Wednesday 3 April 2013

பூவின் சிணுங்கல் !


பட்டு ரோசா பட்டு ரோசா
என்ன பார்க்குற...

நட்டு வச்ச நாள் முதலா -ஏன்
நாணி நிக்கிற...

முதிர்கன்னி முகமாட்டம் 
வாடி கிடக்குற..

முடிஞ்சி வச்ச பணமாட்டம்
முடங்கிப் படுக்குற...

படர இடம் போதலைனா
பதுங்கி ஒதுங்குற...

இந்த இடமும் விலையாப்போகும்
எதிர் காலத்தில...

வாழும் வரை சிரிச்சி நின்னா
வருத்தம் மிஞ்சாதே..

சிணுங்கிப் பாரு
வண்டும் கூட வணக்கம் சொல்லிடும்.

 வண்ணமாய் பூத்துக்குலுங்கு 
உன்னைப் பார்த்தே நானும் மகிழுவேன்.

26 comments:

  1. முடிவில் ஆறு வரிகளும் நமக்கும் உதவும்... வாழ்த்துக்கள்...

    /// இந்த இடமும் விலையாப்போகும்
    எதிர் காலத்தில... ///

    இப்படி தான் ஆகும் போலே... வருத்தமாக இருக்கிறது...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  2. // வாழும் வரை சிரிச்சி நின்னா
    வருத்தம் மிஞ்சாதே..// சிரிப்'பூ'வாய் மலரட்டும்..!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றி தோழி.மலரும் பூ மலரும்.

      Delete
  3. வண்ணமாய் பூத்துக்குலுங்கு
    உன்னைப் பார்த்தே நானும் மகிழுவேன்.

    சிணுங்கும் பூவுக்கு செல்லமாய்
    ஆறுதல் கூறுதல் அருமை

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க நமக்கு நாமே ஆறுதல். தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  4. இந்த இடமும் விலையாப்போகும்
    எதிர் காலத்தில...//

    இதை கேட்கும் போது மனது மிகவும் வேதனைப்படுகிறது.



    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க என்ன செய்ய இயலும் ?

      தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  5. பட்டு ரோசா பட்டு ரோசா
    என்ன பார்க்குற...

    நட்டு வச்ச நாள் முதலா -ஏன்
    நாணி நிக்கிற...

    முதிர்கன்னி முகமாட்டம்
    வாடி கிடக்குற..

    முடிஞ்சி வச்ச பணமாட்டம்
    முடங்கிப் படுக்குற...

    படர இடம் போதலைனா
    பதுங்கி ஒதுங்குற...

    இந்த இடமும் விலையாப்போகும்
    எதிர் காலத்தில...
    அருமையான சந்தங்கள் அர்த்தத்துடன் !..
    வாழ்த்துக்கள் தோழி .மிக்க நன்றி பகிர்வுக்கு

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றி தோழி.

      Delete
  6. அழகிய கிராமத்து மண்மணம் பரப்பும் சுகந்ததென்றலின் உணர்வுத்தழுவலில் மெய்மறந்தேன்...
    அருமை. வாழ்த்துக்கள் தோழி!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் நன்றி தோழி.

      Delete
  7. இந்த மாதிரியான கிராமத்து மணம் வீசும் கவிதை எழுதுவதில் நீங்கள் கில்லாடி வழக்கம் போல அருமை

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  8. எதிர்காலத்தில் எந்த இடத்தையும் நாம விட்டுவைக்க போறதில்ல...


    அழகிய வர்ணனை...
    அழகிய கவிதை...

    ReplyDelete
    Replies
    1. உண்மை தாங்க.
      தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  9. வரிகள் அனைத்தும் அருமை !

    தொடர வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  10. குழந்தைப் பாடல் போல இருந்தாலும் பெரியவர்களுக்கும் பாடமாகவே உள்ளது பாடல்.அருமை

    ReplyDelete
  11. படர இடம் போதலைனா
    பதுங்கி ஒதுங்குற...

    இந்த இடமும் விலையாப்போகும்
    எதிர் காலத்தில...//

    நிஜம் சொல்லும் வரிகள்

    ReplyDelete
  12. பாடிக்கொண்டே படித்தேன்.
    அருமையாக இருந்தது சசிகலா.

    ReplyDelete
  13. அருமை.....

    எல்லா விளை நிலங்களும் வீடுகளாகப் போனால்... :(

    ReplyDelete
  14. இந்த இடமும் விலையாப்போகும்
    எதிர் காலத்தில...

    நிஜத்தை சொல்கிறது வரிகள்

    ReplyDelete
  15. இந்த இடமும் விலையாப்போகும்
    எதிர் காலத்தில...// பாருங்க இந்த காலத்துல வீடு நிலம் காடு கரம்பு எல்லாமே விலை நிலங்கலகி போய்விட்டன நல்ல படைப்பு

    ReplyDelete
  16. இந்த இடமும் விலையாப்போகும்
    எதிர் காலத்தில...///உண்மைதான்

    ReplyDelete