Tuesday 23 July 2013

முதல் கணினி அனுபவம் -தொடர் பதிவு


நான் எவ்வளவோ சொன்னேங்க... என்னைய யாரும் தொடர் பதிவுக்கு அழைச்சிடாதிங்க பிறகு வருத்தப்படுவிங்க என்று.... யாராவது கேட்டாங்களா.., இல்லையே. அதனால் வந்த விளைவே இப்பதிவு...

தலைக்கு மேல ஒரு வட்டம் சிறியதாக அப்படியே வளர்ந்து வளர்ந்து பெரியதாக வட்டங்கள் தெரியுதா... தெரியனுமே ஆமாங்க என்னுடைய ப்ளாஸ் பேக்.

எல்லா பிள்ளைகளும் பத்தாம் வகுப்பு முழு ஆண்டு தேர்வு முடிந்ததும் எவ்வளவு ஜாலியா இருப்பாங்க.. ஊருக்கு போய் வந்து ஆடி பாடிக்கிட்டு இப்படி... ஆனா எங்க வீட்ல ஒரு ஹிட்லர் இருக்காங்க (அக்கா) யாரும் போய் போட்டுக்குடுத்திடாதிங்க மக்களே.

எங்க அக்காவின் உலகம் புத்தகம் மட்டுமே .. அதனால அவங்க கத்துக்க நினைச்சதெல்லாம் என்னைய கத்துக்க வச்சாங்க... (மண்டைல ஏறனுமே) ஆமாங்க டைப்பிங் கத்துக்க விடுமுறையில் அனுப்பினாங்க அதுவும் எப்ப காலைலயே ஆறு மணிக்கெல்லாம் அங்க இருக்கனும்.. என் வீட்டில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் நடந்தா தான் வந்தவாசி தினமும் போனேங்க. அப்பவும் எனக்கு இந்த கம்புயூட்டர் பத்தியெல்லாம் ஒன்னும் தெரியாது. ஒரு வழியா தமிழ் இங்கிலீஸ் என இரண்டிலும் கால் நடையா நடக்க... கை டைப் அடிக்க உருப்படியா பாஸ் பண்ணி வீட்டிற்கு வந்தா.. 

அப்பவும் விடவில்லை என் அருமை அக்கா. தையல் கிளாஸ் போக விட்டாங்க. அதை முடிக்க பேசிக் கம்புயூட்டர் கத்துக்கனு அனுப்பினாங்க. அங்க போனா தினமும் கிளாஸ் எடுப்பாங்க நாங்க எங்க அத கவனிச்சோம் ஒரே அரட்டை.. அப்பவே கவிதை உலகத்தில் நான் தான் ராணி என்னைய சுத்தி நண்பர் கூட்டம். வாழ்த்து மடல் அது இதுன்னு எழுதிட்டு இருப்பேன்.  வாரத்தில் ஒரு நாள் தான் கம்புயூட்டர் பக்கத்தில் உட்கார வச்சி என்ன என்னமோ சொல்வாங்க பிறகு நாலு நாலு பேரா உட்கார்ந்து செய்து பார்க்க சொல்வாங்க. எதையோ செய்வோம் . அப்ப ஆசையா இருக்குங்க கம்புயூட்டர் பக்கத்திலேயே இருப்போமா என்று... நானும் கம்புயூட்டர் படிச்சேனு ஒரு சர்டிவிகேர்ட் கைல வாங்கிட்டு வந்தோம்.

அடுத்து அக்காவுக்கு திருமணம் ஆகி சென்னை வந்தாங்க. அப்பாடா இனிம நம்மை இங்க போ அங்க போனு சொல்ல யாரும் இல்லையென்ற தைரியத்தில் இருந்தா...போன நாலாவது மாசத்திலேயே அங்க என்ன செய்றிங்க தனியா நீங்க .  தம்பியும் இங்க சாப்பாட்டுக்கு கஷ்ட படுறான் நீங்க எல்லாரும் இங்கயே வந்துடுங்கனு என்னை ,அம்மா ,அப்பாவை கை கால கட்டி தூக்கிட்டு வந்து இங்க போட்டாங்க. ( ஆமாங்க எங்க ஊரை விட்டு வர மனசில்ல)

இங்க வந்தும் ஒரு டி.வி.எஸ். சோரூம்ல பில்லிங் செக்சன்ல வேலைக்கு வச்சாங்க அது முதல் தான் நமக்கும் கம்புயூட்டருக்கும் நெருக்கம் அதிகமாச்சி. என் கவிதை ஆர்வம் தான் வீட்டில் அடம் பிடித்து  கம்புயூட்டர் வாங்க வைத்தது. கேட்டதும்  கிடைத்தது. அதன் மூலம் அருமையான உறவுகளும் கிடைத்தது. 
போன வருடம் மே மாதத்திலேயே இப்படி ஒரு கவிதையும் பகிர்ந்தேன். 

