Wednesday 11 January 2012

எந்த தப்பு விதையில் முளைத்தது

ஒரு அழகான
நீண்டதொரு கவிஎழுதும் ஆவலோடு
இயற்கையோடு மட்டுமே பேசும்படியாய்
அமைதியான ஓர் இடம் தேடி அமர்கிறேன்
கண்ணாடியை ஜொலிக்கும்
மார்கழிப்பனி
பூ புல் என் ஒன்று விடாமல்
முத்தமிட்டு சென்றிருந்தது
அதனை கரைத்துப் போக வரும்
காலை சூரியன்
காற்றில் மிதந்து வரும
பறவைகளின் கீச்சிடும் சத்தங்கள்
அப்படி என்ன பேசிக்கொள்ளும்
அதிகாலையிலேயே இந்த பறவைகள்
என் யோசிக்கும் முன்னமே
நாசி தொட்டு நாவை அழைக்கும்
அம்மாவின் சமையல் வாசம்
சீ சீ ....
வந்த நோக்கமே மறந்து போனதே என
நிமிர்ந்து அமர்வதற்குள்
நிசப்தத்தை கிழித்து கொண்டு வருகிறது
இளையராஜாவின் இன்னிசை
எனையும் அறியாமல்
கைகள் தாளம் போட
அதற்குள்
சிணுங்கிக்கொண்டே வந்து
மொட்டவிழும் மலரை
முகர்ந்து போகிறது வண்டினம் ஒன்று
வாஞ்சையோடு நோக்கினேன்
என் கவிதைக்கென
எந்த ஒரு வார்த்தையும் தராமல்
எனைச் சுற்றி ஒரு வட்டமிட்டு போனது
அந்த பட்டாம்பூச்சியும்
என் பார்வைக்குள்
பட்டுத் தெரிந்த எந்தொரு
நிகழ்வைப் பற்றியும்
எழுதவியலாது .....
இறுதியாய் எழுதி முடிக்கிறேன்
"நாலு நொடிக்குள்
நாற்பது செயலை நினைக்கும்
மனது ....."
எந்த தப்பு விதையில் முளைத்தது என்று .......
சசிகலா

15 comments:

  1. மிக மிக அருமையான கவிதை.எண்ண ஓட்டத்தை கவிதையாக மாற்றியவிதம் அருமை.

    ReplyDelete
  2. "நாலு நொடிக்குள்
    நாற்பது செயலை நினைக்கும்"
    ஆழமான கருத்து! வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. துள்ளாத மனமும் துள்ளும்
    என்கிற பாடல் பாடல் குறித்தே
    பட்டுக்கோட்டை அவர்களால்
    மிகச் சிறப்பாக எழுதப்பட்டிருக்கும் அதைப்போலவே
    எழுத முடியாமை குறித்து நீங்க்ள்
    எழுதிச் செல்லும் கவிதை அருமை
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. தப்புவிதையானாலும், துப்புவிதையானாலும் பலன்தர மறப்பதில்லை செடிகள். இங்கே எழுதத் தப்பிய கவிதையொன்றும் அப்படியே... அழகாய் மனம் வருடிச் செல்கிறது. பாராட்டுகள்.

    ReplyDelete
  5. நாற்பது செயலுக்குள் நான்காவது நல்ல செயலாக அமைந்துவிட்டால் சிறப்பு சசி.
    கவிச்சிந்தனை இதுதான் !

    ReplyDelete
  6. ///சிணுங்கிக்கொண்டே வந்து
    மொட்டவிழும் மலரை
    முகர்ந்து போகிறது வண்டினம் ///

    அருமையான சொல்லாடல் சகோதரி.

    ReplyDelete
  7. மழைத்துளியொன்று,மண்ணில் வீழ்கையில்-காத்து நின்றேனே!...பெருமழை பெய்கையில் தண்ணீர் பெருக சாய்ந்து போனேனே!
    ஆதவன் மீண்டு வந்தபோது உயிர்பெற்றெழுந்தேனே!வாழவைக்கும் நட்பைத்தொழுது,வணங்கி நின்றேனே!கண்கள் தேடும் நட்பு எங்கே?கண்டால் சொல்லுங்கள்!ஒளியே!.வழியே!எங்கேபோனாய்,"என்னைத் தவிக்கவிட்டு?

    ReplyDelete
  8. சிந்"தை"....மயக்கி, விந்"தை".... வடிவாகி, வார்'தை...."மலராக, கவி"தை"....பாடிவரும், அனபு"தை"....மகளின்,கரத்"தை"....வலுப்படுத்த, நேசத்"தை"....நாமணிந்து, பாசத்"தை"....பங்கிட்டு, வாசத்"தை"....நட்ப்பாக்கி, புதுகவி"தை"....எழுதிடுவோம்............."தை"மகளே....வருக!... வாழ்த்துக்களுடன்.....டி.ஜி.வி.பி.சேகர்-குமார். … See all

    ReplyDelete
  9. வருகை தந்து வாழ்த்திய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்

    ReplyDelete
  10. மனம் படும்பாடு...அழகான கவிதை.

    ReplyDelete
  11. //"நாலு நொடிக்குள்
    நாற்பது செயலை நினைக்கும்
    மனது ....."//
    மிக நன்று.

    ReplyDelete
  12. அழகான ஆழமான வரிகள்... நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...

    என்னுடைய வலைப்பூ வந்து பாருங்களேன்...www.rishvan.com

    ReplyDelete
  13. வருகை தந்து வாழ்த்திய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்

    ReplyDelete