Friday 19 April 2013

மனக்கதவை அடைத்து !


தினம் பூக்கும் ரோசாவே
திரும்பிப் பாரேன் ராசவ

ஒடிசலான உன் தேகம் -அதில்
ஒட்டிக்கிடக்கும் என் மோகம்.

கட்டியிழுக்கும் உன் வாசம்
கட்டாந்தரையே என் தேசம்

நீர் உறுஞ்சும் பாவையே - உன்
நினைவருந்தும் இக்காளையே

முள் உனக்கு ஆடையாச்சி -உன்
முன்னிருப்பதே என் வேலையாச்சி.

காற்றிலாடி சிரிக்கிறியே
கன நேரம் எனை பாரடியே

இதழ் விரிய அழைக்கின்றாய்
இதயம் நுழைய மறுக்கின்றாய்.

மலர் முகம் கையிலேந்தி நிற்க்கிறேனடி-ஏன்
மனக்கதவை அடைத்து போகிறாயடி.

20 comments:

  1. தினம் பூக்கும் ரோசாவே
    திரும்பிப் பாரேன் ராசவ

    ஒடிசலான உன் தேகம் -அதில்
    ஒட்டிக்கிடக்கும் என் மோகம்.

    கட்டியிழுக்கும் உன் வாசம்
    கட்டாந்தரையே என் தேசம்.......

    கட்டாந்தரையான உங்க தேசம் செழிக்கட்டும் எப்போதும்...அருமையான கவிதை

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. ரசித்தேன்... வாழ்த்துக்கள் சகோதரி...

    ReplyDelete
  3. ஆணின் வார்த்தைகள் கட்டாயம் அந்த ரோசாவை மனம் மாற வைக்கும்!

    ReplyDelete
  4. சித்திரப் பாவையோ நீ
    சிங்காரக் கடல் முத்தோ!
    சிந்தனைச் சிற்பியோ
    சிதறாத தேன் தமிழோ!
    சிலைவடிவானவளோ
    சிற்பியின் கலை வடிவோ!
    சிங்காரத்தேர் உன்ரதமோ
    சிகைமேகம் தரித்தவளோ!
    சித்திரையில் மலர்ந்தவளோ
    சிந்தையதைப் பறித்தவளோ!
    சிட்டாகப் பட்டாடையுடுத்தி
    சிறகுவிரித்துப் பறப்பாயோ!
    யாராயினும் நீ கவிதைக்கரசி
    யாதுமாயினும் நான் ரசிகன்!!

    ReplyDelete
  5. ரோஜா கவிதை வாசம் பூத்தது! அருமை! நன்றி!

    ReplyDelete
  6. மீண்டும் கிராமத்துத் தென்றல் தவழும் பாட்டு. அருமை. ரொம்ப ரசித்தேன். வாழ்த்துக்கள் தோழி!

    ReplyDelete
  7. அருமையான கவிதை..... நன்றி...

    ReplyDelete
  8. ரோஜாவை ராஜாவாக்கியது அருமை.மலரென்றால் பெண் இல்லை இனி ஆண்களையும் சொல்லலாம் நன்றிம்மா

    ReplyDelete
  9. எளிய இனிய கவிதை.

    ReplyDelete
  10. மிகவும் எளிய நடையில் அருமையான பாடல்

    மிகவும் ரஸித்த வரிகள்:

    //முள் உனக்கு ஆடையாச்சி -உன்
    முன்னிருப்பதே என் வேலையாச்சி.

    இதழ் விரிய அழைக்கின்றாய்
    இதயம் நுழைய மறுக்கின்றாய்//.

    பாராட்டுக்கள், வாழ்த்துகள், பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  11. இதழ் விரிய அழைக்கின்றாய்
    இதயம் நுழைய மறுக்கின்றாய்.

    ரோசாவின் மணம் வீசும் மனம் கொண்ட வரிகளுக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
  12. ராசாவின் மனசிலே! மனங் கவர்ந்த ரோசாவைப் பற்றி ஒரு அருமையான கவிதை!

    ReplyDelete
  13. ரோஜாவின் வாசம் கவிதையில் மயக்கியது

    ReplyDelete
  14. வரிகள் அனைத்தும் இனிமை வழக்கம்போல்


    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  15. இரசித்தேன்! நன்றி!

    ReplyDelete
  16. அருமை..வாழ்த்துக்கள்

    ReplyDelete