மாயம் செய்தாயோ ...?

என்னில் ஏன் இந்த மாற்றம் ?
எதையோ தேடி வந்த
என்னையே திருடிக்கொண்ட
கள்வன் நீ ....!

உண்ணும் போதும் நீ
உறங்கும் போதும் நீ
எண்ணத்திலும்  நீ
எழுத்திலும் நீ ....!

கொஞ்சும் மழலைச் சிரிப்பையும்
உன்னுடனே பகிர்ந்து கொள்கிறேன் ...
என் கோபமும் -உன்
பார்வை பட்டவுடனே
பறந்து போகும் மாயம் கண்டேன் ...!

என் பசியையும் மறக்கச் செய்த
பாதகன் நீயே ஆனாய் ...
என்னில் அப்படி
என்ன மாயம் செய்தாய் ...?

எல்லாச் சடங்கிற்கும்
உறவுகள் அழைத்த போதும்
உனைப் பிரிய மனமில்லாது
மழுங்கி நிற்கிறேன் ...!

பசி நேரத்தில்
தலையில் குட்டி
ஆரோக்கியத்தை உணர்த்துகின்றாய் !
வம்பளந்த நேரமெல்லாம்
இப்போது உன் முகம் 
பார்த்தே கழிகிறது ..!

உனைக் கடந்து போகும்
நேரமெல்லாம் எனை
கண்ணடித்து அழைக்கிறாய் ..!

உண்டு உறங்கிக் கழித்த
பொழுதெல்லாம் -இன்று 
உன் அருகாமைக்காகவே ஏங்குகிறது ..!

மின்னலென என் வாழ்வில் வந்து 
மின்சாரமாய் தாக்கிய
விந்தை என்ன ..?
மின்சாரமற்ற நேரத்திலோ
உன் முகம் காணாது
சோர்ந்து போனேன் .

அவ்வளவு கருப்பா
என கோவிக்காதே ...
என்னில் வெளிச்சமே நீயென்பேன் ...!

இப்படியெல்லாம் எனைக் கவர்ந்த கள்வனை நீங்களும் பார்க்க வேண்டாமா ...?

நண்பர் தனது முதல் கணினி அனுபவத்தை தொடர் பதிவாக எழுத 
ஆகியோரை அழைக்கிறேன்.

60 comments:

  1. முதல் கணினி அனுபவம் ரசிக்கும் படியா இருக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  2. அட! பாருங்களேன், கணினிக்கும் ஒரு காதல் கவிதை.

    ReplyDelete
    Replies
    1. இது ஏற்கனவே பகிர்ந்ததுங்க.

      Delete
  3. கவிதையாக சொல்லி கலக்கீட்டிங்க...

    ReplyDelete
  4. அருமை. நானும் எழுதப் போறேன் இல்ல,

    ReplyDelete
    Replies
    1. நீங்க நல்லா எழுதுவிங்க தெரியுமே...(புது முயற்சியில்)

      Delete
  5. சசிகலா அருமையான அனுபவம்.
    கணினி காதல் கவிதை மிக அற்புதம்.

    ReplyDelete
    Replies
    1. ரசித்து கருத்திட்டமைக்கு மிக்க மகிழ்ச்சிங்க.

      Delete
  6. உங்களுக்கு கணிணி மேல வந்த காதலை அது கிட்டயே சொல்லிட்டீங்க.... உங்க மேல அதுக்கு அளவில்லா காதல் வரும்படி! ரசிக்கும் படியான உரை நடை.... வசீகரிக்கும் கவி நடை! நடக்கட்டும் நடக்கட்டும்!!!

    ReplyDelete
    Replies
    1. எனக்கு ஒரு சந்தேகமுங்க... கவி நடக்குமா ?

      Delete
    2. கவி நடக்கும் சசிகலா.

