Friday 18 October 2013

திண்ணைப்பேச்சு ! -3


கால் முளைச்ச 
நாளாக கையினிலே
இருப்பதில்லை
பிள்ளை கண்டதையும்
எடுத்துப் போட்டு
ஆடும் ஆட்டத்திற்கோ
அளவுமில்லை..

பள்ளம் மேடு
தெரிவதில்லை..
பார்த்துப் போக
பக்குவமும் இல்லை..

கண்ணுக்குள்ள
வைத்துப் பாத்தாலும்
கர்ணமடித்து விழுகின்றான்.
கஞ்சி குடிக்கவும்
நேரமில்லை.
காத்து வாங்கவும் 
போகவில்லை.

அப்படிப்பார்த்தும்
உடம்பெல்லாம்
வீக்கங்கண்டு
உருண்டு புரண்டு
அழுகின்றான்.

எந்த ஊரு
நான் போக
எந்த வைத்தியத்தை
நானும் செய்ய...

தவம் இருந்து
பெத்தவளே..
தடிப்புக்கு மருந்தேன்டி
அரிப்பதுவும் நின்றிடவே
உள்ளுக்கு நல்லெண்ணெய் 
குடுத்துப்பாரு..
தடம் தெரியாம
மறைந்திடுமே தடிப்பெல்லாம்.

48 comments:

  1. சசிகலா பாட்டிக்கு (சகோதரிக்கு),
    வணக்கங்கள் .. பாரம்பரியம் மறந்து அந்த கணம் மட்டும் ஆறுதல் அளிக்கும் ஆங்கில மருந்துகளுக்கு அடிமைப்பட்ட ஆட்களின் மத்தியில் தங்கள் பதிவு சிந்திக்க வைக்கும். திண்ணைப்பேச்சு நல்லதொரு பேச்சாக அமைந்தமைக்கு நன்றீங்க சகோதரி. படித்து கருத்திட்டு மட்டும் போக மனமில்லை தமிழ்மணம் ஓட்டும் இட்டே செல்கிறேன், நன்றீங்க சகோதரி;.

    ReplyDelete
  2. போங்கப்பா நான் இனிம திண்ணைப்பேச்சு எழுத மாட்டேன் போங்க.. எல்லாம் என்னை பாட்டினு சொல்றிங்க..(கோவிக்க வேண்டாம் சும்மா ..)

    ReplyDelete
    Replies
    1. பாட்டி என்று அழைத்தது தப்பு என்றால் மன்னித்து கொள்ளுங்கள் கொள்ளுப் பாட்டி

      Delete
    2. எல்லாம் ஒரு முடிவுவோட இருக்கிங்க.. நடத்துங்கப்பா..

      Delete
  3. சரியான வைத்தியம்... வாழ்த்துக்கள் சகோதரி... நன்றி... இதுவரை வந்த (ரூபனின் தீபாவளிச் சிறப்புக் கவிதைப் போட்டி) கவிதைகளை ஒரு தொகுப்பாக தங்களுக்கு அனுப்பி உள்ளேன்... மெயில் பார்க்கவும்...

    ReplyDelete
    Replies
    1. பகிர்ந்தமைக்கு நன்றிங்க சகோ.

      Delete
  4. பாட்டி வைத்தியம்
    பக்குவமாய் சொன்ன
    அக்காவுக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நீங்க தான் நல்ல தம்பி...

      Delete
  5. வணக்கம்
    சசிகலா(சகோதரி)

    திண்ணைப் பேச்சு படைப்பு மிக நன்று..... வாழ்த்துக்கள்.... இனி பாட்டி வைத்தியம்....மருந்துக்கடை திறக்க வாய்பு இருக்குப் போல.........ஆகா...ஆகா....

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. அந்த அளவுக்கு அனுபவம் இல்லங்க..

      Delete
  6. நல்லெண்ணெயைப்பற்றி
    நல்லெண்ணமாய் பகிர்ந்த
    நல்லதொரு பதிவு.

    பாராட்டுக்கள்.

    ReplyDelete
  7. மருத்துவக்குறிப்பே கவிதை வடிவில் ,GOOD!

