Sunday 1 September 2013

பதிவர்கள் அனைவரும் வரிசையில் வருக !

மதிப்பிற்குரிய வெளியூர் மற்றும் சென்னை பதிவர்களே எல்லாம் தயவுசெய்து வரிசையில் வாங்க.. வந்து...

நேற்று மாலை நிகழ்வு முடிந்ததும்.. யாரெல்லாம் கனவு கண்டுன்டே போயி கன்டக்டர் மேல வீழுந்திங்க.

யாரெல்லாம் அவங்க அவங்க பேருந்தை விட்டு.. வேறு பேருந்தில் சென்றது.

யாரெல்லாம் இறங்க வேண்டிய நிறுத்தத்தை விட்டு அடுத்த ஊர் போனது.

மிகச்சரியாக ஊர் போய் சேர்ந்தவர்களும்..

வரிசையாக வந்து பின்னூட்ட மிட்டு செல்லவும்.

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயங்க.. குளிர் சாதன அறையில் மட்டும் நிகழ்ச்சி நடந்திருந்தால் மண்டபத்தார் விரட்டும் வரையில் அங்கு தான் அனைவரும் இருந்திருப்போம் என்பது நிச்சயம்... அத்தனை வெயில் தாக்கத்திலும் வேர்க்க விறுவிறுக்க விழா இறுதி வரை ஆர்வம் குறையாது கலந்து கொண்ட அனைத்து பதிவுல நண்பர்களுக்கும்.. தோழர் தோழிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நேற்றை நிகழ்வைப் பற்றி எழுத எண்ணங்கள் அலைமோதினாலும் அதற்கு தகுந்த நேரம் இது அல்ல எல்லாம் கனவில் இருப்பிங்க.. அதனால விரிவா பிறகு எழுதுகிறேன். இன்று வருகை பதிவேடு மட்டும்.

ஒரு சந்தேகமுங்க நம்ம ராஜீ அக்கா தான் மைக் எப்ப கிடைக்குன்னு காத்திருந்து விடாப்பிடியா பிடிச்சுட்டாங்க அவங்க மேடையில் இருந்து இறக்க விசில் கைததட்டல் என எல்லாம் பறந்தது.. நான் என்னங்க சொன்னேன் என் பெயர் சொன்னது குற்றமா..? (நகைச்சுவைக்காக)

54 comments:

  1. // அவங்க மேடையில் இருந்து இறக்க விசில் கைததட்டல் என எல்லாம் பறந்தது. //

    இல்லீங்க எங்க அக்காவ பேச சொல்லி தான் கைதட்டினோம்... அக்காவின் பேச்சு இன்ப தேன் வந்து பாய்ந்தது காதினிலே.... அக்கான்னா சும்மவா...

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க அப்படி கைத்தட்டல் இல்லையென்றாலும் நன்றாக இருக்காது.

      Delete
  2. இந்த கைதட்டலுக்கெல்லாம் அசர்ற ஆளா ராஜி? ஆனா பாவம் பழனி கந்தசாமி சார்தான் கைதட்டல் கேட்டதுமே பேச்சை நிறுத்திட்டார்:(

    இந்த மாதிரி விசில், கைதட்டல் எல்லாம் இந்த ஜெனெரேஷனோட கண்டுபிடிப்பு பாராட்டறதுக்கும் அதுதான் விரட்டறதுக்கும் அதுதான். என்ன பண்றது இது எங்க தலைமுறை ஆளுங்களுக்கு புரியமாட்டேங்குதே! அதனாலதான் நா ஒரேயொரு நிமிசம் மட்டும் பேசினேன். தருமியும் அப்படித்தான். பெண் பதிவர்களிலும் ராஜியைத் தவிர வேறு எவரும் அதிக நேரம் பேசவில்லையே.

    ReplyDelete
    Replies
    1. நேற்று நம்ம உறவுகள் உற்சாகப்படுத்தவே அப்படி கைதட்டல் விசில் அடித்தார்கள் அப்படியில்லையென்றாலும் கலகலப்பாக இருந்திருக்காது..

