Friday 4 October 2013

மலரும் மணமும் !


நேத்துப் பூத்த ரோசாவ
நின்னுப் பார்க்கும் ராசாவே

காத்தடிக்க உதிர்ந்திடுமே
கன நேரம் துடித்திடுமே

இதழ் இதழா உதிர்கையில
இவ நெனப்பு உனக்கில்லையா ?

பூவாசம் உனைத் தீண்டையில
புது வாசமா இவ மணக்கலையா ?

அசைந்தாடும் செடியினிலே
அசையுதைய்யா என் உசிரு

பச்சை நிற இலையினிலே
படர்ந்திருக்கும என் நேசம்

நித்தம் உனக்குச் சொல்லலையா ?
நினைப்பிருந்தா வாருமைய்யா ?

திங்கள் மூனு ஓடிப்போச்சி
தினக்கூட்டமும் குறைந்து போச்சி.

சந்தையில தானிருப்பேன்
சங்கதிக்குக் காத்திருக்கேன்.

17 comments:

  1. இத அப்படியே ஒரு மெட்டுப் போட்டு பாட்டாவே பாடிறலாம் போலருக்கே.... உங்களுக்கு எல்லா மாதிரியும் எழுத வருதுங்க... சூப்பர்!

    ReplyDelete
  2. வணக்கம்

    மலரும் மணமும் என்ற தலைப்பில் உள்ள பதிவு அருமை
    சந்தையில தானிருப்பேன்
    சங்கதிக்குக் காத்திருக்கேன்

    இந்த வரிகள் என்னைக் கவர்ந்தவை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. காலங்களை வென்ற காத்திருப்பு.

    ReplyDelete
  4. நல்ல மெட்டு கிடைத்தால் இக் கவிதை நல்ல பாடலாக உருவாக வாய்ப்பிருக்கிறது

    ReplyDelete
  5. திரை உலகம் சென்றால் வாலியின் இடத்தை நிரப்பலாம் . நன்றாக
    எழுதுகிறீர்கள் .

    ReplyDelete
  6. பாடல் மணக்கிறது.

    ReplyDelete
  7. கிராமத்துக் கவிதாயினியின் கவிதை அருமையே

    ReplyDelete
  8. அழகான நடையில் அருமையானதொரு கவிதை...
    வாழ்த்துக்கள் அக்கா....

    ReplyDelete
  9. வெள்ளந்தியான பெண்ணின்
    அன்புமிக்க காதல் மனத்தைச்
    சொல்லிப்போனவிதம் சொக்கவைத்தது
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. மலரும் மணமுமான இனிமையான கவிதை தோழி!

    எண்ணங்களை வண்ணச்சொற்களால் வரைகின்ற அழகு! அருமை!
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  11. அழகான மெட்டில் மலரும் மணமுமாக மனதுக்கு இனிய அற்புதமான படைப்பு. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  12. வாச மலர்! வீசு தென்றல்!

    ReplyDelete
  13. கிராமிய மணம் வீசும் அழகிய கவிதை....

    ReplyDelete
  14. பச்சை நிற இலையினிலே
    படர்ந்திருக்கும என் நேசம்

    மலருக்குள் மணமாய் வீசும் வரிகள் அருமை..

    ReplyDelete
  15. //இதழ் இதழா உதிர்கையில
    இவ நெனப்பு உனக்கில்லையா ?// அழகு! அழகா எழுதுறீங்க சசிகலா! வாழ்த்துகள்!

    ReplyDelete