Tuesday 10 January 2012

தானே புயல் போலும்

"உட்கார யோசித்து
நடக்கும் போதும்
அத்தனை நளினத்தோடு
படியில் அமராமல்
வயித்தக்  கட்டி  .....
வாயைக் கட்டி
உறங்கும் போதும்
உருண்டு, பிரண்டு
படுக்காமல் எழுந்தமர்ந்து திரும்பி படுத்து ....
இப்படி என்னும் ஏதேதோ ...
பத்தியமெல்லாம் இருந்து
பகல் இரவாய் ...
உன்னை கருவில் பத்திரப்படுத்தி
ஈன்றெடுத்த பின்னும்
இமைக்குள் வைத்து தாங்கி
பாலூட்டி சீராட்டி
பள்ளிக்கு அனுப்பிவைத்து
உயிர்ரென நினைத்திருந்த
தாய் தந்தை உறவுதனை 
"தானே புயல் போலும் "
வருமிந்த   பாழாய்ப் போன  காதல்
ஏனோ படுசீக்கிரத்தில்
காதலின்  விரல் பிடித்து
பெற்றோரை உதறி
சென்று விடுகிறதே ஏன் ?
சசிகலா

15 comments:

  1. காதல் புயல் என்று தென்றல் இப்போதுதான் தெரிந்து கொண்டதோ ?
    இக்கேள்விக்கு விடை காண முயன்று நான் பல முறை தோற்று இருக்கிறேன் .
    நமக்கென்று ஒருவன் என்ற கர்வமா , அவன் தரும் காதலா , காதல் தந்த மழலையா
    எது நம்மை பெற்றோரின் பிரிவைத் தாங்கி கொள்ள காரணாமாக இருக்கிறது என்று
    இன்னும் யோசித்துக் கொண்டு இருக்கிறேன் ....அருமை.

    ReplyDelete
  2. சகோதரி ஸ்ரவாணி அவர்களே உண்மைதான் விடை சொல்வீர்கள் என நினைத்தேன் யோசிப்பதாக கூறி விட்டீர்கள் நன்றி சகோ

    ReplyDelete
  3. //உயிர்ரென நினைத்திருந்த
    தாய் தந்தை உறவுதனை
    "தானே புயல் போலும் "
    வருமிந்த பாழாய்ப் போன காதல்
    ஏனோ படுசீக்கிரத்தில்
    காதலின் விரல் பிடித்து
    பெற்றோரை உதறி
    சென்று விடுகிறதே ஏன் ?//

    நல்ல ஒப்பிடு ..

    ReplyDelete
  4. இதுதான் காதலின் பலம் பலவீனம்

    ReplyDelete
  5. உணர்சிகள் சம நிலை தவறிட
    பருவம் போடும் பேயாட்டமோ
    பின்னோக்குப் பார்வை பழுதுபட
    முன்னோக்குப் பார்வைமட்டும்
    அதிகம் கூர் கொண்டதாலா
    புகழ்ச்சிப் போதை தரும்
    தற்காலிக மயக்கமா
    நம்மைச் சார்ந்து போகவேண்டியவர்கள்தானே
    என்ன செய்ய இயலும்
    என்கிற அலட்சியமா
    அல்லது இத்தனையுமா ?
    யோசிக்கச் செய்துபோகும் அருமையான பதிவு
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. உண்மைதான் என்றாலும் விதியின் விளையாட்டு யாரால் தடுக்கமுடியும்.

    அருமை கவிதை.

    ReplyDelete
  7. வலியை வலியோடு ஒப்புமை செய்திருப்பது அருமை......!

    ReplyDelete
  8. புயலில் பிறந்த கவிதை
    வயலில் போட்ட விதை!

    அருமை!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  9. ஒவ்வொரு பருவத்திலும்
    சில உறவுகள் இனிமையைத் தரும்!
    சில விலகிப் போகும்!
    மகன் விலகினால் விரைவில் பேரன் வருவானே!

    ReplyDelete
  10. காதல் தன்னைத் தவிர எல்லாவற்றையுமே மதியிழக்க வைக்கிறது சசி.அது தெளியும்போது குடும்பம் தவிர எல்லாவற்றையும் இழந்துவிடுவோம் !

    ReplyDelete
  11. நண்டு @நொரண்டு -ஈரோடு ,"என் ராஜபாட்டை"- ராஜா,Ramani ,dhanasekaran .S,dheva ,
    புலவர் சா இராமாநுசம் ,ரமேஷ் வெங்கடபதி ,

    ஹேமா புயலினால் ஏற்ப்பட்ட சேதத்திற்கு மருந்திட்டு போகிறது உங்கள் விமர்சனங்கள் வருகை தந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் .

    ReplyDelete
  12. இளம் பருவத்தில் எல்லோரும் காதல் புயலில் சிக்கி தவிப்பதுண்டு. புயலின் போது பாதுகாப்புக்காக ஒதுங்கி இருக்கும் குடும்பங்கள் புயல் ஒய்ந்ததும் ஓன்று கூடி விடுவதுண்டு. அதனால் காதலிலால் குடும்பங்கள் அழிவதில்லை. இது என் அனுபவம்

    ReplyDelete