      Delete
  3. //அதனால விரிவா பிறகு எழுதுகிறேன்.//

    மேடம்ஜி சீக்கிரம் அப்டேட்டுங்க ....! அயம் வெயிட்டிங் ...!

    ReplyDelete
    Replies
    1. மேடம் சொல்லாதிங்க.. நானும் உங்கள் தோழமையே.

      Delete
  4. நாங்க எங்க ஊருக்கு வந்து சேருவதற்குள் பதிவை போட்டாச்சு...சுடச் சுடவா....

    ReplyDelete
    Replies
    1. இது ஓவரு நான் பதிவிட்டு பத்து நிமிடம் கூட ஆகவில்லை.. நலமாக சென்று சேர்ந்தீர்களா என்பதை விசாரிக்கவே இந்த பகிர்வு தோழி. தங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.

      Delete
  5. இன்று வருகை பதிவேடு மட்டும்.
    வாழ்த்துகள்..!

    ReplyDelete
    Replies
    1. வருகை பதிவேடு செய்தமைக்கு நன்றிங்க.

      Delete
  6. ஆஹா தொடர்ந்து எழுது சசி...

    எல்லோரும் சந்தோஷமா நேற்றைய நாள் பதிவர் மாநாட்டில் கலந்துக்கொண்டு சிறப்பித்தது சந்தோஷம்பா....

    மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள்...

    இன்னைல இருந்து எல்லார் வலைப்பூவிலும் இதே தான் பேச்சா இருக்கும்.. எல்லா வலையிலும் ஒரு ரௌண்ட் போயிட்டு வந்துரலாம்..

    ReplyDelete
    Replies
    1. ஆமா அக்கா இது சந்திப்பு வாரம்...

      Delete
  7. அட்டெண்டன்ஸ் கொடுத்தாச்சு.

    அதனால விரிவா பிறகு எழுதுகிறேன்.

    விரிவான பதிவு எழுதுங்க

    ReplyDelete
    Replies
    1. நீங்களும் எழுந்துங்க...

      Delete
  8. ஆஹா...!

    தொடருங்கள் சகோதரி...

    waiting...

    ReplyDelete
    Replies
    1. நீங்க எல்லாம எழுதுவதை படிக்கும் ஆவலில் நானும் இருக்கிறேன்..

      Delete
  9. பதிவர் திருவிழா விவரங்களை விவரமாக பொறுமையாக எழுதுங்க சசி. நேரடி ஒலிபரப்பு காலை வாரிவிட்டது. அதனால் அங்கு என்ன நடந்த்து என்று எதுவும் தெரியவில்லை. அறியும் ஆர்வத்திலிருக்கிறேன். நன்றாக நடந்தது என்பதை அறிய மிக்க மகிழ்ச்சி.

    ReplyDelete
    Replies
    1. நிறைய பேர் இப்போது எழுதுவாங்க என்று நான் இப்ப எழுதவில்லை... கண்டிப்பாக எழுதுகிறேன்.

      Delete
  10. வணக்கம்
    சகோதரி

    பதிவர் சந்திப்பு சிறப்பாக நடை பெற்றதை இட்டு மிக மகிழ்ச்சியாக உள்ளது அங்கு என்ன நடைபெற்றது பற்றி வரிவாக எழுத தொடங்குங்கள் வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. நான் எதுவும் புகைப்படம் இந்த முறை எடுக்கவில்லை... விரைவில் அங்கங்கு பதிவர்களிடம் கடன் வாங்கியாவது எழுதுகிறேன்.

      Delete
  11. மிக்க சந்தோஷம் சசி!.. விழா சிறப்பா நடந்திருக்குன்னு உங்க முன்னோட்டப் பதிவே சொல்லுது.
    சகோதரி கீதமஞ்சரி சொன்னதையே
    //நேரடி ஒலிபரப்பு காலை வாரிவிட்டது.//
    நானும் சொல்கிறேன்..

