Monday 24 June 2013

புது முயற்சி !

உனக்கும் எனக்குமான 
இடைவெளியை குறைத்துக்கொள்
என்னில் பகலிலும்
இருள் நீண்டு கொண்டே போகிறது'

மழை தீண்ட காத்திருக்கும் நிலமாய்
உறக்கம் விழித்து தாயைத் தேடும் சேயாய்
உன் அருகாமையை தேடுகிறேன்.

ஓடிக்கொண்டே இருக்கிறாய் மேகமாய்
தேடிக்கொண்டே இருக்கிறேன் நானும்
உனை மழைத்துளியாய்.

உன் வருகையை பறைசாற்றிப்போகிறது
வருடிப்போகும் தென்றலதுவும்.
என்னில் உன் இருப்பிற்கான
அடையாளத்தை பத்திரப்படுத்தும்
முயற்சியில் ஆயுத்தமாகியிருக்கிறேன்.


19 comments:

  1. புதுமுயற்சி அருமை

    ReplyDelete
  2. வந்துவிட்டேன் :) இனிதே வாழ்த்துகின்றேன் முயற்சி
    திருவினையாக்கும் . நம்பிக்கை ஊட்டும் கவிதை வரிகள்
    அருமை தோழி !

    ReplyDelete
  3. எதிர்பார்ப்புடன் கூடிய காதலியின்
    நம்பிக்கையைச் சொல்லிச் சென்றவிதம் அருமை
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. முயற்சி, நம்பிக்கை.
    வெற்றி கிட்டட்டும்
    Vetha.Elangathilakam

    ReplyDelete
  5. முயற்சி வெற்றி பெறட்டும் அக்கா

    ReplyDelete
  6. உன் இருப்பிற்கான
    அடையாளத்தை பத்திரப்படுத்தும்
    >>
    எந்த பேங்க் லாக்கர்ல?!

    ReplyDelete
  7. தேடியவர் கிடைக்க வாழ்த்துக்கள்:)))) அருமையான எதிர்பார்ப்புக்கள் கவிதை!

    ReplyDelete
  8. நம்பிக்கையுடன் வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோதரி...

    ReplyDelete
  9. அருமை.வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. முயற்சி புதிதிது உன்
    உயர்ச்சியும் பெரிது
    தளர்ச்சி வேண்டியதில்லை
    வளர்ச்சி கொள் வாகைசூடி!

    அழகிய மெல்லுணர்வுக் கவிதை தோழி!
    அசந்துபோனேன். அற்புத சொல்லாடல். ஆழ்ந்த கருத்து!
    அருமை! தொடருங்கள்...
    நல் வாழ்த்துக்கள்!..

    ReplyDelete
  11. சிறப்பான படைப்பு! வாழ்த்துக்கள்! நன்றி!

    ReplyDelete
  12. சுவைத்தோம். வெற்றிக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  13. நம்பிக்கை பலிதமாகட்டும் நல்லதே நடக்கட்டும்

    ReplyDelete
  14. புது முயற்சி.... அருமையாக இருக்கிறது...

    ReplyDelete
  15. நம்பிக்கையுடன் ஓர் காத்திருப்பு. கவிதை அருமை தோழி. வாழ்த்துகள்.

    ReplyDelete
  16. உன் வருகையை பறைசாற்றிப்போகிறது
    வருடிப்போகும் தென்றலதுவும்.
    என்னில் உன் இருப்பிற்கான
    அடையாளத்தை பத்திரப்படுத்தும்
    முயற்சியில் ஆயுத்தமாகியிருக்கிறேன்.//
    அருமையான முயற்சி.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete