Thursday 18 July 2013

காகிதப் பூ..!

அழகிய கவிதை
தொகுப்பின் இறுதியில்
எழுதாத பக்கங்களாய்
நானிருக்கிறேன்..

 கவனிப்பாரற்று
ஒவ்வொரு முறை
உன் விரல் ஸ்பரிசத்திற்கு
ஏங்கிய படி...
காற்றின் அசைவில்
எழும்பி எழும்பி
உன் கவனத்தை 
ஈர்க்கும் பொருட்டு...

உன் முகம் பார்க்க
விடாமலும் சில 
நேரங்களில்...
பட்டென அறைந்து
மூடிவிட்டு போகிறாய்.

குறிப்புக்கென ஒதுக்கிய
என் பக்கத்தை..
குறிப்பாய் பார்க்க மறுக்கிறாய்.
என்றேனும் ஒரு நாள்
உன் அவசர கால
கிறுக்கலுக்காவது
உதவட்டும் என்றே
உயிர்ப்புடன் இருக்கிறேன்.
அச்சடித்த காகிதங்களுக்கு
நடுவே கசங்காது காத்திருக்கும்
காகிதப் பூவாய்.

43 comments:

  1. அனைத்து பக்கத்தையும் கவியால் நிரப்ப வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. சரியா சொல்லிட்டிங்க.

      Delete
  2. இதோ வந்துவிட்டேன் .அழகிய காகிதப் பூவை
    என் இதயத்தில் இணைத்துக் கொண்டேன் .
    இதமான வரிகள் என்றுமே இப்பூவைப் போல்
    அழகாகச் சிரிக்கட்டும் .வாழ்த்துக்கள் தோழி .

    ReplyDelete
    Replies
    1. வருக வருக தோழி...

      Delete
  3. நான் வந்து கருத்து சொல்லிட்டுதானே இருக்கேன்!! அப்புறம் ஏன் இந்த கவிதை!!??

    ReplyDelete
    Replies
    1. சரியான கேள்வி தான்.

      Delete
  4. உயிர்ப்புடன் இருக்கிறேன்.
    அச்சடித்த காகிதங்களுக்கு
    நடுவே கசங்காது காத்திருக்கும்
    காகிதப் பூவாய்./// அருமையான வரிகள் தோழி...

    ReplyDelete
  5. உயிர்ப்புடன் இருக்கிறேன்.
    அச்சடித்த காகிதங்களுக்கு
    நடுவே கசங்காது காத்திருக்கும்
    காகிதப் பூவாய்.

    மணக்கும் காகிதப்பூக்கள்..!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  6. ''...உன் அவசர கால

    கிறுக்கலுக்காவது

    உதவட்டும்...''

    Nalla vatikal.Nalvaalththu.
    Vetha-Elangathilakam.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  7. உயிர்ப்புள்ள கவிதை!

    வாழ்த்துக்கள் சசிகலா.
    (உடல்நலம் தேறிவிட்டதா? நல்லது. தொடருங்கள்.)

    ReplyDelete
    Replies
    1. நலமாக இருக்கிறேன் தோழி.

      Delete
  8. அருமை! காகிதப்பூவும் மலரட்டும்!

    ReplyDelete
  9. கவிதை அருமை.
    வாழ்த்துக்கள்... அக்கா...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க. உங்க வலைக்கு எப்படி வருவதென்று தெரியவில்லை.

      Delete
  10. காத்திருப்பு காகிதப்பூவாய் ....அருமை சகோதரி!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  11. உயிர்புடன் காகிதப்பூ.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  12. வரிகள் தோறும் உயிர்ப்பூ!வளரட்டும் உங்கள் கவிப்பூ!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க ஐயா.

      Delete
  13. உயிர்ப்பூ யாவிலும் இருப்பதில்லை உணர்வு!
    காதிதப்பூவானாலும் தரத்தவறுவதில்லை கவனயீர்ப்பு!!

    அழகிய வரிகளில் அமைத்த உணர்வு சிறப்பு!

    வாழ்த்துக்கள் தோழி!

    இப்போது நலம் எப்படி?....

    ReplyDelete
    Replies
    1. நலமாக இருக்கிறேன் தோழி. தாங்கள் நலம் கேட்டதிலேயே புது உற்சாகம் பிறந்து விட்டது.

      Delete
  14. வித்தியாசமாக ஆழமாக யோசித்து
    அருமையாகப் புனையப்பட்ட இக்கவிதை
    அதிகம் மனம் கவர்ந்தது
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  15. Replies
    1. ஐயாவின் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க ஐயா.

      Delete
  16. குறிப்புக்கென ஒதுக்கிய
    என் பக்கத்தை..
    குறிப்பாய் பார்க்க மறுக்கிறாய்.
    என்றேனும் ஒரு நாள்
    உன் அவசர கால
    கிறுக்கலுக்காவது
    உதவட்டும் என்றே
    உயிர்ப்புடன் இருக்கிறேன்.

    வரிகள் உயிர்ப்புடன் இருக்கிறது

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சிங்க.

      Delete
  17. காகிதப் பூ மணக்காது என்றார்கள்! உங்கள் காகிதப் பூ கவிதையாய் மணக்கின்றது!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

      Delete
  18. உங்கள் கவிதைப் பூ அருமை

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சிங்க.

      Delete
  19. காகிதப்பூவில் உங்கள் கவிதைப் பூ..... அருமை.

    வாழ்த்துகள்.

    ReplyDelete
  20. கவிதாயினியின் கவிதைப்புத்தகமல்லவா? கண்டுகொள்ளப்படாத பக்கங்களும் கவிபுனைகின்றனவே.... காகிதப்பூக்களிலிருந்து கவிதைகள் உருவாக வாழ்த்துக்கள் சசிகலா.

    ReplyDelete
    Replies
    1. வருகை கண்டு மகிழ்ந்தேன் மிக்க மகிழ்ச்சி தோழி.

      Delete
  21. குறிப்பு பக்கங்களில்
    குறிப்பு எழுதாமல் இருக்க
    குறிப்பிட்ட காரணம்
    குறிப்பிட முடியாமல் இருக்கலாம்

    ReplyDelete
    Replies
    1. ஒரு குறிப்பா எதாவது சொல்லியிருக்கலாம்..

      Delete
  22. உயிர்ப்புடன் இருக்கிறேன்.
    அச்சடித்த காகிதங்களுக்கு
    நடுவே கசங்காது காத்திருக்கும்
    காகிதப் பூவாய்.


    உயிர்புடன் இருக்கிறது தங்களின் கவிதையும் இதயத்தின் சலனங்களை கசக்காது அறிவித்து.

    ReplyDelete
  23. வணக்கம் சசிகலா
    உங்களைத் தொடர் பதிவிட அழைப்பு விடுத்துள்ளேன். என் அழைப்பைத் தயவுகூர்ந்து ஏற்று பதிவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete