Wednesday 2 October 2013

திண்ணைப் பேச்சு !


என்னாத்தா
பொன்னாத்தா
எங்க ஊரு மாரியாத்தா.
அந்த புள்ளைக்கு 
என்ன ஆச்சோ தெரியலையே
சிரிச்ச முகம் காட்டலையே
செத்த நாழி நிக்கலையே
மருத்துவர தேடிப்போறோம்
மருந்தாக நீ வரவேனும்.

போடி கிறுக்கச்சி
பொசகெட்டவன் 
பொண்டாட்டி..
சூட்டால வயித்து வலி
சுருங்கிப் படுத்தா 
சரியாகுமா ?
சூரத்தேங்காய் 
உடைச்சா தான்
சுருக்கா ஓடிடுமா ?

பணங்காசு சேந்துபுட்டா
பவுசு கூடிப்போகும்
உன் கணக்கா...
மாட மாளிகை
மருத்துவத்தை 
தேடிப்போகும்...
சட்டுனு தான்.

விளக்கெண்ணெயை 
போட்டுப் படு...
விரைசா ஓடும்
வியாதியுந்தான்.
பாட்டி இருந்தா
கேட்டுக்க..
பணத்த பதுக்கி
வச்சிக்க.

வாரம் ஒரு பாட்டி வைத்திய முறையில் கவிதை எழுத நினைக்கிறேன். தங்கள் கருத்துக்களை சொல்லுங்க உறவுகளே.

31 comments:

  1. /// விரைசா ஓடும்-வியாதியுந்தான்... பாட்டி இருந்தா கேட்டுக்க... பணத்த பதுக்கி வச்சிக்க... ///

    ஆகா... மருந்தும் உண்டு... சிறந்த ஆலோசனையும் உண்டு...

    வாழ்த்துக்கள் சகோதரி...

    ReplyDelete
  2. நம் மக்கள் விலை மலிவாக கிடைப்பதை எல்லாம் வீணான பொருள் என்றே நினைக்க ஆரம்பித்துவிட்டனர்..சோம்பேறித்தனத்தால் புலியைப்பார்த்து பூனைகள் சூடு போட்டுக்கொள்கிறார்கள்...

    ReplyDelete
  3. யார் யாரோ எதை எதையோ கலப்படம் பண்றாங்க.. நீங்க வைத்தியத்த கவிதையோட கலப்படம் பண்ணப் போறீங்களா.. பண்ணுங்க பண்ணுங்க.. நல்ல விஷயம் தான்..

    ReplyDelete
  4. சிறந்த முயற்சி... தொடருங்கள்...


    வயிற்று வலிக்கு நல்ல மருந்தை சொல்லியுள்ளீர்கள்...

    ReplyDelete
  5. ஆமாங்க.. விளக்கெண்ணைய தான் பாட்டில்ல ஊத்தி லேபில ஒட்டி விக்கிறாக

    ReplyDelete
  6. ''..பாட்டி இருந்தா

    கேட்டுக்க....'' good advise.
    congratz...
    Vetha.Elangathilakam.

    ReplyDelete
  7. உடம்பிற்கும் உள்ளத்திற்கும் ஒரு சேர மருந்து
    கிடைக்கும் என்றால் படிக்கக் கசக்குமா என்ன ?

    ReplyDelete
  8. கிராமிய வழக்குச் சொற்கள் !கவிதையில் காண்பது அழகு!

    ReplyDelete
  9. சரியாசொன்னீங்கபாட்டி

    ReplyDelete

  10. பாட்டியின் கைவைத்தியம் என்றுமே சிறப்புதானே...

    ReplyDelete
  11. படமும், திண்ணைப்பேச்சும், பாட்டி வைத்தியமும், ஆக்கமும் அருமை, அழகு, அசத்தல். பாராட்டுக்கள், பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  12. "விளக்கெண்ணெயை போட்டுப் படு...
    விரைசா ஓடும் வியாதியுந்தான்."

    எளிய வைத்தியத்தை அழகாக சொல்லியிருக்கிறீர்கள்

    ReplyDelete
  13. கவிஞர் டாக்டராக மாறிவிட்டாறோ

    ReplyDelete
  14. இதுவும் நன்றாகத்தான் உள்ளது.
    தொடருங்கள்... தொடர்கிறேன்.