      (கவி - குரங்கு)

      Delete
  7. கணினி அனுபவமும் அது தந்த கவிதையும்
    மிக மிக அருமை,பகிர்வு மனம் கவர்ந்தது
    வாழ்த்துக்கள்குருவின் பெருமைகள் அறிய
    புளங்காகிதம் அறிந்தோம்
    நாங்களும் பந்தல்கால் அருகில் நிற்கும்
    புரந்தர கேசவலு ஞாபகத்திலிலேயே அடுத்த பதிவு வரை
    இருக்கவைத்துவிட்டீர்களே

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . நன்றிங்க ஐயா.

      Delete
  8. கணிணி அனுபவமும் கணிணி தந்த கவிதையும் சிறப்பு! எப்படியோ இருந்த உங்களை இப்படி உருவாக்கி விட்ட உங்க அக்காவுக்கு ஒரு நன்றியும் தெரிவித்து இருக்கலாமே! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. நாம எப்பவாவது அம்மாவுக்கு நன்றி சொல்லி இருக்கோமா ? என் தாயுமானவள் என் அக்கா.

      Delete
  9. அருமையானபகிர்வு.பாராட்டுக்கள்ங்சான்றிதழ்வச்சிருக்கிரீங்க.நான்முறையாபடிக்காமஎப்படிஎழுதமுடியும்

    ReplyDelete
    Replies
    1. ஏன் இப்படி .. முறையா படிக்காதவங்க தான் நிறைய தெரிந்து வைச்சிருப்பாங்க..

      Delete
  10. தங்களுக்கு ஏற்பட்ட முதல் கணினி அனுபவத்தை மிகவும் சிறியதாக ஆனால் மிகச்சிறப்பாக எழுதியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.

    கவிதையும் அழகாக அர்த்தம் உள்ளதாக [பொருள் புரியும்படி] அமைந்துள்ளது.

    பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. இந்த பதிவை எழுதுவதா வேண்டாமா என்றே இருந்தேன். முடிவில் எழுதாமல் இருந்தால் எனை தொடர் பதிவு எழுத அழைத்த அருணாவின் மனம் வருந்தும் என்பதால் ஏதோ அனுபவத்தை அப்படியே அலங்கரிக்காமல் எழுதிவிட்டேன்.
      தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க ஐயா.

      Delete
  11. கவிதையுடன் கணினி அனுபவம் அருமை... அனேகமாக நான் எழுதும் போது "நினைத்த" அனைவரும் (தொடர் பதிவு) எழுதி முடித்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்...!

    ReplyDelete
    Replies
    1. ஆமா நீங்க எதையுமே வித்தியாசமா அனைவரும் விரும்பும் படி சிறப்பாக தருவிங்க அதனால் தாமதம் ஏற்படவே செய்யும்.. எதிர்பார்ப்புடன் இருக்கிறோம்.

      Delete
  12. // மின்னலென என் வாழ்வில் வந்து
    மின்சாரமாய் தாக்கிய
    விந்தை என்ன ..?
    மின்சாரமற்ற நேரத்திலோ
    உன் முகம் காணாது
    சோர்ந்து போனேன் .//

    கற்றலில் தொடங்கிய உங்கள் முதல் கணினி அனுபவம்
    கம்ப்யூட்டரை காதலனாக்கிய கவிதை வரிகளாக முடிந்தது, நல்ல திருப்பம்.

    சகோதரி தென்றல் சசிகலா அவர்களுக்கு! முன்பு ” எனது ஊர் – தொடர் பதிவு “ எழுத அழைத்தீர்கள். உடனே ரொம்ப நாளைக்கு அப்புறம் எங்களது சொந்த ஊருக்கு (திருமழபாடி) கேமராவோடு சென்று வந்து ஒரு பதிவு எழுதினேன்.. இப்போழுது மறுபடியும் ஒரு தொடர்பதிவு! எனக்கு உங்களைப் போல நகைச்சுவையாக எழுத வராது. இருந்தாலும் எழுதுகிறேன்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. எழுதுவிங்க என்ற நம்பிக்கையின் பெயரிலேயே உங்களை அழைத்தேன். மிக்க மகிழ்ச்சியும் நன்றியுங்க.

      Delete
  13. ரசனையாய் எழுதிய தொடர்பதிவு அருமை....
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சிங்க.

      Delete
  14. இங்கேயும் கவிதையா?

    சுருக்கமா முடிச்சிட்டீங்க...

