Wednesday 19 June 2013

என்னுயிர் தோழிக்கு !


சூரிய சந்திரனாய்
உனை நினைத்து
தினம்தினம் எதிர்பார்த்தது
எத்தனை பெரிய பிசகு.

நீ குறிஞ்சி மலர் என்பதை
எப்போது உணரப்போகிறது மனம்
காத்து தவித்து கண்ணீர்விடுத்து
அங்காலயத்துப்போகும் மனதிடம்
எப்படி சொல்லிப் புரிய வைப்பேன்.

புத்திக்கு தெரிந்ததை
உணர்வுகளிடத்தில் சொல்லி
புரியவைக்க முடியாமல்
திண்டாடுகிறேன்.

குறிஞ்சி மலரே 
உனை தரிசிக்கும் காலம் வரை
என் உயிர் காத்திருக்குமோ ?
ஆன்மா காத்துக்கிடக்கும்
காற்றோடு கலந்திருக்கும்
புழுதியாய் புதைந்திருக்கும்
என்னால் சொல்லவியாலாததை
நீயாவாது சொல்லிச்செல் அதனிடம்.

35 comments:

  1. ''..புத்திக்கு தெரிந்ததை

    உணர்வுகளிடத்தில் சொல்லி

    புரியவைக்க முடியாமல்

    திண்டாடுகிறேன்...''
    Nalla vtikal. Nalvaalththu.
    Vetha.Elangathilakam.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  2. புரிந்திட்டால் புலனில்வேறு
    புரியாதவரை ஏக்கங்கள் நூறு...

    அழகிய ஏக்க உணர்வு மிகுந்த கவிவரிகள்!
    ரசித்தேன். வாழ்த்துக்கள் தோழி!

    த ம. 2

    ReplyDelete
    Replies
    1. புரிதல் அவசியம் தான் தோழி.

      Delete
  3. உனை நினைத்து
    தினம்தினம் எதிர்பார்த்தது
    >>
    வந்துட்டேன் சசி.., காக்க வச்சதுக்கு சாரி!

    ReplyDelete
    Replies
    1. வாங்க வாங்க. மகிழ்ச்சி சாரி எதுக்கு ?

      Delete
  4. ரசித்தேன்... வாழ்த்துக்கள் சகோதரி...

    ReplyDelete
  5. நல்லாயிருக்கு ... பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  6. அருமையான படைப்பு! //காற்றோடு கலந்திருக்கும்
    புழுதியாய் புதைந்திருக்கும்
    என்னால் சொல்லவியாலாததை
    நீயாவாது சொல்லிச்செல் அதனிடம்// ரசித்தவரிகள்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. ரசித்தமைக்கு நன்றிங்க.

      Delete
  7. இத்தனை அன்பு நிறைந்த இதயத்தை விட்டு விட்டு நான்
    எங்கம்மா போகப் போகிறேன் ?..இதோ வந்திற்றன் ! :)இனிமையானா
    கவிதையால் இதயம் தொட்டு நிற்கும் என் தோழிக்கு வாழ்த்துக்கள் .

    ReplyDelete
    Replies
    1. விரைவில் வாங்க தோழி.

      Delete
  8. அழகானதொரு கவிதை.

    " குறிஞ்சி மலரே
    உனை தரிசிக்கும் காலம் வரை
    என் உயிர் காத்திருக்குமோ ?
    ஆன்மா காத்துக்கிடக்கும்
    காற்றோடு கலந்திருக்கும்
    புழுதியாய் புதைந்திருக்கும் "

    உள்ளமதில் அனுபவித்து இரசித்தேன்.உயிர்த் தோழியை காணும் நாள் எந்நாளோ என்று காத்திருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. மிகவும் மகிழ்ந்தேன். இத்தனை தோழிகளை இணையம் கொடுத்ததில் மகிழ்ச்சி அனைவரும் வருக வருக விரைவில்.

      Delete
  9. தங்கள் முதல் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

    ReplyDelete
  10. சசிகலா.... நீ என்னை நினைத்து
    எழுதிய கவிதைக்கு ஏன் ராஜி, அம்பாளடியாள்
    தமிழ்முகில் எல்லாம் வந்து சொந்தம் கொண்டாடுகிறார்கள்?

    திஸ் இஸ் டூ மச். அவர்களிடம் சொல்லி வை சசிகலா.

    என்னுயிர் தோழியே... நீ கவலைப்படாதே.
    உடல்கள் பிரிந்திருந்தாலும் நம்
    உள்ளங்கள் ஒன்றாகத் தானே இருக்கிறது!
    அதற்கெதற்கு துர்து எல்லாம்...?


    ReplyDelete
    Replies
    1. தங்கள் பின்னூட்ட வரிகள் கண்டு மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறேன். தங்கள் காணப்போகும் நாட்களை எதிர்பார்த்து வாங்க தோழி.

      Delete
  11. Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  12. கவிதை வரிகள் நல்லாருக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  13. கவிதை விடு தூது. அப்பிடித்தானே சசி..கவிதையில எல்லாரையும் வரவழைச்சிட்டீங்க சசி.. அருமையான கவிதை.

    ReplyDelete
    Replies
    1. சரியாக சொன்னீங்க தோழி.

      Delete

  14. நீ குறிஞ்சி மலர் என்பதை
    எப்போது உணரப்போகிறது மனம்

    ஆத்மார்த்த அழகிய நட்பு ..!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete

  15. வணக்கம்!

    தமிழ்மணம் 8

    உன்னுயிர்த் தோழிக்கு இயம்பிய பா..படித்து
    என்னுயிர் ஏங்கும் இளைத்து!

    [நான் உங்கள் தோழியாகப் பிறப்பெடுக்க
    ஆசை பெருக்கெடுக்கும்]

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா
      [நான் உங்கள் தோழியாகப் பிறப்பெடுக்க
      ஆசை பெருக்கெடுக்கும்]
      எத்தனை பெரிய பாக்கியசாலி நான் மிகவும் மகிழ்ச்சிங்க ஐயா.

      Delete
  16. ஆன்மா காத்துக் கிடக்குமா? நட்புக்கான காத்திருப்புக்கு இதைவிட கனம் தரும் வரிகள் ஏது? அருமை சசி!

    ReplyDelete
    Replies
    1. சரியாக சொன்னிங்க.

      Delete
  17. குறிஞ்சி மலரே
    உனை தரிசிக்கும் காலம் வரை
    என் உயிர் காத்திருக்குமோ ?
    ஆன்மா காத்துக்கிடக்கும்//அருமை

    ReplyDelete
  18. நம்மால் சொல்ல முடியாததை அடுத்தவர்கள் சொல்லிச்செல்கையில் அதன் அர்த்தம் இன்னும் சற்றே அடர்த்தியாகவும் தூக்கலாகவும்/

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சிங்க.

      Delete