Saturday 3 August 2013

மகிழ்வான தருணங்கள் ! (தொடர் பதிவு)

என் அருமை அக்கா (ராஜீ) முதலில் தொடர்பதிவெழுதும் போது மறந்துட்டாங்க போல நான் சும்மா இருக்காம நான் தப்பிச்சேன் தப்பிச்சேனு சொல்லிட்டு வந்தேன். இப்ப நல்லா மாட்டிவிட்டுட்டாங்க... என்ன செய்ய ...?

அலுவலக நேரத்தில் சக ஊழியர்கள் பேஸ் புக் என்று ஏதோ அரட்டை அடிப்பதை பார்த்திருக்கிறேன். சில முறை அங்கு ஒரு செய்தித்தாள் போல எல்லா நிகழ்வுகளும் உடனுக்குடன் தெரிந்து விடுவதை பார்த்தேன். பிறகே நண்பர்கள் சொன்னார்கள் நம் உடன் படித்த பள்ளி நண்பர்களையும் இதன் மூலமாக தேடலாம் என்று. 

எனக்கு எங்க ஊரில் இருந்து வந்ததில் இருந்தே ஒரு ஏக்கம் இருந்து வந்தது. மறுபடி உடன் படித்த நண்பர்களையும் அக்கம் பக்கத்து வீட்டில் இருந்த தோழிகளையும் மறுபடி எப்போது காண்போம் என்று. யோசித்தேன் நாமும் இப்படி ஒரு பகுதி ஆரம்பித்து நமது நண்பர்களை தேடலாம் என்று முடிவு செய்தேன்.  அதன் வழிமுறைகளையும் கேட்டு முதலில் பேஸ் புக் மூலமாகவே கவிதைக்கு நான் அறிமுகமானனேன். 

முதன் முதலாக எனது கவிதை அழகான வரிகளுக்கு ஏற்ப படங்களுடன் தமிழ்த்தாயகம் என்ற குழுவில் இருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் சென்றது. அதுவே எனக்கு முதலில் கிடைத்த முதல் பதிவின் மகிழ்ச்சி அந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அக்காவிடம்  மெயில் அனுப்பி பார்க்க சொன்னேன். சக நண்பர்களின் பாராட்டுக்கு அளவேயில்லை.  கிராமத்து நினைவு என்ற தலைப்பில் வெளியான அந்த கவிதையை இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.

மாமரத்து குயில் ஓசை 
மஞ்சு விரட்டிய மைதானம் 
மலர் தேடும் வண்டு

ஊஞ்சல் ஆடி விழுந்த ஆலமரத்தடி ..
ஒரே ஒரு முறை ஊருக்குள் வந்து 
போகும் ஒற்றை பேருந்து 


குளிக்க பயந்து 
குதித்தோடிய 
குட்டித் திண்ணை 


திருவிழாக் கூட்டத்தில்  
தொலைத்த  பகைமை 


தினம் தினம் 
நீச்சல் 
பழகிய ஆழ்கிணறு 


ஆற்றங்கரையில் ஆக்கிய 

கூட்டாஞ்சோறு 
ஆயாவின் சுருக்குப்பை 
இப்படி எதுவும் இந்த பட்டினத்தில்  இல்லை 
உன்னிடம் சுட்டிகாட்டி மகிழ...

மகிழ்வுடன் 
சசிகலா


நான் எதிர்பார்த்த நண்பர்களை தேட முடியவில்லை என்றாலும். புதிய நண்பர்கள் சிலர் அல்ல பலர் கிடைத்தனர். பிறகு ஒரு நாள் கவிதைகளை தேடித்தேடி படித்துக்கொண்டிருந்த போது .. வசந்த மண்டபம் மகேந்திரன் அண்ணா அவர்களின் வலை என்று தெரியாமலே அவர் வரிகளை படித்து நாமும் இப்படி பதிவிட என்ன வழிமுறை இருக்கும் என்று அறியும் ஆவலுடன் அங்கு தொடர்புக்கு என்ற பக்கத்தில் இருந்த அண்ணாவின் மெயில் ஐடிக்கு மெயில் அனுப்பினேன். 

