Friday 26 July 2013

காத்திருந்த கருத்த மச்சான் !


கொட்டும் அருவி அழைக்கிறதே
குளித்திடவே மனம் விழைகிறதே

நீண்ட மூக்கு கருப்பழகன்
நெடு நேரமா காத்திருக்கான்.

கண்ணாலே படமெடுக்க
கருவிழியால் முறைச்சி நிக்கான்.

அலையோடி மனசும்
அவனை நாடி ஓடிடுதே

நெருங்க விடாது நீருந்தான்
தனக்குள்ளே இழுத்திடுதே...

நீல வானம் கூட - என்
மேனி தீண்ட நீரினில்
வண்ணமாய் நீந்திடுதே...

காத்திருந்த கருத்த மச்சான்
கனத்த பெருமூச்சோடே
காத்தாட்டம் பறந்து விட்டான்
எங்கும் கண்டாக்கா சொல்வீகளா...
காலையில் ஒரு நீண்ட மூக்கு குருவி ஒன்று பார்த்தேன் தோட்டத்தில் மறுபடி வருமென்று காத்திருக்கிறேன் காணவில்லை அதனால் எழுதியது.

44 comments:

  1. எங்கு சென்றான் உங்க மச்சான்
    இதயத்தை இங்கு விட்டு விட்டு
    கண்டாக்கா சொல்லுகிறேன்
    கவலை கொள்ளாதே
    அன்புவச்ச நெஞ்சமவன்
    அருகில்வர நாணுகிறான்
    தெம்புசொல்லி தேத்துங்கோ
    தேவையற்ற பயம்விட்டு..!

    அழகிய கவிதை வாழ்த்துக்கள் சசி

    ReplyDelete
  2. காத்தாட்டம் பறந்து விட்டான்
    எங்கும் கண்டாக்கா சொல்வீகளா..
    >>
    எனக்கு தெரியும். ஆனா, நான் சொல்ல மாட்டேன்பா! சொல்லிட்டா இப்படி அழகான!! கவிதைலாம் உன்கிட்ட இருந்து வராதே!!

    ReplyDelete
    Replies
    1. அப்படின்னா சரிக்கா.

      Delete
  3. //காலையில் ஒரு நீண்ட மூக்கு குருவி ஒன்று பார்த்தேன் தோட்டத்தில் மறுபடி வருமென்று காத்திருக்கிறேன் காணவில்லை அதனால் எழுதியது.//

    ஓஓஓஓ அப்படியா!

    “மச்சானப் பாத்தீங்களா, மலைவாழித்தோப்புக்குள்ளே”

    பாட்டுப்போல இருக்குமாக்கும்ன்னு நினைச்சுப்படிச்சேன்.

    நல்லா இருக்கு. பாராட்டுக்கள். வாழ்த்துகள். அருவி ப்டமும் ஜோராக உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் ஐயா.

      Delete
  4. குருவியா...? குற்றாலம் சென்று வந்தீர்களோ என்று நினைத்தேன்... ஹிஹி... ரசித்தேன் சகோதரி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. குற்றாலம் போனதில்லை இது வரை.

      Delete
  5. அருமை காணும் காட்சியை கவிதை ஆக்கும் திறமை எல்லோரோக்கும் வாய்ப்பதில்லை .பாராட்டுக்கள்

    ReplyDelete
  6. காலையில் கண்ட காட்சியை பேனாவில் சிறை பிடித்து சுட சுட கவிதையாக்கி விட்டீர்களே வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. சுட சுட ரசித்து கருத்திட்டமைக்கும் நன்றிங்க.

      Delete
  7. காலையிலயிருந்த தேடிக்கிட்டு இருக்கேன்...

    சீக்கிறம் கண்டுபிடிச்சிடலாம்

    ReplyDelete
    Replies
    1. கண்டாக்கா சொல்லுங்க....

      Delete
  8. குருவி பற்றிய கவிதை அருவியாக கொட்டியதோ? விரைவில் குருவி அகப்பட வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வரவே இல்லங்க திரும்ப அந்த குருவி...

