Sunday 16 June 2013

தாவும் மனது !


கைக்கு எட்டிய 
பழங்களை விடுத்து
உச்சிக்கிளையில் 
இருக்கும் செங்காய்க்காக
எம்பித் தவிக்கும் மனம்.

பூ ..பிஞ்சு என
அனைத்தும் உதிர்த்துவிட்டும்
அதனையே இலக்காகக்கொண்டு
போகும் போதும் 
வரும் போதும்
கிணற்றுத் தவளையாய்
எம்பி எம்பி குதித்தபடி....

கால சூழச்சியில்
பழுத்தே போனது
அக்காயும் மீண்டும் 
அடுத்த கிளையில்
அரும்பி நிற்கும்
அடுத்தொரு காய்க்கு
பழுப்பதற்குள் பறித்துவிட
பலாத்காரத்துடன் முயற்சித்தபடி.

16 comments:

  1. தாவும் மனது !
    மனம் ஒரு குரங்கு...!

    ReplyDelete
  2. மனம் ஒரு குரங்குன்னு சொன்னது நம்மை பார்த்துதானே சசி?!

    ReplyDelete
  3. என்றாவது ஒருநாள் எம்பிப்பி பிடித்து விடலாம் :-)

    ReplyDelete
  4. முயற்சி திருவினையாக்கும்...!

    ReplyDelete
  5. NECESSITY IS THE MOTHER OF INVENTION - இந்த ஆசைதான் புதிதாக வந்த அனைத்து கண்டுபிடிப்புகளுக்கும் காரணம் எனும் போது, கவிதை வரிகள் செங்காயைச் சுவைப்பதில் உள்ள ருசியைச் சொல்லும்

    ReplyDelete
  6. எப்பொழுதும் பழத்தைவிட செங்காய்க்கே மவுசு அதிகம் என்பதை வர்ணிக்கும் அழகிய கவிதை வரிகள்

    ReplyDelete
  7. ''..பலாத்காரத்துடன் முயற்சி!...''
    பலருக்கு இதுவெ வாழ்வாகிறது.
    சிறு கரு. ஓரு கவிதை.
    இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  8. கைக்கு எட்டிய
    பழங்களை விடுத்து
    உச்சிக்கிளையில்
    இருக்கும் செங்காய்க்காக
    எம்பித் தவிக்கும் மனம்.
    பூ ..பிஞ்சு என
    அனைத்தும் உதிர்த்துவிட்டும்
    அதனையே இலக்காகக்கொண்டு
    போகும் போதும்
    வரும் போதும்
    கிணற்றுத் தவளையாய்
    எம்பி எம்பி குதித்தபடி....

    ஒரு குடும்பத் தலைவன் தன் மனைவி
    பிள்ளைகளின் வாழ்வை மறந்து
    தவாறான இலக்கில் போகும் போது
    நிகழும் அசம்பாவிதங்களை மனதில்
    கொண்டு எழுதிய வரிகள் இவையென
    உணரத் தோன்றுகின்றது தோழி அந்தவகையில்
    வலிநிறைந்த இக் கவிதை வரிகள் அருமை !
    வாழ்த்துக்கள் தோழி .

    ReplyDelete
  9. மனம் ஒரு குரங்கு!
    நன்று

    ReplyDelete
  10. முயற்சி திருவினையாக்கும்...

    ReplyDelete
  11. மனம் ஒரு குரங்கு என்பதை அழகாய் சொன்னீர்கள்! அருமையான உதாரணம்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  12. கிடைத்ததை எடுத்து சுவைத்திடா மனம்
    படைத்திடுமோ சாதனை செய்து...

    அருமையான செய்தி சொன்னீர்கள் தோழி!
    எத்தனை முயற்சித்தாலும் எது எமக்கு கிட்டுமோ அதுமட்டுமே கிடைக்கும்.
    வாழ்த்துக்கள்!

    த ம.7

    ReplyDelete
  13. எட்டா இலக்கு எட்டும்போது எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யவியலாததாகிவிடுகிறது. அதேவேளையில் மற்றொரு இலக்கு எட்டா தூரத்தில் நிர்ணயம் செய்யப்பட்டு எதிர்பார்ப்பை ஊட்டிக்கொண்டிருக்கிறது. வாழ்க்கை இதுதான் என்று அழகாக வரைந்துகாட்டிய கவி வரிகள். பாராட்டுகள் சசி.

    ReplyDelete
  14. அருமை அருமை
    பல விஷயங்களுக்கு ஒத்துப் போகும்
    கருவை அருமையான கவியாக்கி இருக்கிறீர்கள்
    பாராட்டுக்கள்

    ReplyDelete