உடனே பதில் மெயிலும் அலைபேசி எண்ணும் தந்து உதவி செய்வதாக சொன்னாங்க. என்ன பெயர் தங்கள் தளத்திற்கு என்று கேட்டதும் எனக்கு என்ன சொல்வது என்று தெரியிவல்லை. சட்டென தென்றலாய் நம் வரிகள் படிப்பவர்களை சென்றடையட்டும் என்றே தென்றல் எனும் பெயரை சொன்னேன். அப்படியே தென்றல் தளத்தை ஆரம்பித்தும் கொடுத்தாங்க.  அண்ணாவிற்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை.

மகேந்திரன் அண்ணாவின் வலை மூலமே நிறைய நண்பர்களின் வலை பக்கங்களுக்கு சென்று படித்து கருத்தும் சொல்லி வ்ந்தேன். எனக்கு முதலில் பின்னூட்டமிட்டு வாழ்த்தியது அண்ணா பிறகு ரமணி ஐயா அந்த பின்னூட்டங்கள் தான் எனை தொடர்ந்து எழுத வைத்தன. ரமணி ஐயாவிற்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன.

முதன் முதலில் எனை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திய மதுமதி அவர்களுக்கும் நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை. வலைச்சரம் என்றால் என்ன என்றே தெரியாத எனக்கு விளக்கங்கள் சொல்லி பதிவிடுவது பற்றிய நிறைய தகவல்கள் சொன்னதோடு மட்டுமல்லாமல் தளத்தை புதுப்பிக்கவும் செய்தார். வலைச்சரம் என்பது நாம் பின்னூட்டம் மிட்டு படித்து வரும் வாசகி என்றே நினைத்திருந்த எனையும் சகோதரர் கணேஷ் சீனு ஐயாவிடம் பேசி ஒரு வார ஆசிரியராக பதிவுகள் பகிரச் செய்த சகோவிற்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இப்படியே நான் நன்றி சொல்ல ஆரம்பித்தால் முடிவே இருக்காது.... என்பதால் தொடர்ந்து தென்றல் தளத்திற்கு வருகை தந்து எனை உற்சாகப்படுத்தும் அனைத்து உறவுகளுக்கும் தோழமைகளுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து முதல் பதிவின் சந்தோஷத்தை பகிர நானும் நண்பர்களை அழைக்கிறேன்.


58 comments:

  1. என் அருமை அக்கா (ராஜீ) முதலில் தொடர்பதிவெழுதும் போது மறந்துட்டாங்க போல
    >>
    மறக்கலாம் இல்ல. எப்பவும் உன்னையும், கணேஷ் அண்ணாவையும், அமெரிக்கா தம்பியையுமே கூப்பிட்டுக்கிட்டு இருந்தா குடும்ப பதிவர்கள்ன்னு நம்மளை ஒதுக்கி வச்சுடுவாங்கன்னுதான் கூப்பிடலை.

    ReplyDelete
    Replies
    1. @ராஜி நீங்க மட்டும் மீண்டும் என்னை தொடர்பதிவிற்கு அழைத்து இருந்தால் நம்ம குடும்பத்தில் பெரிய சண்டையே வந்து இருக்கும்

      Delete
    2. சும்மா சொன்னே அக்கா கோவிக்காதிங்க.

      Delete
  2. கிராமத்து நினைவு அருமை...இணைத்துள்ள படங்கள் பகிர்வில் வருகிறதா என்று அடுத்து கருத்து சொல்வார்கள் சொல்ல வேண்டும்...

    வாழ்த்துக்கள் சகோதரி...

    ReplyDelete
    Replies
    1. படங்கள் ஏன் தெரியவில்லை என்று தெரியவில்லை...

      Delete
  3. அருமையான அழகான பதிவு. பாராட்டுக்கள்.

    தொடர்பதிவிட என்னையும் அழைத்துள்ளதற்கு மிக்க நன்றி.

