Wednesday 18 January 2012

இருந்தும் இல்லாமல்

பறவைகளின் கரகோஷம்,
பனி மழையே பன்னீர் தூறலாய்..
தூரிகை இல்லாமலே,
வண்ணச்சாயம்பூசி,
பகலவன் பார் நோக்கி ...
தினம் பயணம் வந்து தானே, வருகை பதிவேடு செய்கிறது !
அன்று ஏனோ ? அசதி போலும்!
வந்த சில நொடிதன்னில்,
மீண்டும் மேகப் போர்வைக்குள்,
இளைப்பாற சென்று விட்டான்..!!
தான் விடுப்பில் இல்லை
என்பதை உறுதி செய்ய
அவ்வப்போது வந்து போகும் சூரியனால்
ஈரம் காயாத துணிகளும்,
நாளை அரைக்கலாம் என
எடுத்து வைத்த மிளகாயும் ,
இரவு மீந்த சாதத்தில்
பிடித்து வைத்த வத்தலுக்குமாய்,
சேர்த்து காவல் இருக்கின்றேன் .....
“இருந்தும் இல்லாமல்
இருப்பதன் அவஸ்தை”
நம்மை விட
அடுத்தவரை அதிகம்
எரிப்பது புரிகிறது ...இப்போது !!!
சசிகலா

14 comments:

  1. சரி தான் தோழி மழை இருக்கும் போது வெயில் வேண்ட தோனும், வெயில் இருக்கும் போது மழை வேண்டத்தோனும், அதுவே இருக்கு ஆனா இல்லைகிற வடிவேலு பாஷை மாதிரி இருந்தா ரொம்ப அவஸ்தை தான்..

    ReplyDelete
  2. சொல்ல மறந்த்துட்டேன் நல்ல கவிதை....

    ReplyDelete
  3. த.ம.2

    சூரியன் கண்ணாமூச்சி விளையாடும் நாட்களில் படும் அவஸ்தையை அருமையான கவிதையாக்கி விட்டீர்கள்!

    ReplyDelete
  4. த.ம.2

    சூரியன் கண்ணாமூச்சி விளையாடும் நாட்களில் படும் அவஸ்தையை அருமையான கவிதையாக்கி விட்டீர்கள்!

    ReplyDelete
  5. காகிதப்பூ வாழ்வெதற்கு,மனம்வெந்து மாய்ந்திடவா! கல்லெறிந்தால் பொறுத்திருப்பேன்,சொல்லெறிந்து கொல்வதேனோ! கசக்கி எறிந்த இதயத்தில்,காவியம்தேடுகிறேன்! கற்பனை உறவெண்ணி,கருங்கல்லில் மோதுகிறேன், கனவான உறவைத்தேடி,கந்தையாகி அழுகின்றேன்! கற்சிலைக்கு உயிர் கொடுக்க,கண்ணாடி நிழல் முயல்வதுபோல்,கண்ணே நீ முயலாதே...காலத்தின் தீர்ப்பு இது!!!

    ReplyDelete
  6. அடடா..
    என்ன ஒரு சிந்தனை..
    இருந்தும் இல்லாது இருத்தல்..
    நல்ல சிந்தனை சகோதரி....

    ReplyDelete
  7. வாழஎண்ணி ,கனவில் வாழும்,உள்ளங்கள் ,இருந்தும் இல்லாதவர்களே!

    ReplyDelete
  8. தான் விடுப்பில் இல்லை
    என்பதை உறுதி செய்ய
    அவ்வப்போது வந்து போகும் சூரியனால்

    அருமையான சொல்லாடல்.வாழ்த்துகள்.

    ReplyDelete
  9. ரேவா,சென்னை பித்தன்,D.G.V.P.SEKAR ,மகேந்திரன்,dhanasekaran .S
    பார்த்தும் பார்க்காமல் போகாமல் வாழ்த்திவிட்டு சென்ற அனைத்து நெஞ்சங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்

    ReplyDelete
  10. சசி... இரவு மீந்த சாதத்தில் பிடித்து வைத்த வத்தல்...தான் விடுப்பில் இல்லை என்பதை உறுதி செய்ய...நல்ல வரிகள்.இயல்பான நடை.

    ReplyDelete
  11. “இருந்தும் இல்லாமல்
    இருப்பதன் அவஸ்தை”
    நம்மை விட
    அடுத்தவரை அதிகம்
    எரிப்பது புரிகிறது ...இப்போது !!!//

    அருமையான கவிதை
    ரசித்துப் படித்தேன்
    தொடர வாழ்த்துக்கள்
    த.ம4

    ReplyDelete
  12. அனுபவத்தால் வந்த கவிதையோ சசி.ம் இப்பிடித்தான் சிலசமயம் !

    ReplyDelete
  13. ''...பறவைகளின் கரகோஷம்,
    பனி மழையே பன்னீர் தூறலாய்..
    தூரிகை இல்லாமலே,
    வண்ணச்சாயம்பூசி,
    பகலவன் பார் நோக்கி ...
    தினம் பயணம் வந்து தானே, வருகை பதிவேடு செய்கிறது !...''
    நல்ல வர்ணனை .நல்ல கவிதை. வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.
    http://kovaikkavi.wordpress.com

    ReplyDelete
  14. விச்சு,Ramani ,ஹேமா&kavithai (kovaikkaviதங்கள் அனைவரின் வருகைக்கும் வாழ்த்துக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்

    ReplyDelete