Wednesday 9 October 2013

தண்ணீரின் தாகம் !

திண்ணை இணைய வாரப்பத்திரிகையில் வெளியான எனது கவிதை. நன்றி திண்ணை இதழ் ஆசிரியருக்கு.

இன்று முதல் 
இலவசப்பட்டியலில்
இணைக்கச் சொல்லுங்கள்
தண்ணீரையும்..

யாசித்தும் கிடைக்காத 
பொருளாகி விட்டது
தண்ணீரும்.

யாசிக்கிறோம்
தண்ணீரை..
உடம்பு நாற்றத்தை
கழுவ அல்ல
உயிர் அதனை
உடம்பில் இருத்த.

இன்று முதல்
இலவசப்பட்டியலில்
இணைக்கச் சொல்லுங்கள்
தண்ணீரையும்..

வேண்டாம் வேண்டாம்
பழங்கால ஞாபகங்களாய்
எங்கோ ஓடும் நதிகள் கூட
ஓடும் லாரியில் ஓடக்கூடும்..

நாளைய வரலாற்றில்
வறண்ட பூமியின்
எண்ணிக்கையை விட
நா வறண்டு செத்தவர்களின்
எண்ணிக்கை அதிகமாக
இருக்கலாம்.

வள்ளல்கள் வாழ்ந்த 
பூமி இதாம்..
வாரி வழங்க வேண்டாம்
வழிக்காமல் இருங்கள்
இயற்கை அன்னையின் மடியை.

இன்று வலைச்சரத்தில் பகிர்வினைக் காண இங்கே க்ளிக் செய்யவும்.

29 comments:

  1. நீங்கள் சொன்னது நடக்கலாம்...!

    திண்ணை இணைய வாரப்பத்திரிகையில் வெளி வந்தமைக்கு வாழ்த்துக்கள் சகோதரி...

    ReplyDelete
  2. வணக்கம்

    கவிதை நன்று ......

    திண்ணை இணைய வாரப்பத்திரிகையில் உங்கள் கவிதை வெளி வந்தமைக்கு வாழ்த்துக்கள் சகோதரி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. உண்மை! எதுவும் எப்பவும் நடக்கலாம்தான்!
    உங்கள் கற்பனை சிறப்பு! அருமையான கவி வரிகள்!

    திண்ணை இணைய வாரப்பத்திரிகையில் உங்களின் யதார்த்தம் சொல்லும் இக்கவிதை வெளியானமையிட்டு மகிழ்ச்சியும் நல் வாழ்த்துக்களும் தோழி!

    ReplyDelete
  4. தங்களின் எச்சரிக்கை மிகவும் நியாயமானதே. பாராட்டுக்கள்.

    //திண்ணை இணைய வாரப்பத்திரிகையில் வெளியான எனது கவிதை. //

    அன்பான வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. தண்ணீரின் தாகம் !

    என்ற தலைப்புத்தேர்வும் சூப்பரோ சூப்பர் ! ;)))))

    ReplyDelete
  6. //எங்கோ ஓடும் நதிகள் கூட
    ஓடும் லாரியில் ஓடக்கூடும்..//

    இது ஏற்கனவே நடந்துகொண்டுதான் இருக்கிறது... மற்றவை எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம்... திண்ணை இதழில் வெளியானமைக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  7. திண்ணை இணைய வாரப்பத்திரிகையில் உங்கள் கவிதை வெளி வந்தமைக்கு வாழ்த்துக்கள் சகோதரி

    ReplyDelete
  8. மேகம் இல்லையென்றால் தண்ணீருக்கும் தாகம்தான்..

    ReplyDelete
  9. //வழிக்காமல் இருங்கள்
    இயற்கை அன்னையின் மடியை.// வித்தியாசம் ஆனால் மிகவும் தேவையான வேண்டுகோள்!
    கவிதை அருமை தோழி. திண்ணை இதழில் வெளி வந்தமைக்கு உளமார்ந்த வாழ்த்துகள்!

    ReplyDelete
  10. இயற்கையைக் காப்பாற்ற தாகம் கொள்ள்வேண்டும்

    ReplyDelete
  11. னெக்குருக்கும் கோபக்கவிதை.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. கவிதை நல்லா வந்திருக்கு. தலைப்பும் தனிக்கவிதை மாதிரி நல்லாயிருக்கு. ஆனா, அந்தத் தலைப்புக்குள் இந்தக் கவிதை நிற்கவில்லையே? ஏன்? என்றாலும் என் வாழ்த்துகள் தங்கையே! தொடர்ந்து எழுதவேண்டுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. இப்படி ஒரு நிலை வந்தால் தண்ணீருக்கும் நிலத்தில் தங்க வேண்டுமென்கிற தாகம் வரும் என நினைத்து எழுதினேன் அண்ணா. இனி சரியாக தலைப்பிட எண்ணுகிறேன். நன்றிங்க அண்ணா.

      Delete
  13. கற்பனை கலந்த தேன்சுவையான ஆக்கம் ..
    மிகவும் அழகு...
    வாழ்த்துக்கள் சசி...

    ReplyDelete
  14. யதார்த்த நிலை விளக்கிப்போகும்
    பதிவு அருமையிலும் அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  15. வருகை தந்து வாழ்த்திய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிங்க. வலைச்சரப்பணியில் இருப்பதால் தனித்தனியாக நன்றி சொல்ல இயலவில்லை மன்னிக்கவும்.

    ReplyDelete
  16. தண்ணீரைப்போல செலவழித்தல் என்னும் வழக்குச்சொல்லும் இன்று வழக்கொழியும் நிலையில். சிக்கனமாக செலவழிக்கவேண்டியவற்றுள் இன்றியமையாதது நீர். அந்த நீராதாரத்தை முன்னிட்டே அமைந்துள்ளது நம் வாழ்வாதாரம். புரியவைக்கும் முயற்சியாக சிறப்பான கவிதை. பாராட்டுகள் சசி.

    ReplyDelete
  17. நிதர்சனமான வரிகள். திண்ணையில் வெளியானதற்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  18. அருமையான வரிகள்! தண்ணீருக்காக போரே வர வாய்ப்பு இருக்கிறது! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  19. வாரி வழங்க வேண்டாம்
    வழிக்காமல் இருங்கள்
    இயற்கை அன்னையின் மடியை// நெத்தியடி

    ReplyDelete
  20. கவிதை அருமை..
    வாழ்த்துக்கள் அக்கா....

    ReplyDelete
  21. அற்புதமான சிந்தனை . வாழ்த்துக்கள்

    ReplyDelete
  22. ''..உடம்பு நாற்றத்தை

    கழுவ அல்ல

    உயிர் அதனை

    உடம்பில் இருத்த....''
    ஆம் தேவையான சிந்தனை.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  23. வணக்கம் சகோதரி, தங்களின் வலைத்தளத்தை வெகுநாளா தேடியிருக்கிறேன். உங்கள் கருத்துரைக்கு சென்று சுட்டியை அழுத்தினால் முகநூலுக்கு செல்லும் அங்கே சுப்பு தாத்தா வரவேற்பார். உங்கள் தளம் அறிய முடியாது. இன்று தான் தங்களின் மூலம் அறிந்தேன். மிக்க மகிழ்ச்சி. கவிதை வரிகள் அனைத்தும் ரசிக்க வைப்பதுடன் சிந்திக்கவும் வைக்கிறது. ”தண்ணீருக்கும் தாகம்” அழகான சிந்தனை சகோதரி. நன்றீங்க.

    ReplyDelete
  24. //யாசிக்கிறோம்
    தண்ணீரை..
    உடம்பு நாற்றத்தை
    கழுவ அல்ல
    உயிர் அதனை
    உடம்பில் இருத்த//
    அருமையான, ரசித்த வரிகள்!
    திண்ணை இணைய பத்திரிகையில் வெளிவந்தமைக்கு வாழ்த்துக்கள் சகோதரி...

    ReplyDelete
  25. தண்ணீர் இல்லையென்றால்...நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது. ஒவ்வொரு சொட்டும் முக்கியம். வீண் செய்யக் கூடாது.
    திண்ணை இணைய இதழில் வெளியாகியதற்கு பாராட்டுக்கள்.
    இன்றைய வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்!

    ReplyDelete
  26. இன்றைய வலைச்சரத்தில்
    உங்களின் அறிமுகமும் வாழ்த்துக்கள் தோழி!

    ReplyDelete