Thursday 19 January 2012

தேடுங்கள்

தேடலென்ற
ஒன்று மட்டும், “இல்லை”யென்றானால்,
வானுக்கும்- வையத்துக்கும்,
இடையில்வாழ்ந்திருக்கும் காற்றற்ற வெற்றிடம் போல்,
அனைத்தும் அசைய மறுத்து,
ஸ்தம்பித்து நின்று விடும். ...
கண்ணைக் கண்ணில் வைத்து,
பார்வையைத் தேடுதல் விட்டு,
கருத்தை நெஞ்சில்புதைத்து,
“கவிதை”தேடுதல் போலின்றி,
உண்மையாய்த் தேடுங்கள்....
தேவைகள் பூர்த்தியாகும் வரை ....

14 comments:

  1. “கவிதை”தேடுதல் போலின்றி,
    உண்மையாய்த் தேடுங்கள்....//

    அருமையான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    tha.ma 1

    ReplyDelete
  2. மீனுக்கு காத்திருக்கும் கொக்கைப்போல என் கவிக்கு
    உங்கள் விமர்சனங்கள் தேடலை நிறைவு செய்து எனையும்
    வழிநடத்துகிறது மிக்க நன்றி ஐயா

    ReplyDelete
  3. நல்லா இருக்கு!

    ReplyDelete
  4. "என் ராஜபாட்டை"- வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ராஜா அவர்களே

    ReplyDelete
  5. சுரேகா மிக்க நன்றி சுரேகா அவர்களே

    ReplyDelete
  6. //உண்மையாய்த் தேடுங்கள்....
    தேவைகள் பூர்த்தியாகும் வரை ....//
    அடிக்கோடிட வேண்டிய வரிகள்

    ReplyDelete
  7. அழுந்த சொல்லிப்போன விதம் அருமை மனமார்ந்த நன்றி சென்னை பித்தன் அவர்களே

    ReplyDelete
  8. தேட ஆரம்பிக்கும் போதே மூன்றாவது கண் திறக்கா ஆரம்பித்துவிடும். எல்லாம் நம்மை நோக்கி நகர ஆரம்பிக்கும்.

    அருமையான கவிதை வாழ்த்துகள்.

    ReplyDelete
  9. தேவையென்று ஒன்று வரும்போதுதான் தேடுதலே ஆரம்பிக்கும். காற்றற்ற(எத்தனை 'ற' போட வேண்டியிருக்கு!) வெற்றிடம் போல... நல்ல கற்பனை.

    ReplyDelete
  10. தேடிக் கிடைப்பவைக்கே என்றும் பெறுமதி சகோதரி....

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    வீட்டுப் பாவனைக்கான இலகு கிரைண்டரும் என் 150 வது பதிவும்

    ReplyDelete
  11. dhanasekaran .S,விச்சு,♔ம.தி.சுதா♔ வருகை தந்து தங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகள் அன்பர்களே

    ReplyDelete
  12. தேடலின் முடிவு தேவைகளின் பூரணம். தேவைகளின் பட்டியலோ தேடும் அளவுக்கு நீளம்.

    கவிதை உவமையை மிகவும் ரசித்தேன்.

    ReplyDelete