    ஆகையால் விழா சுவாரஸ்யங்களைச் சுவைக்கக் காத்திருக்கிறேன் நானும்..:)

    தொடருங்கள்....

    ReplyDelete
    Replies
    1. விழா சுவார்யஸ்த்திலும் நடுவில் நீங்க அழைத்து பேசியது இன்னும் ஆனந்தமாக இருந்தது எங்களுக்கு தோழி..

      Delete
  12. பதிவர் விழாவில் தங்களைச் சந்தித்து அளவளாவ இயன்றதில் மகிழ்ச்சி.

    புலவர் இராமனுசம் அவர்களின் உரை பேச்சாற்றலின் உச்சத்திற்கு எமை அழைத்துச்சென்றது.ச்
    என்றால், நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிய திரு சசிரேகா அவர்களின் சொல் வன்மை
    சுகமாய் இருந்தது.

    எனினும் சென்ற அவையில் அறிமுகங்களின் போது காணப்பட்ட நகைச்சுவை பெரிதும் இல்லை.
    ராஜி அவர்களை மேடையில் பேசுகையில் இடைமறித்தல் போன்று சீட்டி ஒலிகள், கை தட்டல்கள்
    அவரைச் சார்ந்த நண்பர் குழாம் ஒரு படையாகவே வந்திருந்தது போல தோன்றியது. காணாமல் போன‌
    கனவுகள் என்பது அவர்கள் வலை என்றால், கேளாமல் சென்ற அவரது பேச்சு அவரது வலையில்
    என்றாவது ஒரு நாள் தன் வலையில் இடுவார் என நினைக்கச்செய்தது.

    விழா நடக்கும் இடத்தின் வெப்பம் காரணமாக, அங்கே அமர்ந்து திரு பாமரன் அவர்கள் உரையினைக் கடைசி வரை
    தொடர்ந்து கேட்க இயலவில்லை. மேலும் நிகழ்ச்சிகளை வீட்டுக்கு சென்று கணினியில் நேரடி ஒலிபரப்பில்
    கேட்கலாம் என நினைத்தேன். உடன் திரும்பிவிட்டேன்.

    ப்ளாக்கர் நேற்று மாலை முதல் திறக்கவில்லை. இன்று காலை தான் திரும்பவும் திறந்தது.
    \
    தங்களது புத்தக வெளியீடு நல்ல முறையில் பாங்காக அமைந்திருக்குமென நம்புகிறேன்.

    மேன்மேலும் எழுதுங்கள்.
    எதிர்கால சந்ததியருக்கு ஒரு இதிகாசமாக திகழுங்கள்.

    ஆசிகளுடன்,
    சுப்பு தாத்தா.

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க ஐயாவின் தனிமையை முதுமையை விரட்டும் ஆயுதமாக அன்பான உள்ளங்களாக நாமும் வலையும் இருப்பது குறித்து பேசியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
      தங்களிடம் சிறிது நேரம் பேசினாலும் தாங்கள் பேசிய இல்லத்து அரசிகளை பற்றிய தகவல் மிகவும் சந்தோஷமாக இருந்தது.

      தங்களின் கவிதைஆர்வமும் பிடித்த வரிகளை மெட்டு அமைத்து பாடுவது குறித்து சொன்னதும் கேட்பதற்கு இனிமையாக இருந்தது. எழுதுபவர்களுக்கு உற்சாகம் தரும் இந்த செயலை தொடர்ந்து செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். மிகக நன்றிங்க ஐயா.

      Delete
  13. சசி..சீக்கிரம் படங்களுடன் பதிவிடுங்க..வெயிட்டிங்...

    ReplyDelete
    Replies
    1. படங்கள் என்னிடம் எதுவும் இல்லங்க.. இருங்க எங்காவது நண்பர்களிடம் வாங்கி பதிவிடுகிறேன்.

