Sunday 21 April 2013

நீ வாசிக்க மறந்த கவிதையாக !



 பார்த்த நாள் முதலாய்
சேமிக்க கற்றுக்கொண்டிருக்கிறேன்
 ஆமாம் சுவாசப் பையில்
உனக்கான நேசத்தை...

நீ வாசிக்க மறந்த 
கவிதையாக...
உன் பரஸ்பரம் உணராமையால்
இவள் சுவாசிக்க மறந்தவள்.

நான் சிலையாகி நின்றாலும்
அதில் உளியாக உன் அசைவிருக்கும்.

உனக்கான காவிய 
பக்கங்களில் எல்லாம்
எங்காவது ஒரு மூலையில்
முற்றுப்புள்ளியாகவாது நான் இருப்பேன்
என்ற நிம்மதியில்...
உன் வரிகளை வாசித்தபடியே

24 comments:

  1. பார்த்த நாள் முதலாய்
    சேமிக்க கற்றுக்கொண்டிருக்கிறேன்
    ஆமாம் சுவாசப் பையில்
    உனக்கான நேசத்தை...

    மனம் கவர்ந்த வரிகள் அருமை !
    வாழ்த்துக்கள் தோழி .

    ReplyDelete
  2. அருமையான கவிதை .. அழகான வரிகள்

    ReplyDelete
  3. //உனக்கான காவிய
    பக்கங்களில் எல்லாம்
    எங்காவது ஒரு மூலையில்
    முற்றுப்புள்ளியாகவாது நான் இருப்பேன்
    என்ற நிம்மதியில்...
    உன் வரிகளை வாசித்தபடியே//

    ரொம்ப ரசித்தேன் தோழி! அழகிய கவிதை. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. முதல் பத்தி மிக அருமை சசிகலா.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. அருமை... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  6. சுவாசப் பையில் உனக்கான நேசத்தை...!

    சேமித்துவைத்திருக்கும் கவிதை அருமை ..!

    ReplyDelete
  7. நான் சிலையாகி நின்றாலும்
    அதில் உளியாக உன் அசைவிருக்கும்.

    காவிய
    பக்கங்களில் எல்லாம்
    எங்காவது ஒரு மூலையில்
    முற்றுப்புள்ளியாகவாது நான் இருப்பேன்

    வரிகள் அருமை வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. நான் வாசிக்க மறக்கவில்லை! அருமையான படைப்பு! வாழ்த்துக்களும் நன்றியும்!

    ReplyDelete
  9. 'சுவாசப் பையில்
    உனக்கான நேசத்தை.... புதிய சொல்லாடல்.

    கவிதைஅருமை.

    ReplyDelete
  10. நான் சிலையாகி நின்றாலும்
    அதில் உளியாக உன் அசைவிருக்கும்.//அருமை
    நன்றாக செதுக்கியுள்ளீர்கள்

    ReplyDelete
  11. எங்காவது ஒரு மூலையில்
    முற்றுப்புள்ளியாகவாது நான் இருப்பேன்//
    மனதை தொட்ட வரிகள்

    ReplyDelete
  12. உனக்கான காவிய
    பக்கங்களில் எல்லாம்
    எங்காவது ஒரு மூலையில்
    முற்றுப்புள்ளியாகவாது நான் இருப்பேன்

    நன்று!

    ReplyDelete
  13. அழகான கவிதை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  14. மனத்தின் ஏக்கத்தை மையப்படுத்திய கவிதைக்குள்ளும் காதல் ரசிக்கிறது. பாராட்டுகள் சசிகலா.

    ReplyDelete
  15. தென்றலென்றேப் தனைப் பகர்ந்து
    புயலோடும் தினம் கையதுகோர்த்து
    வானவில்பிடித்து மாலைகோர்த்து
    வண்ணத் தமிழுக்கு அதைசூட்டி
    எண்ணத்தில் தழிழ் நெய்யூற்றி
    சிந்தையில் சீர்மிகு கவிதைபூட்டி
    கண்ணின் மணியொளியாய்
    கவிதைப்பேரொளியாய் புவி
    காலமெலாம் பாடும் பூமழையாய்
    மரணமதையுய் வெல்லும் மறையா
    கவிதைக்கரசியாய் தென்றலாய்
    உலாவரும் "சங்கர் சசிகலா"
    மண்ணில் மலர்ந்த நாளாம் "ஏப்ரல் 24"
    அவர் நலம்பெற, அவரால் தமிழ் வளம்பெற
    வாழ்த்துவோம் வாழ்கவென்றே!

    நற்தேன் தமிழ்ப் பாட்டெழுதும்
    தென்றலதும் வானம்பாடியாகி
    கண்டதுவும் கேட்டதுவும் கண்
    உண்டதுவும் நெஞ்சமுரைத்து
    கவிதை மேனி கொண்டதுவும்
    இதயத்தைத் தாலாட்ட ......
    பஞ்சாமிர்தக் கவிதைகள்
    கடலலையாய் எழும்பிட,
    கிராமத்து சீராட்டாய்
    மின்மினிகள் பூத்திடும்
    வான்கடல் விண்மீனும்
    புவிக்கடல் இயற்கையுமே
    கவிக்கடல் இவர்மொழியில்
    கலங்கரை விளக்காக....
    தரணியாழும் தமிழ்மொழிக்கு
    தங்கமாயொரு பொக்கிஷம்!
    தவிக்கும் தமிழ் பாட்டதன்
    தாகம் தீர்க்கும் கங்கையாய்!
    நங்கையிவர் நல்வரவால்
    நானிலம் சீர்படும்....
    பிறந்ததே நம்தமிழுக்காயிவர்
    வாழ்வெலாம் தாலாட்டாய்!
    இந்தியத்தாய் பெற்ற இனிய
    தமிழ்தாயின் அன்புமகள்
    பிறந்த இன்னாள் நன்னாள்
    வாழ்க இவர்தொண்டு
    வானும் புவியுமுள்ளவரை!!

    ReplyDelete
  16. அருமை.... அதுவும் கடைசி வரிகள்...

    பாராட்டுகள்.

    ReplyDelete
  17. மிகுந்த ரசனையான வரிகள்

    ReplyDelete
  18. mika mika arumai vaazhththukkal

    ReplyDelete
  19. இதயம் நனைக்கும் கவிதை வரிகள்... பாராட்டுக்கள்

    ReplyDelete