுத்தைக் கண்டு மனமகிழ்வும், இத்தனை நாள் அறியாமல் போனதற்கு குற்ற உணர்வும் கொண்டேன். வாழ்த்துக்கள் தோழி.

    ReplyDelete
  43. அருமையான கவிதை. உங்கள் கவிதைகள் சிறப்பாகட்டும். கவிஞர் மதுமதி மூலம் இந்த தளத்திற்கு வந்துள்ளேன். வாழ்த்துகள்.

    ReplyDelete
  44. வாரிச்சுரிட்டி எழுந்து
    விறகடுப்பில் தன்
    அறுபது எழுபது வயதுகளை
    எரித்தும் ..
    கிணற்றடியில் தன்
    சுருக்கம் விழுந்த
    தசைகளுக்கு பயிற்சி கொடுத்தும்

    வரிகளும் வர்ணித்த விதம் அருமை அருமை.வாழ்த்துகள்

    ReplyDelete
  45. வணக்கம் கணேஷ் அவர்களே
    அறியாமல் போவது குற்றமல்ல
    பின்னர் தாய் , தந்தையை அறிந்தே
    தவிர்ப்பவர் அதிகம் தானே ..
    வாழ்த்துக்களை வணங்கி வணக்கத்துடன் வரவேற்கிறேன் .

    ReplyDelete
  46. வணக்கம் Starjan ( ஸ்டார்ஜன் ) அவர்களே
    தென்றலுக்கு மகுடம் சூட்டிய மதுமதி காட்டிய பாதையில் வந்த உங்களை வணக்கத்துடன் வரவேற்கிறேன் . தொடருங்கள் நன்றியோடு தொடர்கிறேன் . நட்போடு சசிகலா .

    ReplyDelete
  47. நிழலை நிஜமாக காட்டும் முயற்சி ..
    வாழ்த்துக்களுக்கு மனமார்ந்த நன்றி தனசேகரன் அவர்களே .

    ReplyDelete
  48. மிக அருமையான கவிதை சசிகலா.. இன்றைய தினத்துக்கு தேவையானதும் கூட..

    ReplyDelete
  49. வணக்கம் ரியாஸ் தங்கள் வருகையால் மிக்க மகிழ்ச்சி தொடருங்கள் நன்றியோடு சசிகலா .

    ReplyDelete
  50. உண்மை கொஞ்சம் கசப்பாக இருப்பதால், அதை அவ்வளவாக யாரும் விரும்புவதில்லை ! அதன் மகத்துவம் அறிந்தோர் மறப்பதில்லை !!

    ReplyDelete
  51. நண்பர்களே. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

    நன்றி
    யாழ் மஞ்சு

    ReplyDelete