Thursday 25 July 2013

எல்லாம் என் நேரம்...!

என்னை மட்டும்
அருகில் நிறுத்திவிட்டு
நிமிடங்களை ஏன்
ஓடவிட்டிருக்கிறாய் ?
************************************

போட்டு வைத்த
நேரக்கணக்கின் 
அட்டவணைக்குள்
அடங்க மறுக்கிறது.
உன் நினைவு.
****************************************

காதல் என்ற பெயரில்
கனவில் துரத்தினாய்
இப்போது ....
கணவன் என்கிற பெயரில்
 நிஜத்தில் விரட்டுகிறாய்..
எல்லாம் பெண்களின் நேரம்...
*********************************************

நேர்த்தியாய் ஓடத்தெரியாத
நேரத்தை கட்டிக்கொண்டு
எனை ஏன் காக்கவைக்கிறாய்.
********************************************

சீக்கிரம் சீக்கிரம் என
நேரத்தை மட்டும் 
எத்தனை முறை தான் 
அழைத்து மடியில் 
அமர்த்துவாய்...
எனை புறந்தள்ளியபடி..
****************************************

நான் உன் 
சுண்டு விரலை மட்டும்
தான் பிடித்து நடக்கிறேன்
இந்த கடிகாரத்தை பார்
என்ன திமிர் 
உனை கட்டிக்கொண்டு
ஓடவும் செய்கிறது.
******************************************

மரணத்தின் விளிம்பு வரை'

சென்று வருகிறேன்
நீ என்னிடம் விடை
பெற்று செல்லும் போதெல்லாம்.


32 comments:

  1. நேரத்தை பற்றிய குறுங்கவிதைகள் அசத்தல் ...

    மரணத்தின் விளிம்பு வரை'
    சென்று வருகிறேன்
    நீ என்னிடம் விடை
    பெற்று செல்லும் போதெல்லாம்.
    //

    மிகவும் நேர்த்தியான படைப்பு அக்கா ... உணர்வுகளின் வெளிப்பாடு நச்....

    ReplyDelete
  2. தலைப்பும் அதை ஒட்டிய
    சிந்தனையிலேயே விளைந்த
    குறும்கவிதைகளும் அற்புதம்
    நானும் இப்படி வித்தியாசமாக சிந்திக்கவும்
    தரவும் பழக வேண்டும்
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. // என்னை மட்டும்
    அருகில் நிருத்திவிட்டு
    நிமிடங்களை ஏன்
    ஓடவிட்டிருக்கிறாய் ? //

    நிச்சயம் கூகுளை கேக்கனுங்க..

    ReplyDelete
  4. கடிகாரம் அருமை...

    ReplyDelete
  5. எப்படிங்க இப்படியெல்லாம்

    ReplyDelete
  6. நேரம் பற்றிய குறுங் கவிதைகள் அனைத்தும் அசத்தல் அதிலும் குறிப்பாக முதல் கவிதை

    ReplyDelete
  7. நேரக் கவிதை அருமை சசிகலா.

    ReplyDelete
  8. கவிதை மிகவும் ரஸிக்கும்படியாக உள்ளது. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    [அருகில் நிருத்திவிட்டு = அருகில் நிறுத்திவிட்டு
    சுன்டு விரலை மட்டும் = சுண்டு அல்லது சுண்டி விரலை மட்டும்
    என இருக்கலாமோ? எனத்தோன்றுகிறது]

    ReplyDelete
  9. அழகான குறுங்கவிதைகள்! அனைத்தும் ரசித்தேன்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  10. நேரம் பற்றி சிறப்பான கவிதைகள். வித்தியாசமான சிந்தனை

    ReplyDelete
  11. குறுங்கவிதைகள் அசத்தல்

    ReplyDelete
  12. நேரத்தோடு ஓட்டம்...வாழ்க்கை இதுதான் சசி !

    ReplyDelete
  13. அனைத்தும் அருமை... வாழ்த்துக்கள் சகோதரி...

    ReplyDelete
  14. இறுதி - க்கு இறுதி இல்லை சசி.

