Monday 28 October 2013

வெள்ளைப் புறா ஒன்று !


புல் தரையில்
புது நளினம்
புதிர்போடும்
கால் நடனம்..
அதோ 
வெள்ளை நிறத்தில்
புறா ஒன்று...
நீதான் சமாதானத்திற்கு
 அனுப்பியதோ ?

இருக்காது
இருக்கவே இருக்காது.
உன் கோபத்தைப்பற்றி
எனக்குத் தெரியும்..
என்னை மட்டும் 
அந்தக் கோபம்
தொற்றிக்கொள்ளாதா  என்ன ?

எப்படியோ..
புறாவின் நிறம்
மனதில் ஒட்டிக்கொண்டதில்
கோபத்தின் சாயம் 
வெளுத்ததென்னவோ உண்மை தான்...

54 comments:

  1. // புறாவின் நிறம் மனதில் ஒட்டிக்கொண்டதில்... //

    ரசித்தேன்...

    வாழ்த்துக்கள் சகோதரி...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

      Delete
  2. புறாவின் நிறம்

    மனதில் ஒட்டிக்கொண்டதில்

    கோபத்தின் சாயம்

    வெளுத்ததென்னவோ உண்மை தான்...
    mmmm...nanru.
    Vetha.Elangathilakam.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

      Delete
  3. //புறாவின் நிறம்
    மனதில் ஒட்டிக்கொண்டதில்
    கோபத்தின் சாயம்
    வெளுத்ததென்னவோ உண்மை தான்...// அருமை சசிகலா! படமும் அழகு!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

      Delete
  4. // கோபத்தின் சாயம்
    வெளுத்ததென்னவோ உண்மை தான்..//

    அப்பாடா.. இது போதும்...:)

    அருமை! புறாவைப் போலவே வெண்மையாய் மனதில் அப்படி ஒரு
    மகிழ்வைத்தந்த கவிதை!

    வாழ்த்துக்கள் தோழி!

    ReplyDelete
  5. உண்மைதான் புறாவை பார்த்தால் கோபக்காரனும் வெள்ளைமனம் கொண்ட பிள்ளைமனம் குடி கொள்ளும் உள்ளத்தில் கவிதை அருமை

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

      Delete
  6. அதனால்தான் சமாதானத்தை விரும்புபவர்கள் வெள்ளை உடை அணிகிறார்கள்

    ReplyDelete
  7. வணக்கம்
    வெள்ளைப் புறாவின் நிறம் மனதில் ஒட்டியதால் மனதில் இருந்த கோபமும் வெள்ளையானது.....கவிதையின் வரிகள் அருமை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

      Delete
  8. நான் யாருக்கும் புறா அனுப்புவதில்லை. அரிந்து சாப்பிட்டுவிடுவார்களோ என்ற அச்சம் தான் காரணம்! - கவிஞர் இராய செல்லப்பா (இமயத்தலைவன்), சென்னை

    ReplyDelete
    Replies
    1. அழகான அந்த ஜீவனையும் சாப்பிடுவார்களா ?

      Delete
  9. சமாதானச் சின்னம் இங்கே காதல் தூதாக வருகிறதோ ...
    அப்படியே புறாவின் கால்களில் ஒரு தீபாவளி கிப்ட் வவுச்சர்
    கட்டி அனுப்பி இருந்தால் கோபம் எல்லாம் அந்த புறாவைப் போல
    பறந்திருக்குமே ....இல்லையா ?
    இது ஊடல் பாடல் தானே சசி ? பாவம் , ஊடலை மன்னித்தால்
    பின் வருமே -------------

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் தோழி இது தோழிக்கு தூது சென்ற புறா..

      Delete
  10. Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

      Delete
  11. சமாதானத்தை உண்டாக்கி விட்டது வெள்ளைப் புறா.
    மகிழ்ச்சி.

    ReplyDelete
  12. Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

      Delete
  13. வெள்ளைப் புறாவுக்கும் கோபம் வருமோ? அதற்கும் உணர்ச்சிகள் உண்டுதானே! ஆனால் வெள்ளை என்றாலே சமாதானம்தானே. வெள்ளை மனசுள்ளவர்களும் அப்படித்தான். வெள்ளந்திகள். அருமையான கம்பேரிசன்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

      Delete
  14. புறாவின் நிறம் வெளுத்ததால் கோபத்தின் சாயம் வெளுத்தது! அருமை! சிறப்பான படைப்பு! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

      Delete
  15. வெள்ளைநிறம் என்றாலே மனதும் வெளுத்துவிடுகின்றது. அருமை.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

      Delete
  16. ஹஹஹா... எப்படியோ சாயம் வெளுத்துடுச்சே... அதுக்க பேரு கோபம் இல்ல ஊடல்

    ReplyDelete
  17. எப்படியோ.. புறாவின் நிறம் மனதில் ஒட்டிக்கொண்டதில்
    கோபத்தின் சாயம் வெளுத்ததென்னவோ உண்மை தான்...//
    இரசித்தேன்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

      Delete
  18. எப்படியோ..புறாவின் நிறம் என் மனதிலும் தங்கள் படைப்பினிலும் ஒட்டிக்கொண்டதில் மகிழ்ச்சியே. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  19. " புல் தரையில்

    புது நளினம்

    புதிர்போடும்

    கால் நடனம்..""
    அருமை, ரசித்தேன், எனது பாராட்டுக்கள்

    ReplyDelete
  20. யார் மீது கோபம் சகோதரி. கோபம் வெளுத்ததில் எங்களுக்கு சந்தோசம். நல்லதொரு கவிதைக்கு எனது பாராட்டுகளும் நன்றிகளும்.

    ReplyDelete
    Replies
    1. எனக்கு கோபம் வராதுங்க.

      Delete
  21. கவிதை அருமை...
    ரசித்தேன் அக்கா.

    ReplyDelete
  22. எம்மா சசிகலா....
    நான் எப்போதுமே சமாதான புறா தான்.

    ReplyDelete
    Replies
    1. நாம தான் சண்டையே போடவில்லையே .

      Delete
  23. கடைசி வரிகள் கலக்கல்...

    சிறப்பான கவிதைப் பகிர்வுக்கு பாராட்டுகள்.

    ReplyDelete
  24. நல்ல கவிதை. தமிழ்மணம் plus +4 வோட்டு

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

      Delete
  25. எப்படியோ..
    புறாவின் நிறம்
    மனதில் ஒட்டிக்கொண்டதில்
    கோபத்தின் சாயம்
    வெளுத்ததென்னவோ உண்மை தான்...

    சமாதானப்புறாவால் வெளுத்த சாயம் - ரசிக்கவைத்தது ..!

    ReplyDelete
  26. என் வலைப்பக்கத்தில் சமையல் போட்டி கலந்து கொள்ளவும்.... நீங்கள் வெளியூர் வாசி என்பதால் புறா மூலம் கொடுத்தனுப்பினால் கூட போதும்....

    ReplyDelete
  27. ரசிக்கும் மனமிருந்தால் கோபமும் எரிச்சலும் குறைந்த நேரத்திலேயே காணாமல் போய்விடும் என்பது உண்மை. அதை அழகாய் வெளிப்படுத்தும் வரிகள். பாராட்டுகள் சசி.

    ReplyDelete
  28. // எப்படியோ..
    புறாவின் நிறம்
    மனதில் ஒட்டிக்கொண்டதில்
    கோபத்தின் சாயம்
    வெளுத்ததென்னவோ உண்மை தான்...//
    அருமை!
    தீபாவளி வாழ்த்துகள்.

    ReplyDelete