Wednesday 30 October 2013

திண்ணைப் பேச்சு !-5


பார்வையிலே புது தினுசு
பட்டாசுகளின் அணிவகுப்பு
பார்க்க பார்க்க இனித்திடுமே
பல கைகள் இணைந்திடுமே.

மகிழ்விற்கோ எல்லையில்லை
மனங்களிலோ வந்தாடும் கிள்ளை
கைகளில் சிரிக்கும் சுறு சுறு மத்தாப்பு
கண் கவர்ந்திழுக்கும் வானவேடிக்கை

திண்ணைக்குத் திண்ணை சிரிப்பொலி
தினம் தேடும் மனம் இந்த தீப ஒளி
தீபாவளிப் பலகாரமோ பல ரகமே.
தின்னத் தின்ன திகட்டா சுவை தருமே.

ஒரு நாள் கூத்து முடியுமடி
ஒய்யார நடை போட்டு போகுமடி
தின்னப் பலகாரங்கள் செரிமானமாக
தீபாவளி லேகியமும் செய்தாயோடி

சீரகத்தை மல்லியோடே
ஊறவைத்து இஞ்சியும்
சேர்த்தரைத்து வெல்லத்தை
கலந்து நீயும் நெய் விட்டு
காய்ச்சி இறக்கி ..
பாங்குடனே பத்திரப்படுத்திய
லேகியத்தை உண்டு நாமும்
சேமத்தை கொண்டு வருவோம்.

33 comments:

  1. தின்னப் பலகாரங்கள் செரிமானமாக
    தீபாவளி லேகியமும் செய்தாயோடி
    >>>
    லேகியம் கிண்ட எனக்கு தெரியாது. நீயே கிண்டி கொடுத்திடு சசி

    ReplyDelete
    Replies
    1. இருங்க நான் தீபாவளிக்கு மாமியார் வீட்டுக்கு போறேன் வந்து கிண்டி அனுப்புறேன்.

      Delete
    2. அப்போ இனி வேளச்சேரில இருந்து சைதாபேட்டைக்கு எப்படி போறதாம்?

      Delete
  2. பரவாயில்லையே , உங்கள் வீட்டில் தீபாவளி பலஹாரங்கள் முடிந்து
    லேஹியமும் கிண்டியாகி விட்டதா ?

    ReplyDelete
    Replies
    1. பலகாரம் இந்த முறை மாமியார் வீட்ல போய் தாங்க செய்யனும்.
      அனைவருக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். மீண்டும் சந்திப்போம்.

      Delete
  3. தீபாவளி பலகாரம் தீபாவளிக்கு லேகியம் நல்லதுதான் ஆமா தனாயாவா அது என்ன ஹிந்தியா தமிழ்ல மல்லினு தெரியாதா இது தமிழ் வைத்தியத்தியமல்லவா

    ReplyDelete
  4. மல்லியென்றே மாற்றிவிட்டேன். நன்றி.

    ReplyDelete
  5. வணக்கம்

    பதிவு அருமை தொடர எனது வாழ்த்துக்கள்

    இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  6. லேகியப் பதிவு இரசித்தேன்! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்க்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!

    ReplyDelete
  7. பாட்டிங்க வீட்ல இருந்தாத்தானே லேகியம் கிண்ட? அவங்க இருக்கற முதியோர் இல்லத்த தேடித்தான் போகணும்... மாமியார் வீட்ல கொண்டாட இருக்கும் தீப ஒளித்திருநாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. சீரகத்தை மல்லியோடே
    ஊறவைத்து இஞ்சியும்
    சேர்த்தரைத்து வெல்லத்தை
    கலந்து நீயும் நெய் விட்டு
    காய்ச்சி இறக்கி ..
    பாங்குடனே பத்திரப்படுத்திய
    லேகியத்தை உண்டு நாமும்
    சேமத்தை கொண்டு வருவோம்.