    எனக்கு நேரம் கிடைக்கும் போது கட்டாயமாக பதிவிட முயற்சிக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க ஐயா.

      Delete
  4. தொடர்பதிவு மனந்தொட்ட பதிவு. மண்மணத்தோடு முதல் கவிதையூர்வலம் தென்றலாய் மனந்தழுவும் நேசம். பாராட்டுகள் சசிகலா.

    ReplyDelete
  5. ஒரு நல்ல கவிஞரை வலையுலகத்தில் தன் கவிதை மூலம் ஆளுமை செய்ய, உதவிய வசந்த மண்டபம் மகேந்திரன் அவர்களுக்கு நன்றி சொல்லியாக வேண்டும். பதிவை இரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க நன்றி சொல்லியே ஆக வேண்டும் அண்ணாவிற்கு..தங்களுக்கும் நன்றிங்க.

      Delete
  6. . வசந்த மண்டபம் மகேந்திரன் அண்ணா யாருங்க அவர். அவர் விலாசம் இருந்தா சொல்லுங்க....அவர் மட்டும் உங்களுக்கு உதவி செய்யாமல் இருந்திருந்தால் நாங்கள் இப்படி கவிதையில் மாட்டி கஷ்டப்பட வேண்டி இருக்காதே... பாவி மனுஷன் உதவி செய்ய வேண்டியதுதான் ஆனா கொஞ்ம் கூட யோசிக்காமல் உதவி செய்து இப்படி எல்லோரையும் கவிதையால் சாக அடிக்க வழி பண்ணி கொடுத்து இருக்காரே. ஹும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

    ReplyDelete
    Replies
    1. அவர் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்... ஹஹ எப்பூடி நானும் எங்க அண்ணனும் சேர்ந்து செய்த ஐடியாவாச்சே..

      Delete
  7. Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க .

      Delete
  8. முதல் கவிதை அருமை. முதலுக்கே எப்போதும் மரியாதை உண்டு.பாராட்டுக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க .

      Delete
  9. சொல்லிச் சென்றவிதம் அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க ஐயா.

      Delete
  10. இதென்ன தொடர்பதிவு சீசனா?
    இணைத்திருக்கும் படங்கள் (விடியோவா?) எதையும் பார்க்கமுடியவில்லையே? தளமேற மறுக்கின்றன.
    கிராமத்து நினைவு - மிகவும் ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. சீசன் தான் போல... படங்கள் ஏதோ சதி செய்து விட்டன.

      Delete
  11. கிராமத்து மண்வாசனையுடன் அழகிய கவிதை.

    ReplyDelete
  12. அட, என்னையும் தொடர்பதிவு எழுத அழைத்திருக்கிறீர்களே... என்னுடையது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும்... திங்களன்று வெளியிடுகிறேன்... நன்றி..

    ReplyDelete
    Replies
    1. எழுதுங்க எழுதுங்க ஆவலுடன்...நாங்கள்.

      Delete
  13. மகிழ்வான தருணங்கள் அருமையா இருந்துச்சு

    தொடர்பதிவிட என்னை அழைத்ததற்கு நன்றி

    எழுதுகிறேன்

    ReplyDelete
    Replies
    1. எழுதுங்க எழுதுங்க ஆவலுடன்...நாங்கள்.

      Delete
  14. Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க ஐயா.

      Delete
  15. உங்களின் மகிழ்வான தருணங்கள்
    எங்களுக்கு மகிழ்வைத் தந்தது.
    வாழ்த்தக்கள் சசிகலா.

    ReplyDelete
  16. பதிவு நன்றாக உள்ளது.
    இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  17. இரண்டு நாள வெளியில் சென்றிருந்ததால் இணையப் பக்கம் வரவில்லை. இப்போதான் வந்தேன். எனது பின்னூட்டத்தில் தனபாலன் சார் தெரிவித்திருந்தார்...

    அக்கா என்னை மாட்டிவிட்டுவிட்டீர்களே.... சரி எழுதுவோம்...

    நல்லா எழுதியிருக்கீங்க... வாழ்த்துக்கள் அக்கா...

