Monday 14 October 2013

இன்பாக்சும் இவளும் !


இணையமே...
என்றாவது ஒரு நாள்
உனை தேடி வருவேனென்று
குவித்து வைத்திருக்கிறாய்
எனக்கான செய்திகளை
என் தேவையெது என்றறிய 
பொழுதொன்று போதாது..
தேடியெடுக்கும் பொருட்டு
மீண்டும் தொலைக்க கூடும் உனை.

உன்னைப் பற்றி 
மிகைப்படுத்தி கூறிவிட
ஆயிரம் இருந்தும்..

அர்த்தமற்ற பயத்தினால்
மௌனித்து கிடக்கிறேன்.
தனிமை யுத்தத்தை
எத்தனை நாளைக்குத்தான்
தொடர முடியும்..

இதோ நிவாரணமாக
பின்னூட்ட  உருவில்
நீயே எனை ஆக்கிரமித்துவிடுகிறாய்.

22 comments:

  1. வலைச்சரம் அலுவலுக்குப் பின் மறுபடியும் கவிதைகள். நீங்க ஒரு வாரம் பிசியா இருந்தப்போ வந்திருந்த பின்னூட்டங்களால உங்க இன்பாக்ஸ் நிறைஞ்சிருந்தத பாத்ததும் வந்த கவிதை போலருக்கு..... சூப்பர்.

    ReplyDelete
  2. //அர்த்தமற்ற பயத்தினால் மௌனித்து கிடக்கிறேன்.//

    //இதோ நிவாரணமாக பின்னூட்ட உருவில் நீயே எனை ஆக்கிரமித்துவிடுகிறாய்.//

    அழகான ஆழமான அர்த்தம் பொதிந்த அசத்தலான வரிகள். பாராட்டுக்கள்.

    ReplyDelete
  3. ரசித்தேன் சகோதரி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. மிகவும் ரசித்தேன்
    சொல்லிப்போனவிதமும்
    முடித்தவிதமும் அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. தனிமை யுத்தம்....
    ஆமாம்.. அதிகமானோருக்கு நடப்பதுதான்!

    அழகாகச் சொன்னீர்கள்.. அத்தனையும் மனதில் நிற்கும் வரிகள்!

    வாழ்த்துக்கள் தோழி!

    ReplyDelete
  6. //தனிமை யுத்தத்தை
    எத்தனை நாளைக்குத்தான்
    தொடர முடியும்..

    இதோ நிவாரணமாக
    பின்னூட்ட உருவில்
    நீயே எனை ஆக்கிரமித்துவிடுகிறாய்.// உண்மைங்க சசிகலா!
    நல்ல கவிதை

    ReplyDelete
  7. வணக்கம்
    சகோதரி
    கவிதையின் வரிகள் மிக மிக வலிமை மிக்க வைர வரிகள் வாழ்த்துக்கள் சகோதரி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  8. இதோ நிவாரணமாக
    பின்னூட்ட உருவில்
    நீயே எனை ஆக்கிரமித்துவிடுகிறாய்.

    சரியான நிவாரணம் தான்..!

    ReplyDelete
  9. //இராஜராஜேஸ்வரி October 15, 2013 at 6:49 PM

    இதோ நிவாரணமாக பின்னூட்ட உருவில் நீயே எனை ஆக்கிரமித்துவிடுகிறாய்.//

    சரியான நிவாரணம் தான்..! //

    எது? எது? எது?

    மேலே நான் எழுதியுள்ள பின்னூட்டமா ? ;)))))

    ReplyDelete
    Replies
    1. ஹஹ அதுவாகவும் இருக்கலாம் ஐயா.

      Delete
    2. ;))))) புரிதலுக்கு மிக்க நன்றி ;)))))

      Delete
    3. தங்கள் பதிவுகளை பார்த்துவிட்டு வந்தேன். கண்டிப்பாக தங்கள் பின்னூட்டமே ஐயமே இல்லை.

      Delete
  10. ""இதோ நிவாரணமாக
    பின்னூட்ட உருவில்
    நீயே எனை ஆக்கிரமித்துவிடுகிறாய்.//

    உண்மை நிலையை அப்படியே படம் பிடித்துக்காட்டுகின்றன உங்கள் கவிதை வரிகள்

    ReplyDelete
  11. சூப்பர்.... இப்போ இது தானே நிலவரம்

    ReplyDelete
  12. எனக்கும் அப்படித்தான்... இன்பாக்சைப் பார்த்தாலே சந்தோசம் தான்... த.ம.5

    ReplyDelete
  13. அருமையான ஆக்கம் தங்கை சசி...
    தனிமை நம்மை தழுவகையில் ...
    கைதட்டி விடுபட துடிக்கும் சொற்கள்...
    அருமை அருமை...

    ReplyDelete
  14. இது இன்பாக்ஸ் உலகம் அதனால்தான் தனிமையில் போராட வேண்டி இருக்கிறது

    ReplyDelete
  15. காலத்துக்கு ஏற்ற கவிதை.
    நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
  16. இனியவைகளால் நிறைந்த இன் பாக்ஸ். பொறுமையாக அழகாக அடுக்கி வைத்தால் ஆயிற்று.

    ReplyDelete
  17. சகோதரிக்கு வணக்கம்
    கவிதை வரிகள் நன்றாக வந்துள்ளது.
    //இதோ நிவாரணமாக
    பின்னூட்ட உருவில்
    நீயே எனை ஆக்கிரமித்துவிடுகிறாய்.//
    கருத்தூட்டங்கள் படைப்பிற்கான அங்கீகாரமாக அமைவதும், அகத்திற்கு மகிழ்வைத் தரும் சிறப்பு. நல்லதொரு பகிர்வுக்கு நன்றீங்க சகோதரி.

    ReplyDelete