    ReplyDelete
  15. வெளக்கெண்ணய மறந்துட்டா காசு பணம் கரைய தான் செய்யும்... நல்ல தகவல்

    ReplyDelete
  16. விளக்கெண்ணெயை
    போட்டுப் படு...
    விரைசா ஓடும்
    வியாதியுந்தான்.
    பாட்டி இருந்தா
    கேட்டுக்க..
    பணத்த பதுக்கி
    வச்சிக்க.//

    பாட்டியின் கை வைத்தியம் அருமை.

    ReplyDelete
  17. நன்று... தொடருங்கள்.... புதுவிதமான கவிதைகளையும் படிக்க ஆவலாய் இருக்கிறேன்...

    ReplyDelete
  18. வித்தியாசமான முயற்சி! சிறப்பான படைப்பு! தொடருங்கள்!

    ReplyDelete
  19. கவிதை அருமை அக்கா...
    கிராமத்து நடையில் கவிதைகள் கலக்கலா எழுதுறீங்க....

    ReplyDelete
  20. எத்தனை பணம் செலழித்தாலும் வராத குணத்தையும் நிம்மதியையும் எளிய சொற்களாலும் மருந்துகளாலும் தரும் பாட்டி வைத்தியம் ப்ற்றிய அருமையான பகிர்வுகள்..!

    ReplyDelete
  21. விளக்கெண்ணெயை
    போட்டுப் படு...
    விரைசா ஓடும்
    வியாதியுந்தான்.
    பாட்டி இருந்தா
    கேட்டுக்க..
    பணத்த பதுக்கி
    வச்சிக்க.//
    அருமை! இரசித்தேன்! நன்றி!

    ReplyDelete
  22. விளக்கெண்ணெயை
    போட்டுப் படு...
    விரைசா ஓடும்
    வியாதியுந்தான்.//

    பாட்டிங்க எல்லாத்தையும் வயதானவர் இல்லங்களுக்கு அனுப்பிட்டதாலதான இன்னைக்கி ஆங்கில மருத்துவம் சக்கைப் போடு போடுது! எப்போதும் போலவே அழகான அர்த்தமுள்ள கவிதை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  23. என்ன ஆச்சோ தெரியளயே...//

    'தெரியலையே'ன்னு இருக்கணுமா? சாதாரணமா உங்க கவிதையில தப்பே இருக்காதே ... இல்ல இதுக்கு வேற அர்த்தம் ஏதாச்சும் இருக்கா..:)

    ReplyDelete
    Replies
    1. மாத்திட்டேனுங்க...

      Delete
  24. முதியவர்கள் வீட்டிலிருப்பது ஒரு வரம். எந்த ஒரு வியாதிக்கும் உடனடித் தீர்வு மிக சுலபமாய்க் கிடைத்துவிடும். ஆனால் நம்மில் பல பேர் அவர்களைப் புறக்கணிப்பதோடு, 'இந்தக் காலத்தில் கைவைத்தியமெல்லாம் எடுபடுமா?' என்று கேலி பேசிக்கொண்டிருக்கிறோம். பலவகையான மருத்துவத்தோடு பக்க விளைவுகளையும் அனுபவித்துக்கொண்டிருக்கிறோம்.
    நல்ல மருத்துவக் குறிப்புகளை நயமாய் எடுத்துரைக்கும் கவிதை முயற்சிக்கு மனமார்ந்த பாராட்டுகள் சசி.

    ReplyDelete
  25. திண்ணையும் இல்லாது போய்விட்டது பாட்டிவைத்தியமும் போய்விட்டது கவிதையில் படித்து இன்புறுவோம்.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  26. அந்தக்காலத்தில் பாட்டிவைத்தியம்தான்;இப்போது தும்மினாலும் மருத்துவர்தான்!

    ReplyDelete
  27. கவிதை மூலம் பாட்டி வைத்தியம் - அருமையான யோசனை...

    தொடரட்டும் பாட்டி வைத்தியம்.

    ReplyDelete
  28. நல்ல முயற்சி தொடருங்கள் வாழ்த்துக்கள்

    ReplyDelete