Monday 19 August 2013

உழைக்கும் வர்க்கத்தை காணோமடி !

உழைக்கும் வர்க்கத்தை காணோமடி
எங்கும் கண்டால் சொல்வாயடி.

நத்தைபோல் முதுகில் சுமந்திடுவார்
நடந்தே தொழிலிசை பாடிடுவார்

மாதமிருமுறை வந்திடுவார்
மழுங்கிய பொருளை கூர்தீட்டிடுவார்.

யாதும் ஊரென்றே சென்றிடுவார்
யாரும் கேட்க பணி செய்திடுவார்.

எஞ்சியது அவர்கென்றும் உழைப்பே
எடுப்பு சாப்பாடும் சிலநாள் மறுப்பே.

வானக் குடையின் கீழ் வாழ்ந்திடுவார்
வறுமை ஆடையையே சூடிடுவார்...

இவர்களை...
தேடித் திரியும் கண்கள் தாராளம்
தேங்கிக் கிடக்கும் பொருளோ ஏராளம்

களை எடுத்த ஒரு கூட்டம்
காணாமல் போன சங்கதியாய்
இவர்களும்...
களவு கொடுத்திருப்பாரோ...?
உழைப்பை நூறு நாள் வேலைக்கு...?

41 comments:

  1. அருமையான கவிதை தென்றல் சசிகலா. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  2. உலக ஓட்டத்தில்
    உடலுழைப்பு
    உதவாதென
    முடிவெடுத்தனரோ

    ReplyDelete
    Replies
    1. அப்படியும் இருக்கலாம்.

      Delete
  3. // களை எடுத்த ஒரு கூட்டம்
    காணாமல் போன சங்கதியாய்
    இவர்களும்... //

    நிச்சயம் இருக்கலாம்...

    ReplyDelete
  4. நம்மிடமும் யூஸ் அண்ட் துரோ கலாச்சாரம்
    பரவி விட்டதால் நமக்கும் கூர் தீட்டும் அவசியம்
    இல்லாது போனதால் அவரும் காணாது போய்விட்டார்
    என் நினைக்கிறேன்
    படமும் அதற்கான பதிவும் அற்புதம்
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மிகச்சரியாக சொன்னீர்கள் ஐயா.

      Delete
  5. நூறு நாள் வேலை.....
    கொஞ்சம் நீயா நானாவில் கேட்டேன்...நாட்டுப் பிரச்சனையை...
    அலசுதல் நன்று.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. இந்த கவிதையை படித்து விட்டு நண்பர் ஒருவர் நீயா நானா பார்த்திங்களா என்றார் அப்போதே எனக்கு தெரியும் நூறு நாள் பற்றிய விவாதம் நடந்தது.

      Delete
  6. காலமாற்றம் அறிவாயடி சசியே
    காகமும் கரைவதை காணோமடி..!

    மாற்றங்கள் வேண்டி மனிதனின் பயணம்
    இதில் எங்கே தேடுவது பழமையை ..!

    அழகிய கவிதை வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. பழமையை எங்கே தேடுவது உண்மை தான்.

      Delete
  7. வணக்கம்
    சசிகலா

    படித்தேன் ரசித்தேன் அருமையான கவிதை வாழ்த்துக்கள்
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வணக்கம். தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  8. கவிதை அழகு, வாழ்த்துக்கள்
    உழைப்பை மதித்த அவர்களை, பிச்சைகாரனைவிட கேவலமாக மதித்த நம் சமூகத்தையும் சேர்த்து சொல்லியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. உழைக்கும் வர்க்கத்தை கேவலமாக பார்க்கும் சமூகம் இருக்கத்தான் செய்கிறது என்ன செய்வது ?

      Delete
  9. உழைத்தவர்களை வாழ்த்துவோம்.

    நாள்வீதம் புதிது புதிதாக பொருட்கள் விற்பனைக்கு வர வாங்குகின்றோம்.கத்தி ஷாப்னரும் வீடுகளுள் வந்துவிட்டது.

    ReplyDelete
    Replies
    1. கத்தி ஷாப்னரா ? புதிதாக இருக்கே.