    ReplyDelete
  15. நேரத்துடன் நகரும் வாழ்க்கையினை மிகமிக அற்புதமாகப் படைத்துள்ளீர்கள் தோழி!
    ரொம்பவே ரசித்தேன். ரமணி ஐயா சொன்னதுபோல வித்தியாசமான கற்பனைகள் உங்களது.
    மனதைக் கவர்வதில் வெகு திறமைசாலிதான் நீங்கள்!

    வாழ்த்துக்கள் தோழி!

    ReplyDelete
  16. அற்புதம்கணவணுக்காககடிகாரத்தைகடிந்துகொள்ளும்கவிதை

    ReplyDelete
  17. பொன்னான நேரம் அழகு கவிதையாக.

    "நான் உன்
    சுண்டு விரலை மட்டும்
    தான் பிடித்து நடக்கிறேன்
    இந்த கடிகாரத்தை பார்
    என்ன திமிர்
    உனை கட்டிக்கொண்டு
    ஓடவும் செய்கிறது." பிடுங்கி எறிந்துவிடுங்கள். :)))

    ReplyDelete
  18. அத்தானின் அவசரம்! பித்தாகிப் போன பென்ணின் படபடப்பு! கவிதையாகிப் போனது இங்கே!

    ReplyDelete
    Replies
    1. "பென்” என்பதனை “பெண்’ என்று திருத்தி வாசிக்கவும். Phonetic தட்டச்சில் இதுபோல் அடிக்கடி நேரிடுகிறது.

      Delete

  19. நான் உன்
    சுண்டு விரலை மட்டும்
    தான் பிடித்து நடக்கிறேன்
    இந்த கடிகாரத்தை பார்
    என்ன திமிர்
    உனை கட்டிக்கொண்டு
    ஓடவும் செய்கிறது.
    >>
    கடிகாரத்தை கழட்டி வைக்கும்போது தூக்கி போட்டு உடைச்சுடு.

    ReplyDelete
  20. போட்டு வைத்த
    நேரக்கணக்கின்
    அட்டவணைக்குள்
    அடங்க மறுக்கிறது.
    உன் நினைவு.
    -----------

    எல்லாமே அருமை... மேலே சொன்ன கவிதை என்னை மிகவும் கவர்ந்தது.

    ReplyDelete

  21. வணக்கம்!

    நேரக் கவியா?உன் நெஞ்சை அழுத்துகின்ற
    பாரக் கவியா? பகருகவே! - வீரமுடன்
    பாடும் சசிகலா படைக்கும் எழுத்தெல்லாம்
    சூடும் அமுதைச் சுரந்து!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  22. அட்டவனைக்குள்ளாய் அடங்குவதில்லை நினைவுகள்,அது நினைவுகளின் வலிமை,பெருமையும் அதுதான் என நினைக்கிறேன்.

    ReplyDelete
  23. Kadikaram nirpatherkul kalam varuma kavithi padi.

    ReplyDelete
  24. மணியான கவிதைகள். மகத்தானக் கருத்துக்கள். நேரத்தின் சிந்தனையில் உதயமான நேர்த்தியான கவிக்குருத்துக்கள். பாராட்டுகள் சசிகலா.

    ReplyDelete
  25. கவிதைகளைப் படித்தால் நேரம் போவதே தெரியவில்லை!

    ReplyDelete
  26. பொன்னான நேரம்....

    உங்கள் கவிதைகளைப் படித்த நேரம்.....

    ReplyDelete
  27. நேர்த்தியாய் ஓடத்தெரியாத
    நேரத்தைப்பற்றி
    நேர்த்தியான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

    ReplyDelete
  28. bite size நயம் - அனைத்துமே.

    (கம்பியூட்டர் பத்தி எழுதிரலாம் - அழைப்புக்கு நன்றி)

    ReplyDelete
  29. குண்டுமல்லியைத் தொடுத்திருப்பது போல் அழகான கவிதைகள்.

    ReplyDelete
  30. மரணத்தின் விளிம்பு வரை'

    சென்று வருகிறேன்
    நீ என்னிடம் விடை
    பெற்று செல்லும் போதெல்லாம்.

    அழகிய கவிதை வாழ்த்துக்கள் சசி

    ReplyDelete