      Delete
  14. சென்னை தமிழ் வலைப்பதிவர்கள் திருவிழா பற்றிய தங்களின் வருகைப் பதிவேட்டிற்கு நன்றி! விரிவான பதிவை விரைவில் தரவும்.

    ReplyDelete
    Replies
    1. இந்த நேரம் பதிவுகள் வந்திருக்கும் என நினைத்தேன். சரிங்க விரைவில்..

      Delete
  15. நேரடி ஒளிபரப்பு சதி செய்த நிலையில்
    நீங்களுமா ? தேவை. தேவை. விரைவில்
    விரிவான பதிவு தேவை.

    ReplyDelete
    Replies
    1. படங்கள் இல்லங்க விரைவில்...

      Delete
  16. //அவங்க மேடையில் இருந்து இறக்க விசில் கைததட்டல் என எல்லாம் பறந்தது.. //

    அவங்க மேடை ஏறியதும் முதல் கைதட்டல் தட்டியவர்கள் கூட்டத்தில் நானும் ஒருவன். அது அவர்களை மேடையில் இருந்து இறக்க அல்ல.. சூப்பர்ஸ்டார் அல்லது "தல" மேடைக்கு வந்தால் எப்படி கரகோஷம் பறக்குமோ அப்படித்தான் அதை எடுத்துக் கொள்ள வேண்டும்..

    ReplyDelete
    Replies
    1. நானும் தவறாக சொல்லவில்லையே.. சும்மா காமெடிக்காக கேட்டேன்.

      Delete
  17. பதிவர் சந்திப்பில் நானும் அட்டெண்ட்ஸ் போட்டாச்சு! வெயில் கொடுமைதான் தாள முடியலை! உங்களிடம் பேச முடியாததில் கொஞ்சம் வருத்தம்தான்!

    ReplyDelete
    Replies
    1. வந்திங்களா சந்திப்பு நிகழ்வதே பார்த்து பேசத்தான் ஏன் பேசாம போனிங்க..

      Delete
  18. ஒரு சந்தேகமுங்க நம்ம ராஜீ அக்கா தான் மைக் எப்ப கிடைக்குன்னு காத்திருந்து விடாப்பிடியா பிடிச்சுட்டாங்க
    >>
    இதுக்காக ஒரு மாசமா கண்ணாடி முன் நின்னு பேசி பழகிட்டு வந்தேன்! என்னை மேஎடையை விடு இறங்க சொன்னால் எப்படி?!

    ReplyDelete
    Replies
    1. இப்படி வேறவா.. நடத்துங்க அக்கா உங்க பிடிவாதம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு..ஹஹஹ

      Delete
  19. பதிவர்சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது அறிந்து மகிழ்ச்சி. பகிருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சி தோழி.. படங்கள் கிடைத்தவுடன் பகிர்கிறேன்.

      Delete
  20. தங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி ....

    ReplyDelete
    Replies
    1. தங்களை சந்தித்ததில் எனக்கும் மிக்க மகிழ்ச்சிங்க.

      Delete
  21. பிரசன்ட் போட்டுக்கோங்க.

    ReplyDelete
  22. பலரையும் நேரில் சந்தித்ததில் மகிழ்ச்சி... புத்தகத்துக்கு நன்றி...

    ReplyDelete
    Replies
    1. ஸ்கூல் பையனை மாதிரி சேட்டை செய்யாமல் சமத்தாக இருந்திங்க..

      Delete
  23. நாளைக்காக ....நம்பிக்கையுடன்!

    ReplyDelete
  24. பதிவர் சந்திப்புப் பற்றி விரிவான பதிவுக்கு காத்து இருக்கிறேன் சசி.

    ReplyDelete
    Replies
    1. எழுதிட்டு இருக்கேனுங்க..

      Delete
  25. Replies
    1. வருகை பதிவு செய்தமைக்கு நன்றிங்க.

      Delete
  26. விவரமா யாரும் எழுதக் காணோமே?

    ReplyDelete
    Replies
    1. எழுதிட்டே இருக்கேனுங்க.

      Delete