Friday 14 June 2013

பணமெனும் தீ !


வெட்டருவா தீட்டி கிட்டு
வேல முள்ள கட்டி கிட்டு

வீதியெங்கும் திரிஞ்சிபுட்டேன்
விலைக்கு வாங்க யாருமில்ல

உழைப்பிங்கே வேர்வையாச்சி
உணவுமிங்கே எங்களுக்கு கனவாச்சி

புள்ள குட்டி வீதியில
நிழலுக்கிங்கே மரமுமில்ல

காடு கழனியெங்கும் வீடாச்சி
களத்து மேடும் காணமபோச்சி -இந்த 

வரம் வேண்டி பிறக்கலையே
வாழ ஒரு வழி இல்லையே

குடி தண்ணியும் காசாச்சி
குளம் ஏரியெங்கும் வறண்டுபோச்சி

பட்ட படிப்பு படிச்சவனெல்லாம்
கூலி வேல பாத்திடுறான்

பட்டிக்காட்டு சனங்க எல்லாம்
பட்டினியில் சாகுதடி

பணம் பார்க்க பொழப்புமில்ல
பசிய விரட்ட வழியுமில்ல

காப்புக்காஞ்ச கையிருக்கு
கசங்கிப்போன வயறிருக்கு

ஏறிப்போன விலைவாசிய
இறக்கித்தர யாருமில்ல.



16 comments:


  1. காப்புக்காஞ்ச கையிருக்கு
    கசங்கிப்போன வயறிருக்கு

    ஏறிப்போன விலைவாசிய
    இறக்கித்தர யாருமில்ல.

    இன்றைய சமூக நிலையை அருமையா எழுதியிருக்கீங்க...

    ReplyDelete
  2. ஆரா: மணி யான கவிதை சொன்ன மனம் விதைக்கும் தென்றலது மன்பதையில் வீசும் காற்று மனசை மயக்கிடுது வாழி தென்றல்

    ReplyDelete
  3. இன்றைய உண்மை நிலைகள்... நல்விதமாக மாறட்டும்...

    ReplyDelete
  4. இன்றைய சமூக நிலையை அருமையா எழுதியிருக்கீங்க...

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  5. //பணம் பார்க்க பொழப்புமில்ல
    பசிய விரட்ட வழியுமில்ல

    காப்புக்காஞ்ச கையிருக்கு
    கசங்கிப்போன வயறிருக்கு//

    எது எப்படியிருந்தால் வறுமையைச் சித்தரிக்கும் தங்களின் கவிதை நல்லா இருக்கு.

    அதற்கு என் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  6. படத்தை பார்த்ததும் கவிதைல மனசு ஒன்றலை.., பாவம் அந்த குழந்தை

    ReplyDelete
  7. பணமெனும் தீயால
    பாழாப்போற வாழ்வுன்னு
    பாடிப்போன தென்றலே
    வாடிப்போச்சுடி என்மனசு

    பரிதவிக்கும் குழந்தைமுகம்
    பார்த்ததாலே சோறிறங்கல
    பாவப்பட்ட சென்மமின்னு
    படைச்சவனை சிறையிலடை...

    மனசை நெகிழ்வித்த கவிதை தோழி!...
    பேச்சில்லை... திறமைசாலி நீங்கள். வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. ''..ஏறிப்போன விலைவாசிய

    இறக்கித்தர யாருமில்ல...''
    நாட்டின் கோகம் நல்ல வரியானது. இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  9. பணமெனும் தீ அனைவரையும்
    வேகத்தான் வைக்கிறது.

    வாழ்த்துக்கள் சசிகலா.

    ReplyDelete
  10. இதைவிட ஏழைகளின்
    மனக் குமுறலை தெளிவாகஸ் சொல்வது
    கடினமே
    படமும் அதற்கான கவிதையும் அற்புதம்
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. படமும், பரிதாபத்திற்குரியவர்களைப் பற்றிய கவிதையும் நாட்டு நிலைமையை காட்டுகின்றன.


    ReplyDelete
  12. அருமையான கவிதை! நன்றி!

    ReplyDelete

  13. வணக்கம்

    தமிழ்மணம் 7

    வறுமை அகலாதோ? - கொல்லும்
    வறட்சி முடியாதோ?
    சிறுமை சிதையாதோ? - உலகின்
    சிந்தை தெளியாதோ?

    அழுவும் கவியடிகள் - நாட்டின்
    அவலம் உரைத்தனவே!
    உழுதும் உணவின்றி - வாடி
    உயிர்கள் மடிந்தனவே!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு



    ReplyDelete
  14. வறுமையை சாடிய வரிகள் அருமை! நன்றி!

    ReplyDelete