Monday 21 October 2013

மன வெளியில் !


மன  வெளியில்
சாத்தியமேதும்
இல்லையென்றாலும்
அசாத்தியமாய்
அமர்ந்திருக்கிறது.
வெகு நாளாய்
ஒரு நிகழ்வு...

சாலையோரக்
கழிவுகளில் நீராடி
சாக்குப் பையை
ஆடையை உடுத்தி
எச்சில் இலைக்கு
நாயோடு சரிசமமாய்
சண்டையிட்டு...
ஐந்தறிவை ஜெயித்துவிட்ட
இறுமாப்பில்...-சக

ஆறறிவு இனத்தாரிடம்
கையேந்தும் மனிதனை
மிருகத்தை விடவும்
கேவலமாய்  பார்த்தபடி.

அந்த மனிதனின் முன்னோட்டம்
நம்மைப் போல் பதவிக்காய்
படி ஏறி இறங்குவதைப் போல்
இருந்திருக்கக் கூடுமோ ?


28 comments:

  1. பதவி ஆசை அப்படி கேவலமாய்... வரிகள் சாட்டையடி...

    ReplyDelete
  2. உலகில் நோயும் கவலையும் இல்லாத மனிதன் அவன்தான்..நமக்கு அனுபவப் பாடங்களைக் கற்றுக் கொடுக்கும் ஆசான்கள் அவர்கள்...

    ReplyDelete
  3. உங்கள் சிந்தனை அருமை பாராட்டுக்கள்

    ReplyDelete
  4. அற்புதம்
    அது ஸ்தூல வடிவம் அவ்வளவே
    மனம் கவர்ந்த பதிவு
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. நல்லதொரு கேள்வி வித்தியாசமான கவிதையில்...

    நல்லதொரு சிந்தனை

    ReplyDelete
  6. ஒவ்வொருத்தரும் அடுத்தவரிடம் எதாவது ஒன்றை இரந்து கொண்டுதான் இருக்கோம் சசி. அன்பு, படிப்பு, பணம், பதவின்னு. எதாவது ஒன்றை...,

    ReplyDelete
  7. அழகான சிந்தனை...

    வித்தியாசமான ஒப்பீடு...

    ReplyDelete
  8. vethanai konda ...

    aazhamaana varikal...

    ReplyDelete
  9. கொடுமையான நிகழ்வுகளை கடுமையாக எடுத்துக்கூறி கடைசியில் ஓர் கேள்வியாகக் கேட்டுள்ளது, அனைவரையும் யோசிக்க வைக்கும்.

    மிகச்சிறந்த ஆக்கம். பாராட்டுக்கள்.

    ReplyDelete
  10. //ஐந்தறிவை ஜெயித்துவிட்ட
    இருமாப்பில்.//

    நல்ல கவிதை படைத்துவிட்ட இறுமாப்பு உங்க "இருமாப்பு" ங்கிற சொற்பிழையில தெரியுது.. சுட்டிக் காட்டியது தவறிருப்பின் மன்னிக்கவும்.. "இருமாப்பு" உடையவனாக என்னையும் கருத வேண்டாம்.. எங்க வீட்டில் ஒரே ஒரு மாப்பு தான் உள்ளது.. ஹிஹிஹி..

    ReplyDelete
  11. அந்த மனிதனின் முன்னோட்டம்//
    சிந்திக்க வைத்த கவிதை.

    ReplyDelete
  12. யோசிக்க வைக்கிறது.

    ReplyDelete
  13. அசாத்தியமாய்
    அமர்ந்திருக்கிறது.
    இறுமாப்பு..!

    ReplyDelete
  14. சிந்தனை சிறப்பு! அருமையான படைப்பு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  15. ம்ம்ம்ம் அப்படித் தான் இருந்துருக்கணும்

    ReplyDelete
  16. சசியின் கவிதைகள் தென்றலாக மனதை தொட்டுச் செல்லும் ஆனால் இன்று சாட்டையாக மாறி இருக்கிறது. படிக்க நன்றாகவும் அதே சமயத்தில் சிந்திக்கவும் செய்ய வைக்கின்றது

    ReplyDelete
  17. வணக்கம்
    மனதை கவர்ந்த கவிதை......... வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  18. சாட்டையடிக் கவிதை...
    வாழ்த்துக்கள் அக்கா....

    ReplyDelete
  19. ஒரு மனிதனின் சில நிலைகள்
    நம்மை எப்படி சிந்திக்க வைக்கிறது பார்த்தீர்களா??
    நிகழில் அவன் இப்படி..
    இதற்குமுன் எப்படியோ..
    இதற்குப்பின்னும் எப்படியோ..
    சிந்திக்கவைத்த அருமையான வரிகள் தங்கை சசி...

    ReplyDelete
  20. // ஐந்தறிவை ஜெயித்துவிட்ட
    இருமாப்பில்...-சக
    ஆறறிவு இனத்தாரிடம்
    கையேந்தும் மனிதனை //

    மனிதனுக்குள் மனிதனைத் தேடிய கவிதை. ஊருக்கு ஊர் இருக்கும் சமூக ஆர்வலர்கள் இந்த கையேந்தும் மனிதனைப் பற்றி மட்டும் நினைப்பதில்லை.

    ReplyDelete
  21. பதவி ஆசை - என்ன ஒரு கற்பனை உங்கள் கவிதையில்.....

    ReplyDelete
  22. சிந்தனைச் சிறப்பு!
    மின்னலென கண்களைக் கூசவைக்கின்றது கவிவரிகள்!

    நினைக்க ம(று)றக்கும் மனித மனம்...:(

    அருமையான கவிதை! வாழ்த்துக்கள் தோழி!

    ReplyDelete
  23. மனதை உடைக்கும் பல வரிகள்
    அருமை அக்கா.......

    ReplyDelete
  24. சிந்திக்க வைக்கும் கவிதை சகோதரி. பதவி ஆசை பாடாய் படுத்துகிறது பலரை.. நல்லதொரு பகிர்வுக்கு நன்றீங்க...

    ReplyDelete
  25. பதவி மோகம் கொண்டவன் எதைபத்தியும் கவலை படுவதில்லை சரியான சிந்தனை வாழ்த்துக்கள் தென்றல்

    ReplyDelete