Saturday 20 April 2013

கொஞ்சம் பார்த்து சிரியேன் !



இனம் புரியாத வலி
 இதயத்தை கிழிந்தெறிந்து 
கொண்டிருக்கிறது 
என்ன கோபமாக இருக்கும் 
என் மேல் அவனுக்கு 
நினைத்து நினைத்து 
நெஞ்சடைத்ததே மிச்சம்.

பணி அழுத்தமாக இருக்குமோ ?

பாதி வயிறாக இருந்துவிட்டுப் போகிறேன்
பதவியே போனாலும் சரி
கொஞ்சம் பார்த்து சிரியேன்
என்று கூறினால் முறைப்பானோ ?

வலி பொருக்காதவனாயிற்றே
அவனுள் இருக்கும் 
என் வலி எப்படித்தான் 
சகிக்கிறானோ ?

ஏ மனமே 
அமைதியாய் இரேன்
என்றால் கேட்கவா செய்கிறது.

எந்தப் பொருளை 
தொட்டாலும் அவனே
முகம் சுளிக்கிறான்.

வாசலுக்கும் இதயத்திற்குமாய்
வம்படித்துக் கொண்டிருக்கிறது
கால்கள்...

வரட்டும்....வரட்டும்...

கோபத்தில் இரண்டு 
அடியாவது அடித்து விடு
பேசாமல் மட்டும் இருந்துவிடாதே.
என்று கூறி முடிக்குமுன்னே
வெம்பி வெடித்து விடுவேனோ ?

18 comments:

  1. ஹா... ஹா...

    நல்லாவே சிரிச்சிட்டேன்

    தலைப்பை வாசித்தவுடன் :)

    ReplyDelete
  2. அதானே...! இப்படியா செய்வது...?

    சகோதரிக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. //கோபத்தில் இரண்டு
    அடியாவது அடித்து விடு
    பேசாமல் மட்டும் இருந்துவிடாதே.
    என்று கூறி முடிக்குமுன்னே
    வெம்பி வெடித்து விடுவேனோ ?//

    உணர்ச்சிகளைப் பிரதிபலிக்கும் அழகான கவிதை. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  4. வெம்பி வெடித்து விடுவேனா இல்லை
    வெம்பி வெடித்து விடுவான் மாலை வீடு வந்ததும்..
    உண்மை நேசம் சொல்லும் அருமையான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. //வலி பொருக்காதவனாயிற்றே
    அவனுள் இருக்கும்
    என் வலி எப்படித்தான்
    சகிக்கிறானோ ?//

    ரசித்தேன்..

    ReplyDelete
  6. வாசலுக்கும் இதயத்திற்குமாய்
    வம்படித்துக் கொண்டிருக்கிறது
    கால்கள்...//

    தவிப்பு அருமை.

    ReplyDelete
  7. கோபத்தில் இரண்டு
    அடியாவது அடித்து விடு
    பேசாமல் மட்டும் இருந்துவிடாதே.

    அர்த்தமுள்ள ஆதங்கம் ...

    ReplyDelete
  8. வாசலுக்கும் இதயத்திற்குமாய்
    வம்படித்துக் கொண்டிருக்கிறது
    கால்கள்...

    அருமை தவிப்பு அழகான வரிகள்

    ReplyDelete
  9. தென்றலின் சுகம் கவிதையில் தெரிகிறது!

    ReplyDelete
  10. காரணம் அறியாமல் தவிக்கும் தவிப்பை கவிதை அழகாய் பிரதிபலித்து விட்டது.

    ReplyDelete
  11. என்ன ஒரு தவிப்பு!
    கவிதை வரிகள் எங்களையும் தவிக்க வைத்து விட்டனவே!

    ReplyDelete
  12. செல்ல கோபமா நிஜ கோபமா

    ReplyDelete
  13. அடாடா... இந்தக் கவிதையில் ஒளிந்திருக்கும் வலியையும் தவிப்பையும் என்னால் உணர முடிகிறது! எழுத்தில் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் உங்கள் தமிழுக்கு வந்தனங்கள் தென்றல்!

    ReplyDelete
  14. விழுந்தெழுந்தேன் வலிக்கவில்லை
    விடைகேட்டாய் பிரிவு வலிக்கிறது
    காயப்படுத்தாத காயம் பெருங்காயம்
    நேயம் நெருப்பாகி பிரிவது ரணமாகி
    நினைவது வடுவாகி நிரந்தரமாய்
    ரணப்படுத்தி உயிர்பறிக்கும் காயம்
    அதுகொடிது நஞ்சினுமது கொடிது!

    ReplyDelete
  15. பாதி வயிறாக இருந்துவிட்டுப் போகிறேன்
    பதவியே போனாலும் சரி//ஆதங்கம் புரிகிறது அன்பே தேடுகிறது

    ReplyDelete