Wednesday 28 August 2013

யாராவது பார்த்திங்களா ?


நாப்புறமும் வேலியிட்டு
நடுவே ரெண்டு தென்னை வச்சி
திண்ணையில தான் படுத்து - அப்பா
தினம் வளர்த்த தென்னம்பிள்ள...

குடங்குடமா நீர் ஊத்தி
கொறையேதுமில்லாம பார்த்து
வளர்ந்த அந்த தென்னையில்
கீத்தும் ஒரு கதை சொல்லும்.
விழும் நிழலுமே 
நூறு கதை படிக்கும்.....

தேவார பாட்டுச்சத்தம்
தென்னங்காற்றில் கேட்கும் கூட்டம்
உருண்டோடும் சைக்கிலுந்தான்
இளைப்பாரும் நிழலில் நித்தம்...

பால் நுங்கு பழக்கூடை
தினம் சந்தையாகும்..
மர நிழலும் தான்...
விளையாட்டா ஒவ்வோர் குடம்
தண்ணி ஊத்து என்பாள் அம்மா...

அம்மை கண்ட நேரத்திலோ
ஆளுக்கொரு இளநி தரும்
கழனியில கூரை மேய்ந்து
களைப்பார கீத்த தரும்...
வீடு திண்னை பெருக்கவே
விளக்குமாறாகும் அதுவே தான்..

தாகம் தீர்த்து ..
தரைய பெருக்கி
நிழலும் தந்த தென்னையத்தான்
ஆளுக்கொரு மரமாக்க
அழகான தோப்பாச்சசி
அதுவே எங்க தெரு பேராச்சி.

என் ஆயி அப்பன் போனபின்னே
தென்னங்கீத்தின் அரவணைப்பை
தேடிப்போனேன்...
அடிவேரையும் புடுங்கிப்புட்டு
சிமெண்ட் சாலை சிரிக்குதடி..
பேருக்குத்தான் தோப்புத்தெரு
பெயருக்கு ஒரு மரமில்லையடி.

41 comments:

  1. வாவ்... நல்ல வரிகள்..

    .. சிமெண்ட் சாலை சிரிக்குதடி..
    பேருக்குத்தான் தோப்புத்தெரு
    பெயருக்கு ஒரு மரமில்லையடி....

    இது சிட்டிக்குள்ள தான்.. எங்க ஊரில் எல்லாம் இன்னும் இருக்கு..

    ReplyDelete
    Replies
    1. அப்பு, இன்னும் அஞ்சு வருஷம் தான்.. அதுக்குள்ளே பயபுள்ளைக அங்கயும் சோலி முடிச்சு புடுவாக..

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. எங்க கிராமத்தில் தான் சிமெண்ட் சாலை வந்து விட்டது. 5 வருடம் இல்லங்க அடுத்த ஆண்டே கூட தெருவில் மரங்கள் காணாமல் போகலாம்.

      Delete


  2. ஏபிசி கத்துகிட்டு நம்ம புள்ள வளருது..
    ஏழடுக்கு மாடியிலே சொகுசாத்தான் வாழுது..
    ஓடுகின்ற வாழ்க்கையிலே நூறுவேல இருக்குது..
    ஒரு மரக்கன்னு நட்டுவைக்க நமக்கெங்க தோணுது..

    ReplyDelete


  3. அப்பனாத்தா தண்ணீரத்தான் ஊத்தினாக..
    பாட்டுக்குள்ள அதையும் நீங்க சொன்னீங்க..
    தோப்பெல்லாம் ஆச்சுதய்யே வீடாக..
    இன்னும் கொஞ்சம் நாளில் கான்க்ரீட் காடாக..

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க காடு என்பதை இனிம படிக்க மட்டும்தான் முடியும் போல.

      Delete
  4. நாற்புறமும் வேலியிட்டு
    நடுவேயிரண்டு தென்னை....
    Eniya vaalththui...
    Vetha.Elangathilakam

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

      Delete
  5. அட்டகாசம் புள்ள....

    தென்னை மரம் வெச்சு தினம் ஒரு குடம் தண்ணி ஊற்றுன்னு அம்மா விளையாட்டா சொன்னாலும் அந்தக்காலத்திலேயே மரம் நட்டால் மழை வரும் இயற்கை நமக்கு நன்மை செய்யும்னு சொல்லாம சொல்லிட்டு போன நம் பெற்றோர்...