      Delete
  10. புத்தி மழுங்கிப்போனவர்களுக்கு கத்தி தீட்டிப் பயனில்லை என்று காலம் உரைத்த சேதி கேட்டு கலங்கிப்போய் காணாமற்போனார்களோ அவர்கள்! மனம் தொட்ட கவிதை. பாராட்டுகள் சசிகலா.

    ReplyDelete
    Replies
    1. அப்படியும் இருக்குமோ ?

      Delete
  11. களை எடுத்த ஒரு கூட்டம்
    காணாமல் போன சங்கதியாய்
    இவர்களும்...
    களவு கொடுத்திருப்பாரோ...?
    உழைப்பை நூறு நாள் வேலைக்கு...

    -------

    அருமை...
    மனம் தொட்ட கவிதை.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  12. அப்ப வெயிட் பண்ணுங்க.. நூற்றியோராவது நாள் வருவாரு..

    ReplyDelete
  13. வாழ்த்துக்கள் சசிகலா.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  14. களவு கொடுத்திருப்பாரோ...?
    உழைப்பை நூறு நாள் வேலைக்கு...?//
    எங்கள் வீட்டுக்கு அருமையான காய்கறி கொடுத்து வந்த அம்மாவையும் காணவில்லை.
    100 நாள் வேலைக்கு போய் விட்டார்கள்.

    ReplyDelete
    Replies
    1. 100 நாள் வேலை உழைப்பவர்களை சோம்பேறியாக்கிவிட்டது போலும்.

      Delete
  15. அன்புத் தங்கை சசிகலா...
    நலமா?
    அருமையான கருவுண்ட கவிதை...
    உழைத்து உழைத்து போதிய ஊதியம் கிட்டாது
    குழைந்து போனாரோ...
    எங்கெங்கு காணினும் கண்களில்
    மணியாய்த் தெரியும் உழைக்கும் வர்க்கம் வாழவேண்டும்...

    அருமையான கவிதை சகோதரி
    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
    Replies
    1. நலமே அண்ணா. நீங்க மற்றும் வீட்டில் அனைவரும் எப்படி இருக்காங்க ?

      Delete
  16. கத்தியை தீட்டாதே புத்தியை தீட்டு என்று யாரவது அவர்களுக்கு சொல்லி கொடுத்திருப்பார்களோ என்னவோ?

    ReplyDelete
    Replies
    1. நல்லா சொன்னாங்க போங்க.

      Delete
  17. இந்த வார நீயா நானாவில் விவாதிக்கப்பட்ட இந்த நூறு நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தை மையாக வைத்து அழகாக உழைப்பின் நுகர்வை கவிதை மூலம் தந்திருக்கிறீர்கள்... அருமை..

    ReplyDelete
    Replies
    1. அந்த நிகழ்ச்சியை நான் பார்க்கவேயில்லங்க. உண்மையாகவே சானை பிடிப்பவர்களை தேடிக்கொண்டு எழுதியது.

      Delete
  18. தேடித் திரியும் கண்கள் தாராளம்

    தேங்கிக் கிடக்கும் பொருளோ ஏராளம்



    களை எடுத்த ஒரு கூட்டம்

    காணாமல் போன சங்கதியாய்

    இவர்களும்...

    களவு கொடுத்திருப்பாரோ...?

    உழைப்பை நூறு நாள் வேலைக்கு...?//

    அற்புதம்! இரசித்தேன்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  19. நன்றிங்க ஐயா.

    ReplyDelete
  20. உழைப்பிது ஊரில் உதவுமோ வென்று
    பிழைப்பது போயிற் றகர்ந்து!

    அருமை! சிறப்பான சிந்தனைக்க கவிதை தோழி!
    வாழ்த்துக்கள்!

    என் வருகைதான் வழமைபோல் தாமதம்...:(

    ReplyDelete
  21. உழைப்பாளி சுமக்கின்ற உலகமிது அவன் ஓய்ந்து விட்டால் உலகம் சாய்ந்துவிடும் கூர் தீட்டிய புத்தி உங்களிடம் இருக்கும் போது கத்தி தீட்டுபவனை எதற்காக தேடுகிறீர்கள் வெள்ளிக்கிழமைகளில் சென்னையில் எங்கும் பார்க்கலாம்

    ReplyDelete