    ReplyDelete
    Replies
    1. எல்லோருக்கும் சென்று சொன்னேன். உங்க வலைப்பக்கம் எனக்கு வர முடியள ஏன் ?

      Delete
  18. தென்றலாய் மலர்ந்த
    தொடருக்கு வாழ்த்துகள்..!

    ReplyDelete
  19. அருமையான கவிதை படம் தோன்றவில்லை கவனியுங்கள் தென்றல் தொடரட்டும் இன்னும் மந்த மாருதமாக இதமான கவிதையுடன்.!

    ReplyDelete
    Replies
    1. படம் ஏன் தெரியவில்லை என்று தெரியவில்லைங்க.

      Delete
  20. This comment has been removed by the author.

    ReplyDelete
  21. சந்தோஷ கணங்களை நினைத்துப் பார்ப்பது எப்போதுமே மகிழ்வூட்டும் செயல்.

    என்னடா.... நடுநடுவே Join only for email என்று வருகிறதே என்று பார்த்தேன். படங்களா.... ? ஒன்றும் கண்ணுக்குத் தெரியவில்லை.

    ReplyDelete
    Replies
    1. படம் ஏன் தெரியவில்லை என்று தெரியவில்லைங்க.

      மகிழ்வான தருணங்களை நினைக்க வைத்த அக்காவிற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

      Delete
  22. அந்தக்காலத்து நினைவுகள்
    அந்தரங்கமாய் இல்லாமல்
    ஆரவாரம் போட்டுக்கொண்டு
    இன்னிசை மழை பொழிய
    ஈடில்லா உவகை பெருகுதே !

    சசிகலா கவிதைகள் அத்தனையுமே
    ரசி ரசி எனச் சொல்லும் வேளையிலே
    புசி புசி எனக்குரல் கொடுக்கும் என் பசியினையும் மறக்கச்செய்யும்
    நிசியிலே நான் படித்தேன். நின் கவிதைகளை நிதானமாய்.

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
    Replies
    1. பசியையும் மறந்து வாசித்தீர்களா ? ஐயா முதலில் ஆரோக்கியமே முக்கியம் பிறகு வாசித்து கருத்திடுங்கள். மிக்க மகிழ்ச்சி ஐயா. தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி. பதிவர் சந்திப்பில் சந்திக்கிறேன்.

      Delete
  23. இனிமையான கிராமத்து நினைவுகள்.... பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள் தோழி.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். மிக்க நன்றிங்க.

      Delete
  24. சுவாரஸ்யமான நினைவுகளை மீட்டெடுத்து பதிவாக்கியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள். உங்கள் அழைப்பை ஏற்று முதல் கணிணி அனுபவம் பற்றி நான் எழுதிய பதிவை வாசித்தீர்களா?

    http://kavipriyanletters.blogspot.com/2013/07/blog-post_4509.html

    ReplyDelete
  25. உங்களின் முதல் பதிவு அனுபவமும், முதல் கவிதையும் அழகு..படங்கள் தெரிகிறதே...இரண்டு படங்கள் எனக்கு பழைய பொங்கல் வாழ்த்துக்களை நினைவு படுத்தியது..மூன்றாவது கிராமத்துத் திருவிழா...

    ReplyDelete
  26. அக்கா தங்கள் அழைப்பை ஏற்று தொடர்பதிவை எழுதியாச்சு...
    அழைப்புக்கு நன்றி.

    http://vayalaan.blogspot.com/2013/08/blog-post_5.html

    ReplyDelete
  27. அழைப்புக்கு நன்றி மேடம்.தொடர் பதிவு பற்றி கொஞ்சம் விளக்கம் சொன்னால் தேவலாம்.

    ReplyDelete
  28. கவிதையும் அனுபவமும் ரசிக்கும்படி இருந்தது..

    ReplyDelete
  29. அருமையான கிராமத்து நினைவு கவிதை. படங்கள் அற்புதம்.

    ReplyDelete
  30. மகிழ்வான தருணங்கள் மிக அருமை.