    ReplyDelete
  8. அட.. இன்னிக்கு நல்லெண்ணையா பாட்டி வைத்தியத்தில...:)

    அருமை!.. தொடருங்க..

    ReplyDelete
  9. அறிந்து கொள்ளவேண்டிய விஷயத்தை
    அற்புதமாகத் தேனில் குழைத்துக் கொடுத்தமைக்கு
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிங்க ஐயா.

      Delete
  10. தடிப்புக்கு மருந்தேன்டி
    அரிப்பதுவும் நின்றிடவே
    உள்ளுக்கு நல்லெண்ணெய்
    குடுத்துப்பாரு..
    தடம் தெரியாம
    மறைந்திடுமே தடிப்பெல்லாம்.

    நல்லதொரு பதிவு ..பாராட்டுக்கள்..!

    ReplyDelete
  11. தேனில் குழைத்த மருந்து! அருமை!

    ReplyDelete
  12. பாட்டி வைத்தியம் பாட்டு வைத்தியமாய் சொன்னது சிறப்பு

    ReplyDelete
  13. பாட்டி வைத்தியத்தியம் அருமை.

    ReplyDelete
  14. வாவ் சூப்பர்.... நானும் எல்லோர்கிட்டயும் சொல்றேன்

    ReplyDelete
  15. பாட்டி வைத்தியத்தை பாட்டாக பாடமுடியுமா அசாத்திய திறமை அசத்திய திறமை..

    ReplyDelete
    Replies
    1. தங்களின் முதல் வருகைக்கு நன்றிங்க.

      Delete
  16. நல்லெண்ணை வைத்தியம் அருமை! நல்லதொரு படைப்பு! நன்றி!

    ReplyDelete
  17. நற்குணம் கொண்ட நல்லெண்ணெய் வைத்தியம்
    இயம்பிய விதம், மிக அழகு...

    ReplyDelete
  18. உள்ளுக்கு நல்லெண்ணெய் கொடுத்தால் உடம்பின் வீக்கங்கள் சரியாகுமென்று இன்று அறிந்துகொண்டேன். நன்றி சசிகலா. பூச்சிக்கடியால் வரும் அரிப்பு தடிப்புக்கும் இது பொருந்துமா? அல்லது அலர்ஜியால் வரும் அரிப்புக்கு மட்டுமா?

    ReplyDelete
    Replies
    1. பூச்சிக்கடி அலர்ஜி இரண்டிற்குமே பொருந்தும் தோழி. என் பையனுக்கு கொடுத்திருக்கேன்.

      Delete
  19. பாட்டாவே பாடிட்டீங்க பாட்டி.. அச்சச்சோ ஒரு ப்ளோல வந்திடுச்சுங்க..

    ReplyDelete
    Replies
    1. நீங்களுமா ?
      நடத்துங்க...

      Delete
  20. பாட்டி வைத்தியத்தைப் பாட்டாகத் தந்தது அருமை..நானும் என் பையனுக்குக் கொடுத்திருக்கிறேன் தோழி! ஆங்கில மருந்து கொடுப்பதைவிட நம் பாட்டி வைத்தியம் தான் என் தேர்வு...இன்னும் நிறையப் பகிருங்கள் , நன்றி சசிகலா!

    ReplyDelete
  21. நல்லெண்ணெய் வைத்தியமா... சூப்பர். மறந்து கொண்டிருக்கும் பாரம்பரிய வைத்திய முறைகளை அழகா சொல்லிக்கிட்டு இருக்கீங்க அக்கா...

    சூப்பர். தொடர்ந்து எழுதுங்க. வாழ்த்துகள்.

    த.ம: 11

    ReplyDelete
  22. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

    அறிமுகப்படுத்தியவர் : கிரேஸ் அவர்கள்

    அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : தேன் மதுரத் தமிழ்!

    வலைச்சர தள இணைப்பு : பாரதியார் வியந்த பெண்மணியும்...

    ReplyDelete
  23. மிக்க மகிழ்ச்சி நன்றிங்க சகோ.

    ReplyDelete