    தென்னை மரம் வைத்தால் விளையும் நன்மைகள் கிடைக்கும் பொருட்கள் எல்லாமே மிக அழகாக சந்தம் அமைத்து இசைத்த இசையாக...

    ஆத்தா அப்பன் போனப்பின்னாலே அந்த மரமே ஆயி அப்பன் ஆகிறது..

    நிழல் தருகிறது வருவோர் போவோருக்கெல்லாம்.. தனி மரம் ஆக இருந்து அது தோப்பாகி அதுவே அந்த தெருவுக்கு பேராகி.. அற்புதம் சசி.. எப்படி எழுதுறே நீ அசத்தல்....

    இத்தனையும் மலரும் நினைவுகளாக மட்டுமே நீங்காமல் இருந்து.. நிஜத்தில் சென்று பார்த்தால் தோப்பும் மரமும் அழிந்து இல்லை அழித்து அங்க சிமெண்ட் சாலை... பேருக்கு தான் தோப்புத்தெரு.. ஆனா பேருக்கு கூட ஒரு மரமும் இல்லை..

    சபாஷ்.. நூறு கைத்தட்டல் சசி.. அற்புதமான வரிகள் ... எளிமையான கவிதை... ஆனால் ஆழ்ந்த நெற்றியடி கருத்து....

    மரம் நட பிள்ளைகளுக்கு சொல்லித்தாருங்கள்... நாம் விட்டுச்செல்லும் சொத்தாக இந்த இயற்கை பாதுகாக்கப்படவேண்டும் என்று தலையில் அடித்து சொல்லாத குறை...

    மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள் சசி.. தொடரட்டும் எழுத்துப்பயணம்....

    ReplyDelete
    Replies
    1. அக்கா மிக்க மகிழ்ச்சி.. அப்பா வைத்த அந்த தென்னை மரங்களை இப்போது காணவில்லை அக்கா. மிகவும் வருத்தமா இருக்கு.

      Delete
  6. தென்னையைப்பற்றி தெவிட்டாமல் தென்றலாய்ச் சொல்லியுள்ளீர்கள். அருமையோ அருமை. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.பகிர்வுக்கு நன்றிகள்.

    ஸ்வீட்டான இளநீர் சாப்பிட்ட மகிழ்ச்சியைத்தந்தது.

    இதோ உங்களுக்கோர் இளநீர் கவிதை [நான் சிறுவயதில் எழுதி கோகுலத்தில் பிரசுரிக்கப்பட்டு, குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா அவர்களால் பரிசளித்துப் பாராட்டப்பட்டது]

    [காட்சி:

    ஓர் இளநீர் கடை. பக்கத்தில் இளநீர் + தேங்காய் சாப்பிட்ட பிறகு எறியப்பட்ட எச்சில் ஓடுகள். அவற்றில் உள்ள சிறிய தேங்காய்களைச்சுரண்டித்தின்னும் ஓர் ஏழைச்சிறுவன்.

    இளநீர் அந்த ஏழைச்சிறுவனைப்பார்த்து, இப்போ பேசுவதாக கற்பனை செய்து ஓர் கவிதை]


    குறும்பையாய இருந்தோம்!

    குளுமையாய் வளர்ந்தோம்!!


    உச்சியில் இருந்தோம்!

    உருண்டு விழுந்தோம்!!


    வண்டியில் ஏற்றினர்!

    வழியில் நிறுத்தினர்!!


    பாயை விரித்தனர்!

    பாங்காய் பரப்பினர் !!


    அளவாய்ப் பிரித்தனர்!

    அழகாய் அடுக்கினர்!!


    பலரும் வந்தனர்!

    பார்த்து மகிழ்ந்தனர்!!


    ஒருசிலர் வந்தனர்!

    உடைக்கக் கோரினர்!!


    சீவப்பட்டோம் !

    சிந்தினோம் கண்ணீர்!


    இளநீர் என்றனர்!

    இனிமையாய்க் குடித்தனர்!!


    வழுக்கை என்றனர்!

    வழித்து உண்டனர்!!


    எறியப்பட்டோம்!

    எச்சில் ஓடாய் !!


    என் கதைக் கேட்டாய்!

    உன் காது செவிடோ!!


    வழித்தது போதும்!

    விழித்தெழு கண்ணா!!


    உழைத்தால் உணவு!

    உண்டு இந்த உலகில்!!