      Delete
  9. நிச்சயம் கண்டா பார்சல் செய்து அனுப்பறமுங்க....

    ReplyDelete
    Replies
    1. பார்சலா ஏன் இப்படி... சசி காத்திருக்கானு மட்டும் சொல்லுங்க..

      Delete
  10. அருவி படம் போட்டு குருவிக் கவிதை.
    கருத்த மச்சான் அருவிக்கு குளிக்கப் பொயிட்டாரோ?

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க எங்க போனதோ தெரியவில்லை..

      Delete
  11. கருப்பழகரைத் தேடும் கருப்பி நீங்கதானா....கண்டால் சொல்றேன் சசி !

    ReplyDelete
    Replies
    1. சொல்லுங்க சொல்லுங்க ஆனா கருப்பினு சொல்லிடீக...

      Delete
  12. Replies
    1. இல்லங்க உண்மையா புதுசா இதுவரை பார்க்காத ஒரு நீண்ட மூக்கு குருவிய பார்த்தேன்..

      Delete
  13. படமும் அதற்கான கவிதையும்
    மிக மிக அருமை
    இதுபோன்ற அருமையான் படைப்புகள்
    வருவதற்காக அவர் எதிர் வராதே இருக்கட்டும்

    ReplyDelete
    Replies
    1. ஏன் ஐயா பார்க்க அழகா குட்டியா இருந்தது அந்த குருவி மறுபடி பார்க்கவே ஆசையா இருக்கிறேன்.

      Delete
  14. நீரோட்டமும் மனப் போராட்டமும் அருமை! நன்றி!

    ReplyDelete
  15. கருத்தமச்சானை கண்டால் வழிமேல் விழிவைத்து காத்திருக்கா சென்றுவிடு என அனுப்பிவிடுகிறோம். :)

    அழகு.

    ReplyDelete
    Replies
    1. நீங்களும் பார்த்து ரசிங்க தோழி... அழகா இருந்தது பார்க்க.

      Delete
  16. அருவியாய் பொழிந்த
    குருவிக் கவிதை அழகு ..!

    ReplyDelete
  17. Replies
    1. குருவியை பார்த்தது உண்மை ..

      Delete
  18. குருவிக் கவிதை.......

    சீக்கிரம் திரும்பி வரட்டும் அந்த கருத்த மச்சான் குருவி.

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க வரனும்...

      Delete
  19. கவிதை, அருவி இரண்டும் அழகு.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  20. This comment has been removed by the author.

    ReplyDelete
  21. உங்கள் வரிகள் அருவி-யில் குளித்த மகிழ்வை அளித்தது.

    நீரும், நீல வானமும் வரிசையில் காத்திருப்பதை கண்டதனால்

    போட்டி வேண்டாமென பெருமூச்சோடு சென்றிருப்பானோ...?

    ReplyDelete
  22. ஆடியாடி அலையாடி
    பொங்கித் தவழும்
    காவிரியாய்ப்...
    பாடிப்பாடி நீவருவாய்
    பார்த்திருக்கும் மனமிங்கே!
    வாடிவாடிப் போனகதை
    வான்முகிலே அறியாயோ?
    தேடித்தேடி உருகியதே
    சுமையின் இமை ஆகிறதே
    இதயமென்ற பூக்கூண்டு
    இதழுதிர மரிக்கிறதே!
    ஜென்மமென்ன சாபமா?
    பிரிவேயதன் ஜனனமா?
    கரைசேரா நினைவோடு
    கடந்துபோதல் விதிவலையா?
    கங்கையும் இமயமுமே
    கொண்டகாதல் பிரியாது!
    நிலவும் ஓடும் நீருமிங்கே
    சேர்தல் கனவுகளே!

    ReplyDelete
  23. நெட்டை மூக்கு குருவி ஒன்று வட்டமிட்டு சுற்றுதிங்கே நீங்கள சொன்ன அந்தக் குருவிதான் இது இதோ அனுப்பிவைக்கிறேன் ஆனால் இதேபோல் அழகான கவிதை ஒன்று எழுதவேண்டும் சரியா

    ReplyDelete