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க கவிதை என்றால் பதிவு நீளமாக இருந்திருக்கும்..

      Delete
  15. கணினி பத்தி ஒரு கவிதை எழுதி அசத்திட்டேம்மா!

    ReplyDelete
    Replies
    1. நீங்களே அசத்தல் என சொன்ன பிறகு வேறென்ன வேண்டும்.

      Delete
  16. கணினியுடன் கண்ட முதல் அனுபவம் அருமை!
    ரொம்பவே அந்நினைவுகளில் ஆழ்ந்து அவற்றை மீட்டிருக்கும் விதம் அழகு!
    அப்போதே எழுதிய கவிதையும் சிறப்பு!

    மொத்தத்தில் அருமையாக உங்கள் தோழியின் வேண்டுகோளை நீங்கள்.. நிறைவேற்றிவிட்டீர்கள்.

    வாழ்த்துக்கள் தோழி!

    ReplyDelete
    Replies
    1. அப்படியா நீங்க சொன்னா சரியாகவே இருக்கும். நன்றிங்க.

      Delete
  17. Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . நன்றிங்க ஐயா.

      Delete
  18. அழகான கவிதையுடன் பதிவு அருமை சசிகலா.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மாட்டிவிட்டுட்டு அருமையாம் அருமை.

      Delete
  19. தென்றலின் ரசிக்கவைத்த பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . நன்றிங்க .

      Delete
  20. போச்சு அப்பாதுரை சாருக்கு நான் ஸ்கெட்ச் போட்டா அவர நீங்க கூப்டுடீங்களா... :-)




    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு தெரியாதவங்களா... இன்னும் நிறைய நண்பர்கள் இருப்பாங்க சகோ.

      Delete
  21. அனுபவம் ரசிக்கும்படியா இருந்துச்சு...

    ReplyDelete

  22. வணக்கம்!

    கணிப்பொறியைத் தொட்டுக் கமழ்தென்றல் தோழி
    பணிப்பொழியை ஒக்கும் பதிவை - இணைத்துள்ளாய்!
    அக்கா அளித்த அரும்வழியால் இங்குயா்ந்து
    பக்கா கவிகளைப் பாடு!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies

    1. வணக்கம்!

      கணிப்பொறியைத் தொட்டுக் கமழ்தென்றல் தோழி
      பனிப்பொழிவை ஒக்கும் பதிவை - இணைத்துள்ளாய்!
      அக்கா அளித்த அரும்வழியால் இங்குயா்ந்து
      பக்கா கவிகளைப் பாடு!

      கவிஞா் கி. பாரதிதாசன்
      தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

      Delete
    2. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . நன்றிங்க ஐயா.

      Delete

  23. கம்பன் வீட்டு கட்டுதறியும் கவி பாடும் என்பது போல் சசி வீட்டின் கம்பியூட்டரும் கவிதை பாடும் போல இருக்கிறதே

    பகிர்வு அருமை

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க எப்படி கண்டு பிடிச்சிங்க.

      Delete
  24. கவித... கவித.... :)

    கணினி காதலை கவிதை மூலமே சொல்லிவிட்டீர்களே....

    தொடரட்டும் கணினி அனுபவங்கள் எல்லோர் பக்கத்திலும்.....

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . நன்றிங்க .

      Delete
  25. Fantastic. Blessed with a good sister. Not every one is blessed with like this.

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான் எனக்கு கிடைத்த தாய் என் சகோதரி.

      Delete
  26. தலைக்கு மேல வேலை இருக்கிறது .வலைச்சர ஆசிரியை பொறுப்பை
    சரிவர செய்து முடிக்கும் வரைத் தூக்கமில்லை ஆதலால் பின்னர்
    வருகின்றேன் .என் அன்புத் தோழியை இங்கே அறிமுகம் செய்துள்ளேன் .
    வருக வருக ..http://blogintamil.blogspot.ch/2013/07/2.html

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சி தோழி வருகிறேன்.

      Delete
  27. அழைப்பிற்கு மிக்க நன்றி சகோதரி! நான் தற்போது பணி நிமித்தமான பயணத்தில் இருக்கிறேன், நிச்சயம் எனது கருத்தை ஓரிரு தினங்களில் பகிர்வேன்.

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சிங்க அழைப்பை ஏற்று எழுதுவதாக சொன்னதற்கு.

      Delete