    -oOo-
    :

    அன்புடன் கோபு

    ReplyDelete
    Replies
    1. மிக மிக அருமையான பாடல் ஐயா. தன்னம்பிக்கையூட்டும் வரிகள். மிகவும் மகிழ்ந்தேன். தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

      Delete
  7. தென்னங் கீற்றில் தென்றல் வந்து மோதும் என அறிவேன், இங்கோ கவி பாடும்!
    ஆழ குழி தோண்டி அதிலே ஒரு முட்டை இட்டு அண்ணாந்து பார்த்தால் தொண்ணூறு முட்டை.. -அது அப்போ
    இப்போ – Cement பூசி அந்த எடமே மொட்டை!!

    சிறப்பு, வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. இப்ப எங்கங்க பசங்க மண்ணில் எல்லாம் விளையாடுறாங்க. அதுவும் அப்போ..

      Delete
  8. தென்னையில்
    கீத்தும் ஒரு கதை சொல்லும்.
    விழும் நிழலுமே
    நூறு படிக்கும்.....

    தென்றலாய் கவிதையும் படித்து
    பாடமும் நடத்தும்..!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  9. பேருக்குத்தான் தோப்புத்தெரு
    பெயருக்கு ஒரு மரமில்லையடி.

    நல்ல வரிகள் இப்போதைய இயல்பும் அது தான்

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க இயல்பும் இது தான்... தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  10. தென்னம் பிள்ள நல்ல பிள்ள .
    அந்த பிள்ளையைப் பற்றி அழகாய்ச் சொன்ன
    நீங்களும் நல்ல புள்ள.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  11. தேவார பாட்டுச்சத்தம்
    தென்னங்காற்றில் கேட்கும் கூட்டம்
    உருண்டோடும் சைக்கிலுந்தான்
    இளைப்பாரும் நிழலில் நித்தம்...//

    தென்னைமரம் சல சலப்பது தேவார பாட்டுச்சத்தம் அருமை.
    வழியில் செல்வோருக்கு இளைப்பாரும் நிழல் இல்லாமல் போனது வருத்தமே!

    எங்கள் வீட்டில் வளர்த்த தென்னை மரம் அடுத்தவீட்டு ஓட்டிற்கு இடைஞ்சல் என்று சொன்னதால் வெட்டும் படி ஆச்சு அப்போது நாங்கள் பட்ட வேதனை சொல்லி முடியாது. தண்ணீரும், உரமும் போட்டு காய்ந்து குலுங்கும் மரத்தை வெட்ட மனது கல்லாய் தான் இருக்க வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க ஊருக்கு சமீபத்தில் சென்று மரங்களை காணவில்லையென்றதும் நான் பட்ட துன்பத்திற்கு அளவேயில்ல..

      Delete
  12. மிக மிக அருமை
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க ஐயா.

      Delete
  13. இந்த இன்பம் இன்னும் உண்டு எம்மூரில்... ஆனால் நானோ பாலைவனத்தில்

    ReplyDelete
    Replies
    1. இதுவும் கொடுமை தான் விட்டு விலகியிருப்பது.

      Delete
  14. ஆஹா... அருமை அக்கா...
    தென்னையை அழகாக சொல்லி கடைசியில் பேருக்குத்தான் தோப்புத்தெரு பெயருக்கு ஏற்றாற்போல் ஒரு மரமுமில்லைன்னு நடப்பைச் சொல்லி முடிச்சிட்டிங்க..

    ReplyDelete
    Replies
    1. உண்மை நிகழ்வுப்பா..வலி இருக்கத்தானே செய்கிறது.

      Delete
  15. சபாஷ்!!
    அள்ளிச் செல்கின்றது கிராமத்துத் தென்றல்!...

    இனிக்க இனிக்க நாள்முழுதும் கேட்க வைக்கும் பாடல் சசிகலா! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. அந்த தென்னங்கீற்றின் அரவணைப்பை எங்கே தேடுவேன் ?

      Delete
  16. தொலைத்தவற்றின் பெருமையெல்லாம் வளர்த்தவர்க்கே தெரியும். கண் முன் அழிந்துக்கிடப்பது மனதை கனக்கத்தான் செய்யும்.

    ReplyDelete
    Replies
    1. என் வருத்தத்திற்கு அளவேயில்லங்க.

      Delete
  17. இயற்கையை அழிக்கும் ஒவ்வொருவரும் வெட்கி உண்மை உணரவேண்டிய தருணம். நெகிழவைக்கும் கவிதை. நன்று சசிகலா.

    ReplyDelete