Monday, 7 October 2013

திண்ணைப் பேச்சு ! -2


அடிக்கொரு தும்மலும்
அடி வயிற்றை பிடித்து
இருமலும்...
ஆத்தாடி பிள்ளை 
படும் பாட்டை...
காணச் சகியவில்லையே.

மருத்துவரை பார்த்தும் 
மாத்திரையை கொடுத்தும்
நெஞ்சு சளி குறையவில்லை
நேத்து இரவு தூங்கவில்லை.

பச்சை தண்ணியில
ஆட்டம் போட்டு
பிள்ளை படும் பாட்டை 
என்ன சொல்ல..

பத்தியமிருந்து பெத்தவளே
பாசமா வளர்ப்பவளே
பாட்டி சொன்ன 
வைத்தியம் மறந்திடுச்சா ?

தேங்காய் எண்ணெய் 
சூட்டில் கற்பூரத்தை 
சேர்த்து வெதுவெதுப்பா
நெஞ்சில தான் தினம்
தடவி விட சளி கரையும்...

வாரத்தில ரெண்டு நாள்
கொதி நீரில் துளசியத்தான்
கொதிக்க விட்டு வடிகட்டி
குடிச்சி வர நோய்க் கிருமி
ஓடிடுமே...

சொன்னதெல்லாம் நினைப்பிருக்கா ?
பாட்டி வைத்தியத்தில் பிழையிருக்கா ?

இந்த வாரம் வலைச்சர ஆசிரியராக எனது பகிர்வுகளை காண இங்கே க்ளிக் செய்யவும்.

27 comments:

 1. அன்பாய் நல்லவழி
  அருமையாச் சொன்னபடி
  கண்போல்ப் பிள்ளைகளைக்
  கவனித்து வளர்த்திடவே
  உன்போல் ஒருபாட்டி
  ஊருக்கு மிக அவசியமே!

  மிகமிக அருமை.. வரியும் வைத்தியமும்...:)

  வாழ்த்துக்கள் தோழி!

  ReplyDelete
  Replies
  1. இவ்வார வலைச்சர ஆசிரியப் பணிப் பொறுப்பேற்மைக்கும்
   நல் வாழ்த்துக்கள்!

   Delete
 2. அட... அருமை...! பாட்டி சொன்ன வைத்தியம் மறக்காமல் இருக்க வேண்டும்...

  ReplyDelete
 3. பாட்டி சொல் பேச்சு கேட்டால் போச்சு
  சுகக்குறைவு. அருமை. ஆரோக்கியம்.

  ReplyDelete
 4. சின்ன சின்ன நோவுக்கெல்லாம் டாக்டரை தேடி போய் காசையும், பிள்ளையின் உடம்பையும் பாழாக்குறோம்.

  ReplyDelete
 5. This comment has been removed by the author.

  ReplyDelete
 6. பாட்டி வைத்தியம் அருமை
  வலைச்சர ஆசிரியப் பணிக்கு
  வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 7. இதெல்லாம் படிச்சாலும் சளி பிடிச்சாக்க ஒடுவதேன்னவோ ஃ பார்மசிதான்

  ReplyDelete
 8. ada...
  nalla kavithai..!
  valaichara aasiriyar panikku vaazhthukkal..

  ReplyDelete
 9. பாட்டி வைத்தியத்தில் பிழையிருக்காது.. எளிமையான வைத்திய்க்குறிப்புகள்..

  வலைச்சரப்பணிக்குப் பாராட்டுக்கள்..வாழ்த்துகள்..!

  ReplyDelete
 10. வணக்கம்
  சசி(சகோதரி)

  பாட்டி வைத்தியம் பற்றிய கவிதை அருமை வலைச்சர ஆசிரியர் பணிக்கு எனது வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 11. அடடா கவிதை வடிவில் பாட்டி வைத்தியம் அருமை ....!

  துளசி ஓக்கே ...! இப்ப வர்ற சூடம்லாம் ஓகேவா ....?

  ReplyDelete
  Replies
  1. எதிலும் கலப்படம் இருந்தால் எங்கு தான் செல்வது ? நியாயமான கேள்வி என்னிடம் பதில் இல்லையே.

   Delete
 12. பாட்டி வைத்திய கவிதை மிக அருமை! தொடருங்கள்! வலைச்சர ஆசிரிய பணிக்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 13. வருகை தந்த அனைவருக்கும் மிக்க நன்றிங்க. வலைச்சரப்பணியில் இருப்பதால் தனித்தனியாக நன்றி சொல்ல இயலவில்லை. மன்னிக்கவும்.

  ReplyDelete
 14. பயனுள்ளவைகளை
  இப்படியும் சுவாரஸ்யமாய் சொல்லலாமோ
  வித்தியாசமான அருமையான பகிர்வுக்கு
  மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 15. பாட்டி வைத்தியத்தை பாயாசமாய் இனிக்க கொடுத்து விட்டீர்கள்! அருமை! இன்னும் நிறைய சொல்லவும்.. :)
  வலைச்சர பணிக்கு வாழ்த்துகள் சசிகலா!

  ReplyDelete
 16. சூப்பர் மருந்து... இப்போலாம் யாரு பாலோ பண்றா? ஆனா அத அழகா சொல்லிட்டீங்க

  ReplyDelete
 17. பாட்டி வைத்தியத்தைப்பாடலாகச்சொன்ன விதம் அருமை.

  ReplyDelete
 18. வலைச்சர ஆசிரியரானதிற்கு பெறும் மகிழ்ச்சியடைகிறேன் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 19. அட கவிஞராக இருந்த நீங்க வைத்தியராக மாறி இப்ப ஆசிரியராக மாறிவிட்டீர்களே.பாராட்டுக்கள் சகலகலாவில்லிக்கு சாரி வல்லிக்கு.

  ReplyDelete
 20. பாட்டி சொன்ன வைத்தியம் அருமையான வைத்தியம்ல.....

  ReplyDelete
 21. பாட்டி வைத்தியம் உண்மைதான்! செயதால் வருவது நன்மைதான்!

  ReplyDelete
 22. அருமை அக்கா.....பாட்டி வைத்தியமும் நல்லா இருக்கு ..கவிதையும் நல்லா இருக்கு

  ReplyDelete
 23. அருமை அம்மா...நான் முதல் முறையாக உங்களுடைய வலைத்தளதிற்கு வருகிறேன்...


  ♥ ♥ அன்புடன் ♥ ♥
  S. முகம்மது நவ்சின் கான்.(99likes)
  www.99likes.blogspot.com

  ReplyDelete
 24. தங்களின் தகவலுக்கு : http://dindiguldhanabalan.blogspot.com/2013/10/Pleasure-Misery-Part-1.html

  ReplyDelete
 25. பாட்டி வைத்தியம் நமக்கான
  பொக்கிசம் அல்லவா!
  மறவாமல் கடைபிடித்தால் மருத்துவமனைகள்
  வெறிச்சோடி பொயிடுமே! ... கவிதையிலும் பாட்டி வைத்தியமா? அருமை சகோதரி.

  ReplyDelete