Monday 8 April 2013

தலை சாய்க்க மடி தேடி !



நெஞ்சோர வரப்பு வெட்டி
நீர்பாச்சிப் போன கண்ணே!

நெடுந்தூரம் போகவேணும்
கதிரதுவும் மெய்களம்காண!

காற்றாடிக்கும் வெயிலுரைக்கும்
வானமது பொய்த்து நிற்கும்!

போட்டவித துளிர்க்க வேணும்
நெற்கதிரா தளிர்க்கவேணும்!

களைவளரப் பறிக்கவேணும்
துயிலாம காக்கவேணும்!

நீர்பாச்சி நிக்க வேணும்
காக்காஅத வெரட்டவேணும்!

உரமிட்டு வளர்க்கவேணும்
நாத்து பிரிச்சி நடவும் வேணும்!

பாத்திகட்டி வைக்க வேணும்
பாதம் படாம நடக்கவேணும்!

அணியணியா அறுக்கவேணும்
மாடுபூட்டி போரடிக்கவேணும்!

பதரெல்லாம் நீக்கவும் வேணும்
களம்கொண்டு சேர்க்க வேணும்!

புத்தாடை புனைய வேண்டும்
புதுவரவை அவிக்கவேண்டும்!

பொங்கலிட்டு உண்ண வேணும்
மழலை சிரிக்க ரசிக்கவேணும்!

குடும்பமது தழைக்க வேணும்
நாடும் வீடும் செழிக்கவேணும்!

வாடியென் அத்தப் பொண்ணே
வாய்க்காலோரம் இளைப்பாற!

உழைப்பெல்லாம் உனக்காக
தலைசாய்க்க உன்மடிதாடி!

24 comments:

  1. நாட்டின் வளர்ச்சி விவசாயின் கையில்

    விவசாயின் சிறப்புகள் அருமை !

    தொடர வாழ்த்துகள்...

    ReplyDelete
  2. அணைவெள்ளம் வத்தி்போச்சி
    மீனெல்லாம் செத்துப்போச்சி
    கொக்கெல்லாம் பறந்துபோச்சி
    ஆனாலும் நம்பியே வாழ்க்கை
    ஆழ்தொளியில் புதைந்திருக்கும்
    மீன்முட்டை காத்திருக்குமாபோல்!

    ReplyDelete
  3. அப்படியே கிராமத்து காட்சியெல்லாம் கண்ணு முன்னாடி நிக்குது
    அத்தனியும் பாடுவோம்னு பாத்தாக்க......

    பட்டு ரோசா பாடினதையே கேட்கலையே...
    பாட்டு ச்த்தம் கேட்கலையா...

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
    Replies
    1. http://www.youtube.com/watch?v=iLC3SEO4QD4

      Delete
    2. உங்கள் தளத்திலும் :

      Visit : http://subbuthatha.blogspot.in/2013/04/enchanting-heart-rendering-song-by.html

      Delete

  4. குடும்பமது தழைக்க வேணும்
    நாடும் வீடும் செழிக்கவேணும்!


    செழிப்பான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  5. இனிமையான வரிகள் சகோதரி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  6. நாற்று நடும் சேற்றின் வாசம் கவிதைகளில்....

    அழகிய வரிகள்

    ReplyDelete
  7. புதுநெல்அறுத்து பொங்கலிட்டு வீடுநிறைய மகிழ்ச்சி பொங்கட்டும்.

    இனிமையான கவி.

    ReplyDelete
  8. மண் வாசனை மனதை மயக்குது ! தொடர வாழ்த்துக்கள் தோழி

    ReplyDelete
  9. நாட்டின் வளர்ச்சியே
    நிலங்களின் வளர்ச்சி....

    விவசாயியின் முன்னேற்றமே
    ஒரு நாட்டின் ஆரோக்கியமான முன்னேற்றம்...

    அழகு தமிழில்
    அத்தனையும் அழகாய் விளைந்துள்ளது...

    பயிரிட்ட சசி கலாவுக்கு
    என்னுடைய வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்....

    விளைச்சல் அத்தனையும்
    மக்களுக்காகவே வந்து சேரும் ஓர் நல்லெண்ணம்....

    தொடரட்டும் தங்களின்
    பயனுள்ள இந்த கவிப்பயிரிடும் அன்றாடபணி....

    ReplyDelete
  10. மண்வாசனை துகளாய் உள்ளதே .அருமை

    ReplyDelete
  11. குடும்பமது தழைக்க வேணும்
    நாடும் வீடும் செழிக்கவேணும்!

    நாடும், வீடு செழிக்கட்டும்.
    உறவுகளுடன் மகிழ்ச்சி பொங்க களிக்கட்டும்.

    ReplyDelete
  12. அசத்தலான அருமையான
    கிராமீயச் சொற்களைக் கொண்டே
    கட்டமைக்கப்பட்ட கவிதை
    உள்ளம் கவர்ந்தது
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  13. அழகான வயலினிலே
    அருமையா பாட்டிசைச்சு
    பொறுமையா நீங்களுந்தான்
    சொல்லிப்புட்டுபோறீக
    கேட்டவுடனே எங்களுக்கு
    மண்வாசம் வருகுதம்மா
    பாட்டிசைச்ச உங்களாலே
    மனசு நிறைஞ்சுபோச்சுதம்மா
    அழகான பாட்டாலே
    வயல்வாழ்வு சொன்னீக
    நிறைவாக உங்களைத்தான்
    நெஞ்சார வாழ்திறேன்ம்மா...

    ReplyDelete
  14. அழகான பாடலை அற்புதமாக எழுதியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.

    ReplyDelete
  15. தலை சாய்க்க மடி தேடி, உழைத்துக் களைத்த விவசாயியின் குரல் அருமை! எளிமையான வரிகளில் மனசைக் கொள்ளை கொண்டது தென்றல்!

    ReplyDelete
  16. எளிய வரிகளில் ஒரு போக விளைச்சலையும் ஒரு காதலையும் சொன்னவிதம் அழகு

    ReplyDelete
  17. அழகான கவிதை சசிகலா.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete



  18. கிராமிய மண் வாசனை ! பாடல் வரிகளில் மணக்கிறது!

    ReplyDelete
  19. ஒரு விவசாயியின் உழைப்பு உங்கள் கவிதை வரிகளில் கண் முன்னே விரிந்தது.
    அருமையான கவிதைக்கு பாராட்டுக்கள்!

    ReplyDelete

  20. வணக்கம்

    தலைசாய்க உன்மடி தாவென்று சொல்லும்
    கலைபூத்த உன்றன் கவி!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete