Saturday 5 October 2013

சமீபத்திய சாதனைகள் !

அதீதம் இதழில் வெளியான கவிதை. நன்றி அதீதம்.


காலார நடந்ததில்லை - உறவோடு
கலந்து பேசி பழக்கமில்லை.

அடுக்களையில் புழக்கமில்லை
அரைச்செடுத்து சமைக்கவில்லை.

ஆடு மாடு வளர்க்கவில்லை
ஆடை அழுக்கெடுக்க தெரியவில்லை.

கோயில் குளம் போனதில்லை
கோலமும் தான் போட்டதில்லை.

சாதி சனம் பழக்கமில்லை
சந்ததிக்கும் யாரையும் தெரியவில்லை.

பச்சை வயல் பார்த்ததில்லை
பத்தியமும் இருந்ததில்லை

நின்று பேச நேரமில்லை
நீரோடையும் பார்த்ததில்லை.

மண்பாண்ட உணவுமில்லை.
மருந்துக்கும் அன்பு இல்லை.

அன்னை தந்தை அந்நியமில்லை
ஆனாலும்..
அரவணைக்க அவகாசமில்லை.

ஆடி ஓடி விளையாடவில்லை
அதனால இங்கே ஆரோக்கியமில்லை.

26 comments:

  1. //சமீபத்திய சாதனைகள் !
    அதீதம் இதழில் வெளியான கவிதை.//

    பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    //அதனால இங்கே ஆரோக்கியமில்ல.//

    எனச் சொல்ல ஆயிரம் காரணங்கள். ;)))))

    சிந்திக்க வைத்தது, சிறப்பான ஆக்கம்...

    ReplyDelete
  2. சிறப்பான கவிதை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. ஆரோக்கியமின்மைக்கு
    மிகச் சரியான காரணங்களைச்
    சொன்னீர்கள்
    அருமையான கவிதை
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. வணக்கம்
    சசிகலா(சகோதரி)

    சாதனைக்கு பாராட்டுக்கள் மேலும் சாதனைகள் படைக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் கவிதை அருமை

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள் தோழி!...

    இப்படியொரு சாதனையாளர்
    எனக்கும் நல்ல தோழி என்பதில் மிகுந்த மகிழ்ச்சிதான்!...:)

    ஆரோக்கியம் எப்படி எதனால் கெடுகிறது என்பதை
    இதைவிட அழகாகச் சொல்ல என்ன உண்டு... அருமை!

    மீண்டும் மனதார வாழ்த்துகிறேன்!

    ReplyDelete
  6. தோழிக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. வாழ்த்துக்கள் சசி !
    சில திருத்தங்கள் ....
    அடுக்களை !
    அதே போல எல்லா வரிகளும் இல்லை என்று முடிந்தால்
    நன்றாக இருக்கும் !
    பல இடங்களில் இல்ல என்று வந்துள்ளது இடறுகிறது.
    சரி செய்யவும்.

    ReplyDelete
  8. எத்தனை அழகான கவிதை...
    சகோதரி ஸ்ரவாணி சொன்னது போல் மாற்றம் செய்யலாம்...
    அக்கா இந்தக் கவிதைக்கு உங்களுக்கு பூங்கொத்து.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. எதிலும் இல்லாத பழக்கமும்,கைவிட்டுப்போன விஷயங்களும் எப்பொழுது வேண்டுமானாலும் கைகூடிப்போகும்தானே?நாம் நினைத்து முன்கையெடுக்கையில்/

    ReplyDelete
  10. மண்பாண்ட உணவுமில்லை.
    மருந்துக்கும் அன்பு இல்ல.

    அருமை அருமை....

    வாழ்த்துக்கள் சசி கலா

    ReplyDelete
  11. இன்றைய நகர (நரக) வாழ்க்கையை உணர்த்தும் கவிதை... அதீதம் இதழில் வெளியானதற்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  12. அன்னை தந்தை அந்நியமல்ல
    ஆனாலும்..
    அரவணைக்க அவகாசமில்ல.

    அவலத்தை உரக்க சொல்லும் வரிகள்..!

    ReplyDelete
  13. அதீதம்!! வாழ்த்துகள் வாக்கிங்க் போனா உடம்புக்கு நல்லது ,அதானே

    ReplyDelete
  14. மண்பாண்ட உணவுமில்லை.
    மருந்துக்கும் அன்பு இல்ல.// unmai..

    ReplyDelete
  15. வாழ்த்திய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிங்க.
    ஸ்ரவாணி திருத்தி விட்டேன் தோழி பேச்சு வழக்கப்படி பேசுவதாக நினைத்து எழுதியதால் எனையும் அறியாமல் வ்நது விட்டது. நன்றிங்க.

    ReplyDelete
  16. ஆடி ஓடி விளையாடவில்லை
    அதனால இங்கே ஆரோக்கியமில்லை.//

    இப்பத்தான் கார்ப்ப்ரேஷன் ப்ளே கிரவுன்டெல்லாம் கட்டணமில்லா கழிப்பிடங்களாகிவிட்டனவேன்.... ஓடிவிளையாட இடம் ஏது?

    ReplyDelete
  17. ஆடி ஓடி விளையாடவில்லை
    அதனால இங்கே ஆரோக்கியமில்லை.//

    அருமை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  18. இப்போதைய வளரும் தலைமுறைகளின் நிலை இதுவே தான்

    ReplyDelete
  19. தவறாக எண்ணாமல் பாசிடிவ்வாக எடுத்துக் கொண்டு
    திருத்தி விட்டமைக்கு என் மகிழ்ச்சி சசி .
    கவிதையிலேயே கருத்தூன்றி தட்டச்சு செய்யும் போது
    இது போல நேர்வது இயல்பே. அதை சக பதிவர்கள்
    சுட்டிக் காட்டித் தமிழுக்கும் அந்த பதிவருக்கும் தொண்டு செய்வது
    நம் அனைவரின் கடமை என்றே எண்ணுகிறேன். அதைத் தான்
    நான் இங்கு செய்தேன். நான் தவறு செய்யும் போதும் நீங்கள்
    அனைவரும் தாராளமாகச் சுட்டிக் காட்டலாம்.
    நம்மை மேம்படுத்திக்க் கொள்ள கசக்காதே . நன்றி சசி !

    ReplyDelete
  20. உங்க கவிதை புக் நேத்துதான் படிச்சேன்.. பல கவிதைகள் அருமையாக இருந்தது.....இதுவும் அருமையாக உள்ளது. தொடருங்கள்..... வாழ்த்துக்கள் அக்கா

    ReplyDelete
  21. ரொம்ப அருமைங்க சசிகலா! உங்கள் சாதனைக்கு மனமார்ந்த பாராட்டுகளும் இன்னும் பல சாதனைகள் புரிய அன்பு வாழ்த்துக்களும் தோழி!

    ReplyDelete