Saturday 26 October 2013

திண்ணைப்பேச்சு !-4


தகர டப்பா உருட்டும் மச்சான்
தகராறுக்கு போகாத மச்சான்
தறி போட்டு ஆடும் மச்சான்
தள தளன்னு இருக்கும் மச்சான்

கறுப்பான என் நிறத்தை
கடன்கேட்டு போனான்டி
போனவன காணோமடி
பொலம்பித்தான் சாகுறேன்டி

பொலம்பலேன்டி கண்ணம்மா
பொறுத்திரு அவனும் வருவான்டி
உண்டு உறங்கி எழுந்தாக்கா
உனக்கேன்டி அவன்நெனப்பு ?

காலம் வரும் கவனத்தை திருப்பு
கறுப்புன்னா கண்டனமா ?
கடை கண்ணிக்கு போனா நீயும்
கவனமா பார்த்து வாங்கும்
தக்காளிய ஏன் மறந்த ?

பளபளக்கும் மேனிக்கு
உணவாகவும் சாப்பிட்டு
உடல் நிறத்துக்கும் பூசிவர
பக்குவமா பலனைத்தான்
பல விதத்தில் தந்திடுமே.


28 comments:

  1. கருப்பான என் நிறத்தை கடன் கேட்டுப் போனான்டி!அருமை கருப்புதான் அழகு! தக்களியில் அவ்வளவு மகத்துவம் இருக்கா...

    ReplyDelete
  2. கவிதை வரிகள் மிக நன்று.
    தயவுடன் எழுத்துப் பிழைகளைத் திருத்தவும்.
    (ணகர ரகரங்கள்
    இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  3. வணக்கம்
    சகோதரி

    தக்களிக்கு அவ்வளவு பவர் கவிதை அருமை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. வணக்கம்
    சகோதரி

    தக்காளிக்கு அவ்வளவு பவர் கவிதை அருமை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  5. இன்றைக்குத் தக்காளியோடா வந்தீங்க..:)

    அருமையான கவி வரிகள்!

    வாழ்த்துக்கள் தோழி!

    ReplyDelete
  6. ஓ தளதளக்கும் தக்காளி இதுதானா? :)

    ReplyDelete
  7. அதானே...! இப்போது உடம்பில் பூசிக் கொண்டால் கொசு கடிக்காதாம்... ஆனால் தக்காளியின் விலை தான் கடிக்கிறது...!!!

    ReplyDelete
  8. sariyaaka ..
    azhakaaka sollideenga....

    ReplyDelete
  9. பள பளக்கும் மேனி யாரு கேட்டா
    பண்பான பொண்ணுதான் வேணும்முனு ஆண்கள் கேட்டாங்க

    ReplyDelete
  10. தக்காளியில் இவ்வளவு விஷயம் இருக்கா..

    //தகறாருக்கு போகாத மச்சான்//

    ஏன் தகராறு தகராறு செய்யுது...

    ReplyDelete
  11. தக்காளியின் சிறப்பை விளக்கும் வரிகள் அழகு! சிறப்பான படைப்பு! நன்றி!

    ReplyDelete
  12. அன்பு சகோதரிக்கு வணக்கம்..
    தக்காளியின் மகத்துவத்தைத் தங்கள் கவிவரிகளின் மூலம் அறிந்து கொண்டேன். மிக்க மகிழ்ச்சி. நன்றி பகிர்வுக்கு..

    ReplyDelete
  13. அருமை... அழகு குறிப்புகளை கவிதையில் தரும் முயற்சியா..?

    நடக்கட்டும்... நடக்கட்டும்...

    ReplyDelete
  14. அருமையான அழகுக் குறிப்பு....

    நல்லா இருக்கு!

    ReplyDelete
  15. இயற்கையை மீறி எதுவும் இல்லை.மேக்கப் மட்டும் அதற்கு விதிவிலக்க என்ன? த.ம 6

    ReplyDelete
  16. உங்க வலைதளத்தை திறந்த உடனே யாரோ தகர டப்பா உருட்டராங்களே யார் அது?

    ReplyDelete
    Replies
    1. அது இவங்க எழுதின பாட்டுக்கு(கவிதைக்கு) அவங்க வூட்டுகாரர் போடுற தாளமப்பா ரசிங்க ரசிங்க

      Delete
  17. பாட்டி வைத்தியத்தை கவிதையாஉ சொன்ன அக்காவுக்கு வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  18. கவிதையில் அழகு குறிப்பு அருமை.

    ReplyDelete
  19. கிராமத்து மணம் தூக்கலாய் உள்ளது.அருமை

    ReplyDelete
  20. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/10/blog-post_27.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
  21. கவிதையின் ஊடே அழகுக் குறிப்பு...
    சிறப்பான சிந்தனை சகோதரி...

    ReplyDelete
  22. கவனமா பார்த்து வாங்கும்
    தக்காளிய ஏன் மறந்த ?

    கவனம் கொள்ளவைத்த அருமையான பகிர்வுகள்..!

    ReplyDelete
  23. வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  24. தக்காளி சாப்ட்டா கலர் வருமா என்ன? தெரியாம போச்சே... லாரி லாரியா வாங்கியிருப்பேனே? ஊம் காலந்து கடந்தப்புறம் கருபென்ன சிவப்பென்ன? அழகான வரிகள் சந்தத்துடன்.. எப்போதும் போலவே அருமை....

    ReplyDelete
  25. தக்காளி வைத்தியம் சூப்பர். அதைவிட கவிதை சூப்பர். வாழ்த்துகள் மா.

    ReplyDelete
  26. கலர் கனவு வேண்டுமா! திண்ணை வைத்தியம் அருமை!

    ReplyDelete
  27. தக்காளி னா தக்காளி தான்... இத படிச்சுட்டு தக்காளி விலை ஏறிட போகுது

    ReplyDelete