    சகோதரி1 நீங்கள் எப்போது சித்த வைத்தியம் கற்றுக் கொண்டீர்கள்?
    எனது உளங் கனிந்த தீபாவளி வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  9. உபயோகமான பகிர்வு நன்றி.தீபாவளி நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. //தின்னப் பலகாரங்கள் செரிமானமாக
    தீபாவளி லேகியமும் செய்தாயோடி//

    அழகு நினைவூட்டியதற்கு நன்றிகள். பாட்டி சொல்லியுள்ள செய்முறைப் பக்குவம் மிகவும் அருமை.

    ReplyDelete
  11. சீரகம் எவ்வளவு? மல்லி எவ்வளவு? :)
    தீபாவளி வாழ்த்துகள் சசிகலா!

    ReplyDelete
  12. தீபாவளி லேகியம் செய்முறை அருமை! நன்றி!

    ReplyDelete
  13. சரியான நேரத்தில் சரியான பதிவு
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
    இனிய தீபாவளித் திரு நாள் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  14. தீபாவளி நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  15. ரொம்ப முக்கியமான தகவல்! ரொம்ப அழகான கவிதையாக..

    ReplyDelete
  16. //கண் கவர்ந்திழுக்கும் வானவேடிக்கை//
    வாண வேடிக்கை!

    ReplyDelete
  17. எல்லாத்துக்கும் அளவு எவ்வளவுன்னு சொல்லியிருந்தா நல்லாருக்கும்... த.ம.6

    ReplyDelete
  18. அடடா... சகோதரிக்கு இவ்வளவு தெரியுமா...? வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  19. தின்னப் பலகாரங்கள் செரிமானமாக
    தீபாவளி லேகியமும் செய்தாயோடி//

    தின்ன பலகாரம் செரிமானமாக கண்டிப்பாய் லேகியமும் சாப்பிட வேண்டும்.
    அருமை.

    ReplyDelete
  20. தீபாவளி பலகாரம் செரிக்க நல்லதொரு பாட்டி வைத்தியத்தை சொல்லித் தந்தமைக்கு நன்றி. மறைந்து போன பாட்டி வைத்தியத்தை தாங்கள் நினைவூட்டுவது உண்மையில் பெரிய விடயம் சகோதரி. தங்கள் மகத்தான பணிக்கு வாழ்த்துக்களுடன் கூடிய நன்றிகள். தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் இந்த அன்பு சகோதரரின் தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  21. முதல்ல எனக்கு தீபாவளி பலகாரம் அனுப்பி வைங்க, சாப்ட்டுட்டு அப்புறம் நீங்க சொன்னத அப்படியே பாலோ பண்றேன் அவ்வ்வ்வ்

    ReplyDelete
  22. ரசித்த்து கொண்டே பிளஸ் +1 மொய் வைத்தேன்;
    மறு மொய் எனக்கு வைக்கவேண்டும் என்று உங்களுக்கு சொல்லவும் வேண்டுமா என்ன?

    ReplyDelete
  23. மிகமிக அருமை!

    பலகாரம் சாப்பிட்டு
    படும்பாடு வயிற்றுக்கு
    செலவில்லா நல்ல
    லேகியமும் தந்தீரோ!

    செய்வதற்கும் சுலபம்தான்!
    நல்ல பகிர்வு... மிக்க நன்றி சசிகலா!

    அனைவருக்கும் தித்திக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  24. வணக்கம்
    இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது சென்று பார்வையிட.இதோ.
    http://blogintamil.blogspot.com/2013/11/blog-post.html?showComment=1383269378727#c4882904206101416278

    இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்

    ReplyDelete
  25. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/11/blog-post.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
  26. மங்களம் பொங்கும் திருநாளாக
    மனதினில் இந்நாள் நிலைத்திடவே
    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர்
    அனைவருக்கும் என் இனிய
    தீபாவளி நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் !

    ReplyDelete

  27. இனிக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்

    தூய தமிழ்மணக்க! நேய மனங்கமழ!
    ஆய கலைகள் அணிந்தொளிர! - மாயவனே!
    இன்பத் திருநாளாய் என்றும் இனித்திருக்க!
    அன்பாம் அமுதை அளி!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  28. மிகவும் அருமை .தீபாவளி வாழ்த்துக்கள்

    ReplyDelete