    ReplyDelete
  31. சட்டென தென்றலாய் நம் வரிகள் படிப்பவர்களை சென்றடையட்டும் என்றே தென்றல் எனும் பெயரை சொன்னேன்.//

    அருமையான செலக்‌ஷன். உங்களுடைய பல பதிவுகளிலும் தென்றலின் குளுமை தெரிகிறது. இதுதான் என்னுடைய முதல் வரவு. அடிக்கடி வருவேன். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  32. வார்த்தைகள் இல்லை
    நன்றிகள் கூற...
    அடைப்பட்ட குயிலாக
    என் குயிலோசை ...
    என் முகநூல் பக்கத்தில் மட்டுமே
    பதிவிட்ட என் வரிகளை வலைபதிவு தொடங்கி
    அதில் பதிவிடும் முறையும் சொல்லிக்கொடுத்த அன்பான சசிகலா அவர்களுக்கு ....
    வார்த்தைகள் இல்லை " நன்றிகள் " கூற
    அவர்களின் ஆசி எப்போழுதும் என்னுடன் இருக்க வேண்டும் என்ற ஆசையுடனே ....
    அவர்கள் வலைத்தளத்திற்கு என்னா பெயர்
    வைக்க வேண்டும் என விருப்பம் கேட்டப்போது
    அவர்களின் தொடராகவே இருக்க விரும்பிய நான்
    தென்றல் என்ற பெயர் வருமாறு இருக்கும் படி வேண்டி கேட்டுக்கொண்டேன் பல பெயர்கள் கூறினாலும் அவர்களின் ஆசியோடுவே"தென்றலின்வாசம்" என்ற பெயர் அமைந்து விட்டது...
    *எங்கு குருவின் ஆசி உள்ளதே அங்கு தடைகள் ஏற்படாது *என்ற சொல்லுக்கு ஏற்ப...
    அவர்களின் வழிக்காட்டியா உள்ளவரை என் வழிப் பயணம் தடையில்லை என்பதில் எனக்கு ஐயம்மில்லை...
    அன்பான **தென்றல் சசிகலா** அவர்களுக்கு நன்றிகள் இல்லை பனிவான வணக்கங்கள் மட்டுடனே நான்...

    ReplyDelete
  33. ஆயிரமாவது பதிவுக்கு வாழ்த்தி
    சிறப்பித்தற்கு மனம் நிறைந்த
    இனிய அன்பு நன்றிகள்..!

    ReplyDelete
  34. அன்புடையீர்,

    நேற்று இரவு நெடுநேரம் முயற்சித்தும் உங்கள் பதிவுப்பக்கம் எனக்குக் கிடைக்காமலேயே போய் விட்டது.

    ஆயிரமாவது பதிவுக்கு வருகை தந்து வாழ்த்துக்கூறியுள்ளதற்கு என் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    நேரமிருந்தால் முடிந்தால் இந்த கீழ்க்கண்ட சிறப்புப் பதிவுக்கும் வருகை தாருங்கள்:

    http://gopu1949.blogspot.in/2013/08/blog-post.html

    அன்புடன் VGK

    ReplyDelete
  35. அன்புடையீர்,

    வணக்கம்.

    என் வலைத்தளத்தில் “ஆடி வெள்ளிக்கிழமை” யாகிய இன்று

    ”அறுபதிலும் ஆசை வரும்”

    என்ற தலைப்பினில் ஓர் சிறப்புப்பதிவு
    வெளியிடப்பட்டுள்ளது.

    இணைப்பு இதோ:

    http://gopu1949.blogspot.in/2013/08/blog-post_15.html

    இந்த என் பதிவு டேஷ் போர்டில் ஏனோ தெரியாமல் இருப்பதால் தங்களுக்கு இந்த மெயில் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

    செளகர்யப்பட்டால் வ்ருகை தந்து கருத்துக்கள் கூறுமாறு அன்புடன் அழைக்கிறேன்.

    இப்படிக்கு தங்கள் அன்புள்ள,
    வை. கோபாலகிருஷ்ணன்

    ReplyDelete