Tuesday 30 July 2013

குடம் கொண்டு போற பெண்ணே...!


கொத்து மலர் பறித்து
கொண்டையிலே வைத்து
குனிந்து நிமிர்ந்து பார்த்துகிட்டு
குடம் கொண்டு போற பெண்ணே...
குளக்கரைக்கு நான் வரவா...
மனக்குறைய தான் சொல்லவா..?

நீ வகிடெத்து வாரிய
பின்னலிலே என் பாதை 
தொடங்குதடி...
கார்குழலில் கலந்த பின்னே
என்னில்...
கார்மேகக் காதல் கனவுகளடி...

மழை உனக்கு பிடித்திடுமே
மனமிருந்தால் நனைந்திட வா..

உன் நினைவென்னை துரத்துதடி
உன்னிலும் இச்சங்கதி நிகழ்ந்திடுதா..?

நீர் கொண்டு போகையிலே-உன்
நினைவையள்ளி நான் சுமந்தேன்.
அந்தோ... குடத்தோடு ஓர்
அல்லிப்பூ நடந்திடுதே
அதனழகை என் சொல்வேன்...

20 comments:

  1. //உன் நினைவென்னை துரத்துதடி
    உன்னிலும் இச்சங்கதி நிகழ்ந்திடுதா..?//

    எதையும் வெளிக்காட்டிக்கொள்ள மாட்டார்களே!

    அதுதான் பெண்மைக்கே உள்ள பெருமையாக உள்ளது. ;).

    அழகான கவிதைக்குப்பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. அழகான தமிழ் வரிகள்

      Delete
  2. நீர் கொண்டு போகையிலே-உன்
    நினைவையள்ளி நான் சுமந்தேன்.
    அந்தோ... குடத்தோடு ஓர்
    அல்லிப்பூ நடந்திடுதே
    அதனழகை என் சொல்வேன்...//

    அழகான வரிகள்.
    அருமையான கவிதை, அழகான படம்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. அழகான கிராமிய கவிதை! அருமை! பாராட்டுக்கள்!

    ReplyDelete
  4. குடத்தை எடுத்துட்டு போனவங்க தண்ணி கொண்டுவந்தாங்களா டவுட்டு...

    கிராமத்து நடை பின்னுதுங்கோ...

    ReplyDelete
  5. /// மழை உனக்கு பிடித்திடுமே
    மனமிருந்தால் நனைந்திட வா... ///

    ரசிக்க வைக்கும் கவிதை... வாழ்த்துக்கள் சகோதரி...

    ReplyDelete
  6. நீ வகிடெத்து வாரிய
    பின்னலிலே என் பாதை
    தொடங்குதடி...

    பாதையும் பயணமும் ...!

    ReplyDelete
  7. அழகான கவிதை.

    ReplyDelete
  8. குளக்கரைக்கு நான் வரவா...
    மனக்குறைய தான் சொல்லவா..?//அடப் பாவமே

    ReplyDelete
  9. குடம்கொண்டுபோற பெண்ணு எம் மனதையும் இழுத்து நிற்கிறாள்.

    ReplyDelete
  10. வெள்ளந்தியான கிராமத்து பெண்ணின் மனதை வசியப்படுத்தும் கவிதை வரிகள் இயல்பான நடையில்.. அழகாக சொல்கிறது தன் காதலை....

    வர்ணனையும்... காதலை தூதுவிட்டு... அவள் மனதிலும் அது செய்யும் மாற்றங்களையும் எதிர்ப்பார்த்து காத்திருக்கும் மனதினை சொல்லும் வரிகள் மிக அழகு சசி....

    ReplyDelete
  11. நீர் கொண்டு போகையிலே-உன்
    நினைவையள்ளி நான் சுமந்தேன்.
    அந்தோ... குடத்தோடு ஓர்
    அல்லிப்பூ நடந்திடுதே
    அதனழகை என் சொல்வேன்.//

    அருமை அருமை
    தொடர வாழ்த்துக்கள்
    (அந்தப் பெண்ணையும் கவிதையையும் )

    ReplyDelete
  12. இப்பலாம் யாரும் தண்ணிகுடம் சுமதில்லை. தண்ணி கேண் தான் :-(

    ReplyDelete
  13. கிராமத்து நடையில் நீங்கள் எழுது கவிதை எல்லாம் மிகவும் ரசனைக்குரியதாகவே இருக்கிறது . வாழ்த்துக்கள்

    ReplyDelete
  14. அழகிய கவிதை......

    தண்ணீர் குடம் கொண்டு செல்லும் பெண் படமும் அதற்கேற்ற கவிதையும் நன்று.

    ReplyDelete
  15. குடமெடுத்துப் போற பொண்ணு கவிதை வரியில் மனசைக் கொள்ளை கொண்டு போய்விட்டாள் அக்கா....
    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  16. // நீ வகிடெத்து வாரிய
    பின்னலிலே என் பாதை
    தொடங்குதடி..//

    அருமை.

    ReplyDelete
  17. அழகான வரிகள் இனிமையான கவிதை மிகவும் அருமை வாழ்த்துக்கள்

    ReplyDelete